Wednesday, May 25, 2011

டேபிள் டென்னிஸ் கவிதைகள் 0-3

அவள்
சாதாரணமாய்
நடக்கும்போதே
முலைகள் குலுங்கும்

தாழ்முடி போட்ட
ஈரக்கூந்தல்
காட்டன் புடவையணிந்த
பிருஷ்டங்களை
முற்பகல் வரை
நனைத்துக் கொண்டிருக்கும்

பிற்பகலில்
பூனைச் சோம்பலாய்
புடவை விலகித்
தளிர் தொப்பூழ் காட்டும்

மலர்ந்த மாலையில்
முதலில் தென்படும் நட்சத்திரமாய்
முகம் ஜ்வலிக்கும்

இரவு ஆடைக்குள்
மொத்த மென்னுடலும்
சதா தளும்பிக் கொண்டிருப்பதைப்
பார்த்துக் கொண்டிருப்பதுதான்
அந்த நாளின்
மிகப் பதட்டமான தருணமாகவிருக்கும்

நள்ளிரவிற்குச் சற்று முன்பு
சன்னல்கள் அடைபடும்

எனக்காய்
விழித்திருக்கும்
கால்களற்ற
இரவின் மேசையில்
எண்ணற்றப் பந்துகள்
அசையாமல் காத்திருக்கும்

நீரிழந்த மீனாய்
பந்துகளோடு சேர்ந்து கொண்டு
மெல்லத் துடிக்க ஆரம்பிப்பேன்

2 comments:

Featured Post

King Pele : அஞ்சலி

சனிக்கிழமை மாலை பயல்கள் ப்ரஸீலின் கால்பந்தாட்ட வீரரான பெலே வின் இழப்பைக் குறித்துக் கேட்டார்கள். அவர் எனக்கு முந்தைய தலைமுறை என்பதால் அவர் வ...