Tuesday, November 10, 2009

ரெய்ன் ரெய்ன் கோ அவே!!

மூன்று நாட்களாய் தொடர்ந்து மழை பெய்வதாய்
மின்னரட்டையில்
சகோதரர்
சொன்னார்
கேட்க மகிழ்வாயிருந்தது
மழையால் கிடைத்த விடுமுறைக்கு
குதூகலித்த மகளுடன்
நனைந்தபடி வீடு திரும்பிய
தாயொருத்தியின் பேச்சில்
ஈரமிருந்தது
தொடர்பிலிருந்த பெண்கவிஞர்கள் அனைவரும்
மழையால் இன்னும்
இளகியிருந்தனர்
அவரவர்களின் சமீபத்திய காதலனோடு
மழையையும் முத்தங்களையும்
பொருத்தி
தலா பத்து கவிதைகளை
எழுதிவிட்டிருக்கிறார்கள்
ஒவ்வொன்றாய்
அரட்டைப் பெட்டியில்
விழ ஆரம்பித்ததும்
பதறி வெளிவந்து
தூங்கிப்போனேன்
அதிகாலையில் தொலைபேசிய இவள்
தொடர்ச்சியான மழைக்கு இன்னும்
இவனது
வெண்பஞ்சுடல் தயாராகவில்லையென
வருத்தம் தோய்ந்த குரலில் சொன்னாள்
கவிஞன்
மகனை மழையொன்றும் செய்யாது
என்கிற என் சமாதானங்கள்
அவளுக்குப் போதுமானதாய்
இருக்கவில்லை
படுக்கை விடுத்து
உயரமான திரைச்சீலையகற்றி
கண்ணாடிக் கதவு
வழியே
கட்டிடங்களுக்கு மத்தியில்
சிறிதாய் தென்பட்ட
வானம் என்கிற
வஸ்துவைப் பார்த்து
வாழ்வில் முதன் முறையாய்
அப்பாடலைக் கத்தினேன்
ரெய்ன் ரெய்ன் கோ அவே!!

22 comments:

பா.ராஜாராம் said...

அருமையாய் இருக்கு அய்யனார்!!

☼ வெயிலான் said...

நல்லாருக்கு அய்ஸ்!

// தொடர்பிலிருந்த பெண்கவிஞர்கள் அனைவரும் மழையால் இன்னும்
இளகியிருந்தனர் //

:)

இளவட்டம் said...

///தாயொருத்தியின் பேச்சில்
ஈரமிருந்தது///

ஈரமிக்க வரிகள் அய்யனார்.

சந்தனமுல்லை said...

:-)) மிகவும் பிடித்திருக்கிறது!

கோபிநாத் said...

அப்போ புள்ளைக்கு பாட்டு பாட ஆரம்பிச்சிட்டிங்க ;)))

நல்லது ;)

Deepa said...

:-))
முதலில் சிரிக்கவைத்து இறுதியில் நெகிழ்த்தி விட்டீர்கள்!

மகன் மழையின் தாலாட்டில் சுகமாகத் தூங்கிக் கொண்டிருப்பான். கவலைப் படாதீர்கள்!

//அவரவர்களின் சமீபத்திய காதலனோடு//

இது கொஞ்சம் ஓவர்!

அமிர்தவர்ஷினி அம்மா said...

தந்தைமை!

மண்குதிரை said...

:-) nice

☀நான் ஆதவன்☀ said...

மிக எளிமையாய் அழகான கவிதை அய்ஸ்! :)

யாத்ரா said...

:)

ரொம்ப நல்லா இருக்கு அய்யனார், ரொம்ப மென்மையா,,,,,,, உங்க தந்தை மனசு எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு :)

Ashok D said...

நல்லாயிருக்குங்க

(நடைவண்டியின் உங்கள் நச் பின்னோட்டத்திலிருந்து follow-upங்க)

ஆடுமாடு said...

நல்லாயிருக்கு. ரொம்ப பீல் பண்றீங்க போலிருக்கு!

anujanya said...

ஏஞ்சாமி, உங்க ஊரிலிருந்து விரட்டினால் பையன் இருக்கும் ஊரில் மழை நிற்குமா? என்னது? கவிதையை ரசிக்கணும் - ஆராயக் கூடாதா? சரி சரி.

ஆனாலும், தமிழ் கவிஞர் மழையை ஆங்கிலத்தில் விரட்டுவது..... ஓகே ஓகே

நல்லா இருக்கு அய்ஸ்.

அனுஜன்யா

குப்பன்.யாஹூ said...

nice poem ayyanaar.

rain rain go away

come again another day

MSK / Saravana said...

செம செம. happy fatherhood.. :))
கவிஞன் மகனை மழையொன்றும் செய்யாது.. :)

தமிழன்-கறுப்பி... said...

ஒரிஜினல்..

:)

Ayyanar Viswanath said...

நன்றி ராஜாராம்

நன்றி வெயிலான்

நன்றி இளவட்டம்

நன்றி முல்லை.

ஆமாம் கோபி :)

தீபா சும்மா பகடிதான் நன்றி :)

நன்றி அமித்து அம்மா

நன்றி மண்குதிரை

நன்றி ஆதவன்

மிக்க நன்றி யாத்ரா

நன்றி அசோக்

ஆடுமாடு, ஆமாம் :)

அனுஜன்யா நன்றி :)

Ayyanar Viswanath said...

நன்றி அருணா

நன்றி குப்பன் யாகூ

நன்றி சரவணக்குமார் :)

நன்றி தமிழன்

அருண். இரா said...

மழலைக்காக மழை விரட்டல் !! சிறப்பு..
ஆங்கில புலமையும் உண்டு போல ..
ஹி ஹி

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

அய்ஸ், கவிதை ரொம்ப நல்லா இருக்கு.

ரௌத்ரன் said...

ரொம்ப இயல்பா வந்திருக்கு அய்யனார்..ரொம்ப நல்லா இருக்கு...

நீங்க இருக்கற ஊர்ல தான் அடர் கானக புலி அய்யனாரும் இருக்கறார்..பாத்தா ரொம்ப விசாரிச்சேன்னு சொல்லுங்க :))

ச.முத்துவேல் said...

நல்லயிருக்கு அய்யனார்! என்ன நம்மள மாதிரி எழுத ஆரம்பிச்சூட்டிங்கன்னு துடுக்காக் கேட்கத்தோனுது.

Featured Post

King Pele : அஞ்சலி

சனிக்கிழமை மாலை பயல்கள் ப்ரஸீலின் கால்பந்தாட்ட வீரரான பெலே வின் இழப்பைக் குறித்துக் கேட்டார்கள். அவர் எனக்கு முந்தைய தலைமுறை என்பதால் அவர் வ...