தகிக்கும் அதிகாலையில்
விழித்தெழ வேண்டியிருக்கிறது
முப்பந்தைந்து டிகிரி உஷ்ணச் சூரியனை
ஒற்றைக் கையால் மறைத்தபடி
சிற்றுந்தை அடைவதற்குள்
நக இணுக்குகள் கூட வியர்த்துவிடுகின்றன.
செல்லுமிடமெல்லாம் விழுங்கிக் கொள்ளும்
குளிரூட்டப்பட்ட அறைகள்
சவப் பெட்டியை நினைவூட்டுகின்றன.
ஈரப்பதம் அடர்ந்த இக்காற்றில்
உன் கிசுகிசுப்புகளை கேட்பது எங்கனம்?
நினைவில்
உன் ரோஸ் நிற உதடுகள்
கனவில்
உன் வெள்ளை நிற முயல்கள்
நிகழில்
முப்பந்தைந்து டிகிரி
அதிகாலை வெய்யில்.
Subscribe to:
Post Comments (Atom)
Featured Post
King Pele : அஞ்சலி
சனிக்கிழமை மாலை பயல்கள் ப்ரஸீலின் கால்பந்தாட்ட வீரரான பெலே வின் இழப்பைக் குறித்துக் கேட்டார்கள். அவர் எனக்கு முந்தைய தலைமுறை என்பதால் அவர் வ...

-
அ றிவார்ந்த சமூகம் என கேரளத்தை அடையாளம் காட்டுவோர் உண்டு. நானும் சில கூறுகளில் கேரளத்தவரே முன்மாதிரி என்பேன். ஆனால் இன்றும் சாதியப் பெருமிதத...
-
என்னுடைய மிக விரிவான நேர்காணலை அரூ இதழ் வெளியிட்டிருக்கிறது. என் ஒட்டு மொத்த இலக்கியப் பங்களிப்பையும் இருப்பையும் கேள்விகளாகத் தொகுத்த நண்ப...
-
’லா க்டவுன்’ காலத்தை நூரி பில்கே சிலானுடன் தான் துவங்கினேன். இனி அலுவலகம் வரத் தேவையில்லை என்கிற விடுதலை உணர்வு, முன் நின்ற பூச்சி பயத்தை ...
17 comments:
பதிவர் சந்திப்பை தான் கவிதை வடிவில் வடித்திருக்கிறீகளோ என்று வந்தேன்...எதார்த்த கவிதை
இது நிகழ்காலம், எதிர்கால விடியல் 45 டிகிரியாக வாய்ப்புள்ளது...
ஓக்கே சார்! பை பை
நக இணுக்குகள் கூட வியர்த்துவிடுகின்றன]]
நிகழ்வை கண் முன்னே கொண்டு வந்து விட்டீர்கள் ...
என் நக இணுக்குகளை பார்க்கிறேன்
ஏஸி அறையில் அமர்ந்து(ம்)
வாவ் கலக்கிடீங்க,
கூடவே ஒரு வரியா விட்டுடிங்க.
ஒண்ணாம் தேதி யாச்சுனா ஊருக்கு ஒரு லட்சம் ரூபாய் டி டி அனுப்purathai
நக இணுக்குகள் கூட வியர்த்துவிடுகின்றன....
yosiththae parkka mudiyatha onru..
naga kanukkal verkuma enna???
அய்ஸ், நல்லாயிருக்கு கவிதை.
விரும்பியது நதிக்கரை நாகரிகம் / விதிக்கப்பட்டது நெரிசல்மிக்க நகரம் என்ற கவிதை நினைவுக்கு வந்தது. நிகழ்வில் இல்லாதபோது மனதில் நிகழ்கிறது மனமைதுனம் என்ற கவிதையும் :)
//கனவில்
உன் வெள்ளை நிற முயல்கள்//
அதுக்கப்புறம் தூக்கமே வந்துருக்காதே!
//கனவில்
உன் வெள்ளை நிற முயல்கள்//
எனக்கும் அடிக்கடி வருதுண்ணே!
எதாவது டாக்டருகிட்ட காட்டனுமா?
:-)
ரொம்ப நாட்கள் கழித்து கவிதை!
கனவில் ...... ம்ம், சரி சரி.
நல்லா இருக்கு அய்ஸ். ஆனாலும் உங்களின் 'தூங்கும் ஏரிகள்' போல ஒரு விறுவிறு கவிதை படிக்கணும் போல இருக்கு பாஸ். ஆவன செய்யவும் :)
அனுஜன்யா
நித்தி .. said...
நக இணுக்குகள் கூட வியர்த்துவிடுகின்றன....
yosiththae parkka mudiyatha onru..
naga kanukkal verkuma enna???
nithi
ithu atheetha velippaadu
ithellam rasikkanum ozhiya aarayakkoodathu
நினைத்தால் பயமாக இருக்கிறது கீழை ராசா,
எதுக்கு பை பை?
ஜமால் :)
குப்பன் சரிதான் :)
நித்தி மோசமான காலையை தினம் சந்திப்பதால் வந்த மிகை அது :)
மனமைதுனம் :) நன்றி சுந்தர்
எப்படி வரும் வால் :)
கலை எனக்கும் தெரில பிரபல பதிவர் குசும்பனார கேட்டா தெரியுமோ என்னவோ :)
செய்திடலாம் அனுஜன்யா
நன்றி பாலா
அன்னைக்கே கடை திறந்துயிருந்தால் சூடு கொஞ்சம் குறைஞ்சிருக்கும்ல்ல அய்ஸ் ;)))
கவிதை மிகவும் பிடித்திருக்கிறது. காட்சிகள் அப்படியே மனதில் விரிந்து இந்த இரவில் முப்பத்தைந்து டிகிரி வெயில்.
ரொம்ப நல்லா புரிஞ்ச கவிதை. நல்லாயிருக்கு.
புரியுது...,
ஆமா இங்கேயும் கடும் வெயில்தான் அடிக்குது.
ஆமாம் கோபி :)
நன்றி யாத்ரா
நன்றி முத்துவேல்
தமிழன் இங்க விட அங்க மோசமா இருக்குமே :)
கவிதை நல்லா இருக்கு தல.
Post a Comment