Thursday, May 14, 2009

ஒரு அடிமை ஏஜெண்டின் கொலைவெறித் தாக்குதல்

பேரெழுத்தாளப் பிதாமகர்களின் பக்கங்களை எட்டிப்பார்த்து ”காண்டா”கும் வழக்கத்தை சில காலமாய் நிறுத்தி வைத்திருந்தேன்.இணைய உரையாடலில் வந்த தமிழன் கறுப்பி ஒரு இணைப்பைக் கொடுத்து முந்தின நாளின் இரவை கசப்பாக்கினார்.

கிம் கி டுக் கின் ”தீவு” படத்தினைக் குறித்தான பகிர்வில் ஒரு வரி, ஒரே ஒரு வரி என்னைக் கொலைகாரனாகவும்,ஆஃப்ரிக்க கண்டத்தில் கறுப்பின மக்களை வேட்டையாடி, கை விலங்கிட்டு அமெரிக்காவுக்கு இட்டுச் சென்று விற்ற அடிமை ஏஜண்டாகவும்,ப்ரூப் ரீடராகவும்,மேதாவியாகவும்,விக்கிபீடியா ”காப்பி”யாளனாகவும் மாற்றிவிட்டிருக்கிறது.அந்தப் படு மோசமான வரி இதுதான்
நமது ”.....”imdb மற்றும் wikipedia வில் தரப்பட்ட தப்பும் தவறுமான தகவல்களை அப்படியே தனது விமர்சனமாக்கி இருக்கிறார்.
அந்த வரி தேவையற்றதெனும்படியான அனுஜன்யாவின் பகிர்வினுக்கு இப்படி பதில் தந்திருந்தேன்
அனுஜன்யா என் நோக்கம் ஜெமோவோ ”.....” அல்ல.வேறொரு கோணம்தாம் :)
பெருமதிப்பிற்குறிய சிருஷ்டிகர்த்தா எங்கேயும் போய் தேட வேண்டிய அவசியம் வந்துவிடாமலிருக்கவே imdb plot summary இணைப்பினை இப்படித் தந்திருந்தேன்
Imdb யில் இன்னொரு பிரகஸ்பதி இத்திரைப்படக் கதாநாயகி வாய்பேசமுடியதவள் என்பதாய் ஒரு விமரிசனத்தை எழுதியிருக்கிறார்.
அந்த plot summary இப்படித் தொடங்கும்
Mute Hee-Jin is working as a clerk in a fishing resort in the Korean wilderness; selling baits, food and occasionally her body to the fishing tourists.
கொரியத் திரைப்படங்கள் விமர்சகர்களால் சரியாக அணுகப்படுவதில்லை என்கிற ஆதங்கம்தான் அந்தப் பதிவின் பிரதானமாய் இருந்தது.மற்றபடி எவரின் புத்திசாலித்தனங்களையும் சந்தேகிப்பதோ அல்லது என் புத்திசாலித்தனங்களை அடுத்தவனை முட்டாளாக்கி நிரூபிப்பதோ என் நோக்கம் இல்லை.அந்த பதிவை சாதாரணமாய் படித்திருந்தாலே இந்த உணர்வைப் புரிந்து கொண்டிருக்க முடியும்.அப்படிப் புரியாமல் வேரொரு மனநிலையை அந்தப் பதிவு தந்திருக்குமெனில் அதற்காக வருந்துகிறேன்.மேலும் அவரைப் போன்றவர்கள் அந்தத் திரைப்படத்தின் கடைசிக் காட்சியை எப்படி சிலாகிக்காமல் விட்டார்கள்?மேலும் அவரின் விமர்சனம் ஹீ ஜின்னை ஒரு கொலைகாரியாக சித்தரிக்கும் அபத்தத்தைக் கூட அவர் உணரவில்லையா என்கிற பல ஆதங்கங்கள்தாம் அவரைப் பற்றிய என் ஒற்றை வரிக்கு காரணங்களாக இருந்தன.

”ஆனானப் பட்ட ஹிந்து தினசரி” என்கிற வரியைப் படித்த போது எழுந்த அதிர்ச்சியும் கசப்பும் இவரின் பிம்பங்களைத் தரைமட்டமாக்கியது.ஹிந்து வை மலம் துடைக்க கூட பயன்படுத்துவதில்லை என்கிறபடியால் இவர் அழைப்பு விடுத்திருக்கும் ப்ரூஃப் ரீடர் பணியை ஏற்க முடியாமல் போவதை மிகுந்த வருத்ததோடு பதிவு செய்கிறேன்.

நீ என்ன எப்படி கொற சொல்லலாம்? நீ எப்படி என்னோடதில தப்பு கண்டுபிடிக்கலாம்?.நான் முட்டாள்தான்யா! ஆனா நீ கொலகாரன்....காப்பி அடிக்கிறவன்!.....அறிவ அதிகாரமா பயன்படுத்துறவன்!!..... ப்ரூப் ரீடர் வேலைக்குதான் லாயக்கு... ஆனா நான் சிருஷ்டிகர்த்தா என்ன குண்டாந்தடியால அடிக்காதே!!!!.....
இந்த வரிகளை அவர் சத்தமாய் சொல்வதாய் நினைத்துப் பார்த்தேன் சிரிப்பு பீறிட்டெழுந்தது.அவருக்காக வருத்தப்படுவதைத் தவிர்த்து இந்த நல்ல மனநிலையில் என்னால் எதுவும் செய்துவிடமுடியவில்லை.

பன்முகத் தன்மை குறித்தெல்லாம் பாடமெடுத்தவர்கள் தமக்கென வரும்போது மட்டும் ஓட்டுக்குள் சுருங்குவதும் வன்மத்தை உமிழ்வதும் நம் சூழலில் புதிதில்லை என்றாலும் இவரின் உமிழ்தல்கள் இவரின் பிம்பத்தின்மீதே படிந்து போனது நிரந்தர சோகம்.

போகிற போக்கில் புழுதி வாறித் தூற்றும் வேலையை வேறு செய்து வருகிறார்.அதைப் பற்றியெல்லாம் விரிவாய் எழுத பயமாய் இருக்கிறது.பாபாவின் பூரண ஆசி பெற்ற ’ ஆ’ சாமி யை விமர்சித்தால் எங்கே நானும் மண்டையைப் போட்டு விடுவேனோ என்கிற பயம் வேறு நேற்று இரவிலிருந்து தொற்றிக் கொண்டது.இவருக்கு மேலே இருந்து படு பயங்கர பாதுகாப்புகள் வேறு வந்து கொண்டிருப்பதால் விரல்கள் நடுங்க இந்தக் கருமத்தை இதோடு நிறுத்திக் கொள்கிறேன்.

11 comments:

Sridhar V said...

//விரல்கள் நடுங்க இந்தக் கருமத்தை இதோடு நிறுத்திக் கொள்கிறேன். //

சாலச் சிறந்தது.

அதை முழுவதுமாக கடைபிடிப்பதை விட்டுவிட்டு மீண்டும் புனிதப் பிம்பமாக உருவகித்து கொண்டாட தொடங்கிவிடுவீர்களோ என்று பயமாகவும் இருக்கிறது :)

கே.என்.சிவராமன் said...

அன்பின் அய்யனார்,

இதற்கு ரியாக்ட் செய்திருக்க வேண்டிய அவசியமில்லை என்று தோன்றுகிறது.

சரி விடுங்கள். உணர்வுகளை கொட்டியாகிவிட்டதல்லவா... வாருங்கள் தம்மடிப்போம்...

எப்போது ஊருக்கு வருகிறீர்கள்? ஆசிப் அண்ணாச்சியின் கண்காணிப்பில் வாழ்க்கை எப்படி செல்கிறது? வீட்டில் அனைவரும் நலம்தானே?

தோழமையுடன்
பைத்தியக்காரன்

தமிழன்-கறுப்பி... said...

அப்ப இதுக்கு காரணம் நான்தானா போச்சுடா!

ஏன்னா அவருடைய மொழியில் பின்னூட்டம் போடுகிறவர்கள் எல்லாம்"....."மாதிரிதானே ;)

தமிழன்-கறுப்பி... said...

பைத்தியக்காரன் said...
அன்பின் அய்யனார்,

இதற்கு ரியாக்ட் செய்திருக்க வேண்டிய அவசியமில்லை என்று தோன்றுகிறது.

சரி விடுங்கள். உணர்வுகளை கொட்டியாகிவிட்டதல்லவா... வாருங்கள் தம்மடிப்போம்...


தோழமையுடன்
பைத்தியக்காரன்
\\

அந்த ஒற்றை வரிகளுக்கு அவர் அவ்வளவு நீள கதை எழுதி இருக்கும் போது இந்த பதிவொன்றும் பெரிய விசயமில்லை என்பது என் எண்ணம். சொல்லப்போனா நான் கூட அய்யனார் இந்த எதிர்வினையை செய்வார் என்று எதிர்பார்க்கவில்லை.

அனால் இது தேவையெனத்தான் படுகிறது.

MSK / Saravana said...

தல, இரண்டு நாள் முன்னாடிதான் அவர் கட்டுரையை படிச்சீங்களா?? நான் முன்னரே படிச்சேன்.. நீங்களும் படிச்சிருப்பீங்கன்னு நெனச்சேன்.. ஆனா இதுக்கு பதிவெல்லாம் எழுதுவீங்கன்னு நினைக்கல.. அடுத்த வகைத்தொகை குறிப்புகள்ல ஒரு குறிப்பா மட்டும் எதிர்வினை எழுதுவீங்கன்னு நெனச்சேன்..

சிருச்டி கர்த்தாவை விட்டு தள்ளுங்க.. நான், அந்த ஆளு ஏன் இப்படி ஆயிட்டாருன்னு நெனைச்சிகிட்டு, வேற வேலை பார்க்க போயிட்டேன்..

ஆனா ஒரே ஒரு கேள்வி மட்டும் நிக்குது..
"ஏன் தல, அந்த மனுஷன் இப்படி ஆயிட்டாரு..??"

நந்தா said...

ஃப்ரீயா விடு மாமு.

லக்கிலுக் said...

உலகப்படங்களுக்கும் நமக்கும் வெகுதூரம் என்பதால் இதுமாதிரி சர்ச்சைகளை ரசிக்க முடியவில்லை :-(

அடிமை ஏஜெண்டின் சம்பந்தப்பட்ட லிங்கினை யாராவது எனக்கு தனிமடலிலாவது அனுப்பி உதவமுடியுமா?

அதற்குப் பிறகு சுற்றி நின்று வேடிக்கை பார்ப்பது கொஞ்சம் சுவாரஸ்யமாக இருக்கும்.

வால்பையன் said...

தல
தப்பா புரிஞ்சிகிட்டிங்க உங்களுக்கு முன்னாடியே ப்ளீச்சிங்பவுடர் அதை பற்றி கிழிச்சு தொங்க போட்டதுனால எழுதியது அது!

இருங்க தேடி லிங்க் தர்றேன்!

வால்பையன் said...

இது தான் அந்த லிங்க்

குப்பன்.யாஹூ said...

நோ டென்சன்.

நேற்றுத்தான் கார்டியன் செய்தி தாளில் ஒரு மன நல மருத்துவரின் கட்டுரை படித்தேன். இந்த கால இளைஞர்களிடம் வெற்றி முகமான சிந்தனை அதிகம் இல்லாமல் இருப்பதற்கு ஒரு காரணம், அளவுக்கு அதிகமான செய்திகள், சம்பவங்கள் ஊடகங்கள், இணையங்கள் வழியாக அளிக்க படுகின்றன என்று எழுதி உள்ளார். ஒருவகையில் அது உண்மைதான் போல.

எனவே நாம் அளவுக்கு அதிகமான பதிவுஅகள், எழுத்தாளர்கள், எழுத்துக்களை படிக்க வேண்டாம். சில நேரங்களில் அறியாமை ( படியாமை ) தான் இன்பம் கூட.

இத மறக்கனும்னா, இந்திய ஆங்கில தொலைகாட்சி தேர்தல் கணிப்புக்கள் (பண கவனிபுக்கள்) காமடிய பாருங்க நண்பரே.

குப்பன்_யாஹூ

Anonymous said...

இவனுகள் திருந்தவே மாட்டானுகள்.

Featured Post

King Pele : அஞ்சலி

சனிக்கிழமை மாலை பயல்கள் ப்ரஸீலின் கால்பந்தாட்ட வீரரான பெலே வின் இழப்பைக் குறித்துக் கேட்டார்கள். அவர் எனக்கு முந்தைய தலைமுறை என்பதால் அவர் வ...