Friday, March 6, 2009

வ.வெ.தொ.அ.வெ.கு - 4 : அடைப்புக் குறிகளுக்குள் அகம்


சக மனிதர்கள் மீதிருக்கும் நம்பிக்கைகள் பொய்க்கும்போது ஏற்படும் கசப்புணர்வு தாங்க இயலாததாய் இருக்கிறது.இயல்பு நிலை தடுமாறி கோபமும் வன்மமும் மெல்ல ஆக்ரமிப்பதை உணரமுடிகிறது.எந்த ஒன்றையும் மிகை இல்லாது அணுகுவது என்னளவில் மிகக் கடினமாக இருக்கிறது.வெறுப்பையும் அன்பையும் அதன் எல்லை வரைத் தொட்டுவரும் குரூர மனதை இயல்பாய் கொண்டதினால் சிக்கல்களின் நிரந்தர இருப்பிடம் நானாகிப் போகிறேன். புன்னகையும் முறைப்பும் ஒன்றே.அன்பும் வஞ்சமும் ஒன்றே.கொண்டாடுதலும் மிதித்தலும் ஒன்றே.வெளிப்படுபவை மட்டுமே உறுதியானது, நிரந்தரமானது என்றெல்லாம் எதுவும் இருக்க முடியாது.இன்னொரு எல்லை அல்லது இன்னொரு உச்சம் தன் இருப்பை எப்போது வேண்டுமானாலும் வெளிக்காட்டலாம். எதிலும் தேங்கிடாது எப்போதைக்குமான நகர்வுகளை துரிதப்படுத்துவதே எனக்கான சாஸ்வதமாய் இருக்க முடியும்.

ஒவ்வொரு முறையும் பலமாய் அறைபட்டுத் திரும்பச் சலிப்பாய் இருக்கிறது.திரும்பத் திரும்ப ஒரே மனநிலைக்கே திரும்பி வருகிறேன்.வாழ்வே இப்படித்தான் போலிருக்கிறது. நம்பிக்கைகள்/அவ நம்பிக்கைகள்,உற்சாக மிகுதி/உற்சாகமின்மை,பொய்/மெய், நிஜம்/போலி,துரோகம்/காதல், மிகை/நிதானம், மிகவதிக அன்பு/அப்பட்டமான பொய், பயன்படுத்திக் கொள்ளல்/எல்லாவற்றையும் தரல், திருடுதல்/திருட்டுக் கொடுத்தல், பொய்பேசுதல்/உறவாடுதல்,களவாடுதல்/களவுபோதல்,நம்பிக்கையைத் துரோகித்தல்/எல்லாமுமாய் இருத்தல்,தூற்றுதல்/ கொண்டாடுதல்,குரூரமாய் பிறரது அடையாளம் அழித்தல்/பிறருக்காய் தன் அடையாளம் இழத்தல்.Fuck all…எல்லா உறவுகளும்,புன்னகைகளும், அறிமுகங்களும், கையசைப்புகளும், புருவ உயர்த்தல்களும் ஏதோ ஒன்றின் தேவைக்கான நிமித்தமாகவே நிகழ்கிறது.எந்த ஒன்றையும் மிகைத்தோ, குறைத்தோ மாய்ந்துக் கொள்ளத் தேவையில்லை.அதனதன் தேவை அதனதன் இயல்பு.

எல்லாம் விட்டு வெளி வந்தபோது என்னைக் காணவில்லை. எதுவோக்களில் தொலைந்து போயிருந்தேன்.பரிதாபமும் குற்ற உணர்ச்சியும் பொங்க என்னைத் தேடிக்கொண்டிருந்தேன்.கடைசி வரை என் சாயல்களில் ஒன்றைக் கூடத் திரும்பப் பிடிக்க இயலவில்லை. ஒரு மாயப் பிடியிலிருந்து வெளிவந்த உணர்வைப் பெற முடிந்தது.எனக்கான தளம்/வாழ்வு/இயக்கம் இதுவல்ல என்கிற சமாதானங்களோடு எல்லாவற்றையும் தூக்கி எறியப்போவதாய் கறுவிக் கொண்டேன். நான் ஒரு நகரும் பிராணி அல்லது சுயம் கரைந்த வெளி.

(இந்த சுயம் கரைந்த வெளியை எழுதும்போது என்னால் சிரிப்பை அடக்க முடியவில்லை.என் தோழி ஒருத்தி இந்த வார்த்தையைச் சொல்லிக் கிண்டலடிப்பாள்.”நீங்கலாம் சுயம் கரைந்த வெளியாச்சே.”
இப்படி திடீர் தத்துவ ஞானியாகி மேற்கண்ட மூன்று பத்திகளில் தத்துவ விசாரத்தைப் பிழிய காரணம் உங்களுக்கு வெகு சாதாரணமானதுதான். உரையாடலினி காறித் துப்பிவிட்டுப் போய்விட்டாள் அவ்வளவுதான். இது எங்களுக்குள் வழக்கமாய் நிகழும் ஒன்றுதான்.ஆனால் இந்த முறை சற்று உக்கிரமாக நிகழ்ந்துவிட்டதோ என்கிற சந்தேகம் அவள் சென்ற பிறகு எனக்குள் எழுந்தது.அவள் ஒரு சண்டைக்கோழி எதற்கெடுத்தாலும் கீச் கீச் என்பாள்.தகர டப்பாவை தார் ரோட்டில் தேய்த்தால் எழும் சப்தத்திற்கும் அவளது குரலுக்கும் பெரிய வித்தியாசம் ஒன்றுமில்லை.அவள் சென்ற பத்து நிமிடம் கழித்தும் அந்தக் குரலில் என்னைத் திட்டித் தீர்த்தது என் உள்ளத்தைக் கிழித்துக் கொண்டிருந்தது. அவள் பழைய காதலனை சற்றுக் கிண்டலடித்ததே இந்த பெரிய சண்டைக்கு காரணம்.அவளின் பழைய காதலன் பார்ப்பதற்கு தாமஸ் ஆல்வா எடிசனைப் போலிருப்பான்.விட்டால் எதையாவது கண்டுபிடித்துக் கொண்டே இருப்பானோ என்கிற பயத்தை வரவழைக்கும் அசாதாரண விஞ்ஞான முகம் அவனுக்கு.அவள் தன் பழைய காதலை ”இடர்னல் லவ்” என்றும் அவனை ”சோல் மேட்” என்றும் என்னிடம் ஒரு நாளைக்கு இரண்டு முறையாவது (மிதக்கிர போஸில் நின்றபடி) சொல்லி உயிரை எடுக்கிறாள்.இதை அவள் சொல்லும்போது என்னால் சிரிப்பை அடக்கமுடியாமல் போகிறது. நான் சத்தமாய் சிரித்துவிடுவது மட்டுமே அவளின் பெருங்கோபத்திற்கு காரணமாகிவிடுகிறது. ”இன்றோடு இப்படம் கடேசி” என சொல்லிவிட்டுப் போய்விட்டாள். நான் இப்போது துக்கமாக இருக்க வேண்டும் சும்மா வாயைக் கிளறி எதையாவது கேட்டு சிரிப்பை மூட்டாதீர்கள்! சொல்வதை மட்டும் கேளுங்கள் here it goes….)

(வலிந்து வரவழைத்துக் கொள்ளும்) விரக்தி மனநிலையை விரட்ட பாடல்கள் கேட்பது ஆசுவாசமாய் இருக்கும்.இதுபோன்ற மனநிலையில் Enrique Iglesias பாடல்களைக் கேட்பதுப் பொருத்தமானது.என்ரிக்கின் குரலில் வழியும் தவிப்பு, துடிப்பு, உச்சம் எனக்குப் பிடித்தமானது.காதலின் மிக அதிகபட்ச வேதனையை வெளித்துப்புவதாய் இருக்கும் பாடல்கள் (உருகி உருகிப் பாடுவதாய் நினைத்துக் கொண்டு பெருங்குரலில் கத்துவது) இந்த மனநிலைக்கு சரியாய் இருக்கும். சமீபமாய் தேய்த்துக்கொண்டிருப்பது இவரின் insomniac தொகுப்புதான். தலைப்பைப் போலவே உள்ளிருக்கும் பாடல்களும் நிதானமின்மையை, தூக்கமின்மையை படபடப்பை முன்னிறுத்தும் பாடல்கள். கீழ்கண்ட பாடல்களை ஒரு நாளைக்கு ஒரு முறையேனும் கேட்டுவிடுகிறேன்.எதையாவது எழுதியே தீர வேண்டும், எதையாவது செய்தே முடிக்க வேண்டும், எதையாவது, எதையாவது, எதையாவது, எனப் படபடத்துக்கொண்டே இருக்கும் மனதை/இருப்பை லேசாய் மண்டையில் தட்டி, ஓரமாய் உட்கார வைத்து விட்டு, இந்த பாடல்களை வரிசையாகவோ வரிசை மாற்றியோ கேட்டு இன்புறலாம்.

1.அனல் மேலே பனித்துளி
2.கை வீசி நடக்குர காத்தே
3.அழகாக சிரித்தது அந்த நிலவு
4.கண்ணில் பார்வை போன போதும்
5.Tired of being sorry – Enrique iglasis
6.உனக்குள் நானே உருகும் இரவில்
7.Zindagi Zindagi - Yuvaraj
8.உனக்காகத்தானே இந்த உயிருள்ளது
9.Oul Tani Eyh – Nancy Ajram
10.Somebody’s me - Enrique iglasis
12.Ishq ada hai – Ada
13.உன்னைக் கண்டேனே முதன்முறை
14.இது என்ன புது உணர்வோ மனதில் பாயுதே
15.மருதாணி விழியில் ஏன்?
16.Kaise Mujhe – Kajini
17.ஒரு காற்றில் அலையும் சிறகு
18.நீயின்றி நானில்லை என் காதல் பொய்யுமில்லை
19.நான் வரைந்து வைத்த சூரியன்
20.என் வாழ்க்கைல வந்தது மூணே மூணு லட்டர்
21.Paper Planes –M.I.A
22.பிச்சைப் பாத்திரம் ஏந்தி வந்தேன்
23.தேன் சிந்துதே வானம்
24.Sunshowers - M.I.A
25.பொன் வானம் பன்னீர் தூவுது இந்நேரம்

எங்க பாடுங்க அல்லது கத்துங்க
Somebody wants you
Somebody needs you
Somebody dreams about you
every single night
Somebody can't breath
without you, it's lonely
Somebody hopes that someday you will see
That Somebody's Me
Ohh ya

புகைப்படத்திலிருக்கும் தேவதை:மாதங்கி மாயா அருள்பிரகாசம்

22 comments:

யாத்ரா said...

// நான் இப்போது துக்கமாக இருக்க வேண்டும் சும்மா வாயைக் கிளறி எதையாவது கேட்டு சிரிப்பை மூட்டாதீர்கள்! சொல்வதை மட்டும் கேளுங்கள் here it goes….)//

//எல்லா உறவுகளும்,புன்னகைகளும், அறிமுகங்களும், கையசைப்புகளும், புருவ உயர்த்தல்களும் ஏதோ ஒன்றின் தேவைக்கான நிமித்தமாகவே நிகழ்கிறது//


நானும் இப்படி உணர்ந்திருக்கிறேன்,


//25.பொன் வானம் பன்னீர் தூவுது இந்நேரம்//

மழை காமன் காட்டில் பெய்யும் அம்மம்மா,,,,

Unknown said...

அய்யனார் நீதான் இப்படி என்றால், உன் உரையாடிலினி உன்னை விட ொரு படி மேலாக இருப்பாள் போலுள்ளது. நீ சொன்ன அனைத்தும் சரி ஆனால் சரியில்லை. வாழ்க்கை முழுவதும் தேடலாக இருந்துவிட்டால், நீ கண்டையும் தருணங்கள், அக தரிசனங்கள் உன்னை அடுத்த கட்டத்துக்கு வழிநடத்தும். சும்மா இருத்தல் என்பதுதான் சாத்தியமே அற்றது. நினைத்துப் பார் அய்யனார் ஒரு நொடியேனும் சிந்திக்காமல் இருக்க ஏலுமா நம்மால்? வாழ்க்கை எதற்காகவும் இல்லை உரையாடிலினியின் காதலனே, அது வாழ்வதற்காக மட்டுமே, ஒவ்வொரு நொடியும் திகட்ட திகட்ட, இக்கணம் என்பது மெய்க்கணம் என்பது ஓஷோ படித்த உனக்கு தெரியாததா? நல்ல பதிவு அய்யனார், உன் அலைக்கழிப்பிற்கு சீக்கிரம் விடைகொடுத்துவிடு, உரையாடிலினி என்ன கதையாடிலினி வருவாள். அவள் வரவிட்டால் மழையாடிலினி..என்ன அய்யனார் சரிதானே?

தமிழன்-கறுப்பி... said...

என்ன தல பயமுறுத்துறிங்க...

இந்த படபடக்கிற அலைக்கழிப்புகளை என்ன செய்யலாம் அண்ணன்..

தமிழன்-கறுப்பி... said...

இங்கே இருக்கிற தமிழ் பாடல்கள் அனேகம் என்னிடமும் இருக்கிறது .

தமிழன்-கறுப்பி... said...

உங்கள் பக்கம் தரவிறங்கிக்கொண்டிருக்கையில் சட்டென்று படத்தை (மாயாவை) பார்க்கையில் உரையாடலினியோ என்கிற ஒரு எண்ணம் வந்து போனது அண்ணன் அப்புறம் இது தெரிந்த முகமாய் இருக்கிறதென்று நிதானமாய் பார்க்கையில் அது மாயா...

Anonymous said...

Didn't you hear those songs before writing this?

KARTHIK said...

// உரையாடலினி காறித் துப்பிவிட்டுப் போய்விட்டாள் அவ்வளவுதான்.//

// உன் அலைக்கழிப்பிற்கு சீக்கிரம் விடைகொடுத்துவிடு, உரையாடிலினி என்ன கதையாடிலினி வருவாள். அவள் வரவிட்டால் மழையாடிலினி..//

உமா சொன்னமாதிரி அவ போனாப்போர விடுங்க......

இராம்/Raam said...

கலக்கல்.... :) =D> =D> =D>

வால்பையன் said...

//ஒவ்வொரு முறையும் பலமாய் அறைபட்டுத் திரும்பச் சலிப்பாய் இருக்கிறது.திரும்பத் திரும்ப ஒரே மனநிலைக்கே திரும்பி வருகிறேன்.//

இப்போ தான் கல்யாணம் ஆன மாதிரி இருந்தது, அதுகுள்ள இது வரைக்கும் போயாச்சா!
எதுக்கும் ஹெல்மெட் ஒண்ணு வாங்கி வச்சிக்கோங்க தல!
அடுத்து பூரிகட்டை தான்

அருண்மொழிவர்மன் said...

//ஒரு சூனியத்தில் அலையும் சிந்தனையும், தொடர்ச்சியாக அலைக்கழிக்கும் தனிமையையும் அடிக்கடி அனுபவித்த தருணங்கள் எனக்கும் உண்டு. நல்ல பகிர்தல்

ஆதவா said...

Enrique Iglesias அருமையான பாடகர். அவரது Escape லிருந்து இன்னும் எஸ்கேப் ஆகமுடியாமல் இருக்கிறேன்.. கொஞ்சம் உருகி பாடுவார்... அவரது பாடல்களில் பெண்கள் இல்லாமல் இருக்கமுடியாது!! இப்படி நிறைய உண்டு...

Dido, வுடையதையும் கேட்டுப் பாருங்கள். Thank you உங்களுக்குப் பிடிக்கலாம். Life for rent, போன்றவை இன்னும் நல்லா இருக்கும்..

சமீப ஆல்பத்தில் Lets do things what we do எனும் பாடல் இந்திய பெண் டாக்ஸி ட்ரைவரின் ஒருநாள் வாழ்வை அழகாக பாட்டில் சொல்லியிருப்பார்..

ஆங்கிலப்பாடல் ஒரு கடலுங்க..... முத்துக்கள் ஏராளம்... தேடி எடுக்க நிறைய உண்டு!!!

Anonymous said...

தங்கள் பதிவை www.newspaanai.com இல் சேர்த்து பலருடன் பகிர்ந்து கொள்ளுங்கள். www.newspaanai.com தமிழ் சோசியல் பூக்மர்கிங் சைட் தங்கள் பதிவில் newspaanai பட்டனை சேர்த்து பதிவுகளை www.newspaanai.com ல் எளிதாக சேர்க்கலாம். மேலும் விபரங்களுக்கு கீஷே உள்ள லிங்க்கை கிளிக் செய்யவும். http://www.newspaanai.com/easylink.php நன்றி.

கோபிநாத் said...

அய்ஸ் பதிவை படிக்கும் போது சென்னை மொழில் ஒன்னு சொல்ல தோணுது...

உட்டலாக்கடி ஆயா வுழுந்து எழுந்து வாய்யா! ;)

MSK / Saravana said...

//சக மனிதர்கள் மீதிருக்கும் நம்பிக்கைகள் பொய்க்கும்போது ஏற்படும் கசப்புணர்வு தாங்க இயலாததாய் இருக்கிறது.இயல்பு நிலை தடுமாறி கோபமும் வன்மமும் மெல்ல ஆக்ரமிப்பதை உணரமுடிகிறது.எந்த ஒன்றையும் மிகை இல்லாது அணுகுவது என்னளவில் மிகக் கடினமாக இருக்கிறது.வெறுப்பையும் அன்பையும் அதன் எல்லை வரைத் தொட்டுவரும் குரூர மனதை இயல்பாய் கொண்டதினால் சிக்கல்களின் நிரந்தர இருப்பிடம் நானாகிப் போகிறேன்.//

இதுதான் தல, என் பிரச்சனையும்...

MSK / Saravana said...

சித்திரம் பேசுதடி //14.இது என்ன புது உணர்வோ மனதில் பாயுதே//??

அட இந்த பாடல் உங்களுக்கு பிடிக்குமா.. எனக்கு மிகவும் பிடித்த பாடல்..

பொதுவாக என் ரிங் டோன் கூட இந்த பாடல் தான்.

MSK / Saravana said...

அப்பறம் பதிவை பத்தி..

"அட விடுங்க பாஸு.. இவங்க இப்படிதான்.. அடிச்சிக்கிட்டே இருப்பாங்க.. நாம வாங்காத அடியா.."

ரௌத்ரன் said...

//பூனைகள் எப்போதும் இரத்தம் சிந்துவதில்லை.அவை சாதுர்யமானவை. லாவகமானவை. மென்மையானவை. கவர்ச்சியானவை.பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் மிகவும் பிடித்தவை..//

இதுவும் நீங்க எழுதுனதுதான்..

:)

Enrique எறக்கிட்டேன்..நல்லாருக்கு...

ச.முத்துவேல் said...

/தகர டப்பாவை தார் ரோட்டில் தேய்த்தால் எழும் சப்தத்திற்கும் /

ஊர் ஞாபகம் வந்துடிச்சு...

தமிழ்நதி said...

உங்களுக்கு நேரம் இருக்கும்போது நீங்கள் குறிப்பிட்டிருக்கும் தமிழ்ப்பாடல்கள் எந்தெந்த படங்களில் இடம்பெற்றவை என்பதைத் தனிமடலிட முடியுமா?

மருதாணி தெரியும், பிறகு அனல் மேலே பனித்துளியும் தெரியும். ம்...உன்னைக் கண்டேனே முதல்முறை ஓகே. பிச்சைப் பாத்திரம், தேன் சிந்துதே வானம், எனக்குள் நானே உருகும், பொன்வானம் பன்னீர் சிந்துதே இவ்வளவும் தெரியும். நேரம் இருக்கும்போது மற்றதெல்லாம் எந்தப்படம் என்று... தெரியும் கடுப்பா இருக்கும். நான் என்ன பண்ண? நானும் பாட்டுக் கேக்கணுமில்லையா:)

Ayyanar Viswanath said...

நன்றி யாத்ரா..

உமா சக்தி அல்லது தமிழின் சார்லஸ் ப்யூக்கோவெஸ்கி ஆறுதலுக்கு நன்றிங்கோ :)

தமிழன் நானும் உரையாடலினி முகச் சாயல்களின் முனைப்போடுதான் மாயாவ பதிவிட்டிருக்கேன்..இந்த சாயல் இருந்தால் மகிழ்ந்து போவேன் :)

கார்த்திக், ராம், வால்பையன், அருண் மிக்க நன்றி..

Ayyanar Viswanath said...

பகிர்வுகளுக்கு நன்றி ஆதவன்..

கோபி புனைவுக்கு உட்டாலக்கடி வார்த்தையும் நல்லாதான் இருக்கு பயன்படுத்திக்கிரேன் நன்றி :)

MSK
நன்றி :)

ரெளத்ரன் அப்படியே eminem தேடி பிடிங்க அதும் நல்லாருக்கும்..

ஆமாம் முத்துவேல் நம்ம ஊர் பக்கம் இத அடிக்கடி பயன்பாட்டில இருக்க சொல்தான்..

தமிழ்நதி தமிழ்பாடல்களுக்கு மட்டும்தான் படப் பெயர் சொல்லல இதோ
2.நந்தலாலா
14.சித்திரம் பேசுதடி
17.நான் கடவுள்
18.வாரணம் ஆயிரம்
19.ஜெயங்கொண்டான்
20.கற்றது தமிழ்

மணல்வீடு said...

vanakkam ayyanar
unga padaippugal manasukku romba nerrukkama irrukkuthu.aana bova pathina unga parvai oru thalai pachamanathu.
appammottu perumaya porranthavangita sollrappala.
hari.

Featured Post

King Pele : அஞ்சலி

சனிக்கிழமை மாலை பயல்கள் ப்ரஸீலின் கால்பந்தாட்ட வீரரான பெலே வின் இழப்பைக் குறித்துக் கேட்டார்கள். அவர் எனக்கு முந்தைய தலைமுறை என்பதால் அவர் வ...