Friday, October 10, 2008

கனவுபவர்களின் கலகம் - last tango in paris & The DreamersBernardo Bertolucci யின் last tango in paris ஏற்படுத்திய அதிர்வுகள் வன்மமானது.dreamers ஐ முதலில் பார்த்திருந்தால் இன்னமும் மிகப்பெரும் அதிர்வுக்குத் தள்ளப்பட்டிருக்கலாம் the last emperor bertolucci மட்டுமே எனக்கு அறிமுகமாகியிருந்தமையால் last tango bertolucci மிகப்பெரும் அதிர்ச்சியளித்தார். dreamers ஐ சமீபத்தில்தான் பார்க்க நேரிட்டது.முன்முடிவுகள் இருந்தமையால் நேரிடையான அதிர்ச்சிகளின் பங்கு சற்றுக் குறைவாகத்தானிருந்தது.last tango in paris இன் Maria Schneider ரும் Marlon Brando வும் பெரும்பாலான காட்சிகளில் ஆடைகள் அணிருந்திருப்பதில்லை.மிக வன்மமான புணர்வுகள் திரைப்படம் முழுக்க வந்த வண்ணமிருக்கும்.எனினும் அத்திரைப்படம் மிகப்பெரும் கிளர்வையோ அல்லது தூண்டுதலையோ ஏற்படுத்தியிருக்கவில்லை.இன்னபிற போர்னோக்களுக்கும் bertolucci முன் வைக்கும் அரசியல்பூர்வமான உடல்மொழிக்குமான வித்தியாசங்களை முதலிரண்டு காட்சிகளிலேயே புரிந்து கொள்ளலாம்.இத்திரைப்படத்தில் ஒரு காட்சி, தனது அடையாளங்களை அழிக்க விரும்பும் brando தனது பெயரை முதலில் அழிக்கிறான். தன்னை பெயரிட்டு கூப்பிடுகையில் பெருங்கோபத்தையும்,அசூசையுணர்வைம்,மிருகத்தனத்தையும் ஒரே நேரத்தில் பெறுகிறான்."என்னை எவ்வித அடையாளத்திற்கும் உட்படுத்தாமால் ஏற்றுக்கொள்" என தன் காதலியிடம் சொல்லுகிறான். அவள் எப்படி அழைக்கவென வினவுகையில் பெருங்குரலெடுத்து கத்துகிறான். "ப்ப்ப்ப்ஓஓஓஓ என என்னை அழை, க்க்க்கோஓஓஓஒ வென நான் உன்னை அழைக்கிறேன்.அடையாளங்கள் ஆபத்தானவை" எனச் சொல்லி சிரிக்கும் காட்சி அரசியல் கூருணர்வு அல்லது சித்தாந்த புரிதல்களின் உச்சமாய் வெளிப்பட்டிருக்கும்.


The dreamers திரைப்படம் மூன்று cinema freak களின் உலகத்தைப் பேசுகிறது.இதில் தியோவும் இசபெல்லாவும் இரட்டையர்கள்.french படிக்க france வரும் அமெரிக்கனான Mathew, இவர்களின் ரசனைக்கு ஒத்துப்போகவே நெருக்கமாகிறான்.godart, Robert Bresson,chaplin என மூவருக்குமான புள்ளிகள் ஒன்றே.godart ன் band of outsiders திரைப்படத்தில் வரும் ஓடிக்கடக்கும் சாதனையை முறியடிக்கும் காட்சியிலிருந்து திரைப்படம் அடுத்த தளத்திற்கு நகர்கிறது.தியோவும் இசபெல்லாவும் ஒரே படுக்கையிலிருப்பதை பார்க்கும் mathew முதலில் அதிர்ச்சியடைகிறான்.பின்பு குளியலைறையில் உடல் பற்றிய எவ்வித பிரக்ஞையும் இல்லாமல் இருவரும் புழங்குவது அவனையும் அவர்களின் உலகத்தில் நுழைய ஏதுவாய் இருக்கிறது. ஒரு திரைப்படத்தின் பெயரை கண்டு பிடிக்க முடியாமல் தோற்கும் தியோவை மண்டியிட்டு சுயமாய் இன்பிக்குமாறு தண்டிக்கிறாள் இசபெல்லா.இன்னொரு திரைப்பட கேள்விக்கு தவறாய் பதில் சொல்லும் mathew வை தன் முன் இசபெல்லாவுடன் கலவி கொள்ளும் தண்டனையளிக்கிறான் தியோ.இசபெல்லாவுடனான கலவி உச்சத்தில் ரத்தம் தெறிக்க, mathew கலவரமும் ஆனந்தமும் ஒருங்கே அடைகிறான்.அவளின் ரத்தத்தை முகத்தில் பூசிக்கொள்கிறான்.படம் முழுக்க விளையாட்டுத்தனமும், கேலியும், சமூக ஒழுங்கை நிர்குலைக்கும் துணிச்சல்களும், மிக இயல்பாய் விரவிக்கிடக்க மார்க்சிச பெர்ட்லூச்சியே காரணமாய் இருந்திருக்க முடியும்.

இத்திரைப்படத்தை incest என பொத்தாம் பொதுவாய் கடந்துவிடமுடியாது.இசபெல்லாவும் தியோவும் கலவி கொள்வதில்லை.அவர்களுக்குள் இருப்பது காதலே.இன்னொருத்தியோடு தியோ கலவி கொள்ளும் சப்தங்களை தாங்கிக்கொள்ளமுடியாமல் துயருறுகிறாள் இசா.இக்காட்சியினூடாய் மட்டுமே காதல் வெளிப்படுகிறது மற்றபடி இரட்டையர்களின் மிக இயல்பான நெருக்கமே சொல்லப்பட்டிருக்கிறது.பால்தன்மை குறித்தான பிரக்ஞைகள் இருவருக்கும் இல்லாமலிருக்கிறது என்பதற்காக மட்டும் இதை incest ல சேர்த்து விட முடியாது."கலகம் என்பது உயர்ரக ஒயினைக்குடித்தபடி உலக சினிமாக்கள் பார்ப்பது, மிகப்பெரும் புத்தகங்களை கரைத்துக் குடிப்பது, வேண்டிய மட்டும் இன்பம் துய்ப்பது மட்டுமில்லை. புரட்சிக்கு முதலில் தெருவில் இறங்க வேண்டும்" என்கிறான் mathew.கிறங்கிய மதுவில் ஆடைகளற்று தூங்கும் மூவரையும் கண்டு அதிர்ச்சியடைந்து அவர்களின் தேவைக்கான காசோலையை வைத்து விட்டகலுகிறார்கள் இசா,தியோ வின் பெற்றோர்கள்.விழிப்பில் உணர்ந்துகொள்ளும் இசா தற்கொலைக்கு முயலுகிறாள்.Mouchette திரைப்படத்தில் வரும் Robert Bresson னின் நாயகி தற்கொலை செய்து கொள்ளும் காட்சியை நினைத்துக்கொள்கிறாள்.தெருவிலிருந்து பாய்ந்து வீட்டின் கண்ணாடியை உடைக்கும் ஒரு கல இருவரையும் விழிக்கச் செய்கிறது. இசா தற்கொலையை மறைக்கிறாள்.மூவரும் அரசுக்கு எதிரான கலகத்திற்காக தெருவில் மற்றவர்களோடு இணைகிறார்கள்.(1968 student rebellions - France).Mathew தடுக்க தடுக்க இசபெல்லாவும் தியோவும் வன்முறையை கையிலெடுக்கிறார்கள்.

11 comments:

Sridhar V said...

வாய்ப்பு கிடைத்தால் இந்த படத்தையும் பாருங்கள் - Threesome. Eddy-ன் குழப்பமான மனநிலையும், மூவரின் இயல்பான நட்பும் இறுதியில் எல்லையில்லா காதலும்... பிடித்திருந்தன. மொத்தமாக படம் பரவாயில்லை ரகம்.

MSK / Saravana said...

Me the First??

MSK / Saravana said...

வாய்ப்பு கிடைத்தால் நிச்சயம் Bernardo Bertolucci படங்களை பார்க்கிறேன்.. அறிமுகத்திற்கு நன்றி அய்யனார்..

MSK / Saravana said...

இந்த மாதத்தின் பத்து நாட்களுக்குள் இரண்டு பதிவுகள்.. :)))

இன்னும் வேண்டும்....

உண்மைத்தமிழன் said...

அய்யனார்ஜி..

lost in tango-வைப் பார்த்துவிட்டேன். அப்படியொன்றும் படம் என்னை பெரிதாக கவரவில்லை. படத்தின் சீன்கள் அதிகம் என்றுதான் எனக்கு அறிமுகப்படுத்தினார்கள்.

ட்ரீமர்ஸ் படத்தினை பார்த்துவிடுகிறேன்.. அறிமுகத்திற்கு நன்றி..

ஏன் இப்போதெல்லாம் அடிக்கடி எழுதுவதில்லை.. நிறைய எழுதுங்கள் தல..

குசும்பன் said...

மேட்டர் படம், மேட்டர் கதை, மேட்டர் கவிதை இதை தவிர வேறு ஏதுவும் பார்க்கமாட்டேன், எழுதமாட்டேன் என்று பிடிவாதமாக இருக்கிறீர்!

அண்ணாச்சி சொன்னாரே ஒரே மேட்டர் படமா பார்கிறாய் என்று எல்லாம் இதுதானா?

குசும்பன் said...

//இன்னொரு திரைப்பட கேள்விக்கு தவறாய் பதில் சொல்லும் mathew வை தன் முன் இசபெல்லாவுடன் கலவி கொள்ளும் தண்டனையளிக்கிறான் //

ஹி ஹி தண்டனை ரொம்ப டிபரண்டா இருக்கே! :))

Ayyanar Viswanath said...

பார்க்க முயற்சிக்கிறேன் ஸ்ரீதர் பகிர்வுக்கு நன்றி...

சரவணக்குமார் நன்றி :)

உண்மைத் தமிழன்
நன்றி..வேலை மாற்றம் அது இதுவென ஓடிக்கொண்டிருக்கிறேன்..சாவகாசமாய் எழுதிக்கொள்ளலாம் என விட்டாயிற்று..

குசும்பர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்
:@

பிச்சைப்பாத்திரம் said...

last tango in paris நீண்ட நாட்களாக பார்க்க நினைத்திருந்த படம். நினைவுப்படுத்தியதற்கு நன்றி. :-)

வால்பையன் said...

நீங்கள் அறிமுக படுத்திய clock work orange-ன் தாக்கமே இன்னும் முடியவில்லை. அதற்குள் அடுத்த படம். பார்த்து விடுகிறேன்

Ayyanar Viswanath said...

சுரேஷ் உடனே பாருங்கள்

வால்பையன் clock work orange பதிவாய் இடுங்களேன்

Featured Post

King Pele : அஞ்சலி

சனிக்கிழமை மாலை பயல்கள் ப்ரஸீலின் கால்பந்தாட்ட வீரரான பெலே வின் இழப்பைக் குறித்துக் கேட்டார்கள். அவர் எனக்கு முந்தைய தலைமுறை என்பதால் அவர் வ...