Thursday, July 10, 2008

பொய்கள்.. பொய்கள்... பொய்கள்....


மெய்யிலிருந்து மீள்வதும்
மெய்த் தன்மையிலிருந்து விடுபடுவதென்பதும்
அத்தனை இலகுவானதில்லை.
உண்மையின் விகார தரிசனத்திற்காக
இப்பாழ் நிலங்களில் தனித்து,வெறுத்துத் திரிவதாக
சொல்வதும் கூட எத்தனை பொய்யானது?
ஒரு பொய்யினை உண்மையைப் போன்றதொன்று
நிராகரிக்காத தருணம் வரை
அதன் தரிசனம் அபரிதமானது.

எல்லாத் திசைகளிலிருந்தும் பெருகி வரும் பொய்களை
என்ன செய்வதென்று தெரியவில்லை
ஏற்கனவே பிதுங்கி வழியும் என் குதத்தை
உண்மையைப் போலதொரு குறி/யோனி யும்
பொய்களாய் விரிந்திருக்கும் குறிகளும்/யோனிகளும்
பரிதாபமாய் பார்த்து
தலைகவிழ்ந்து திரும்பப் போவதை
பார்த்துக்கொண்டிருக்கிறேன்...

எல்லாவற்றையும் விழுங்கிச் செரிக்கும்
கருமத்தை
எவனாச்சிம் கண்டு புடிச்சா என்ன?

புகைப்படம் : http://images.google.com/imgres?imgurl=http://4.bp.blogspot.com

11 comments:

ரௌத்ரன் said...

//ஒரு பொய்யினை உண்மையைப் போன்றதொன்று
நிராகரிக்காத தருணம் வரை
அதன் தரிசனம் அபரிதமானது.//


அழகான முதிர்ச்சி..
----------------------------


//உண்மையின் விகார தரிசனத்திற்காக //


தெளிவான குழப்பம்...நாளை துலங்குமென நினைக்கிறேன்...

சென்ஷி said...

//எல்லாவற்றையும் விழுங்கிச் செரிக்கும்
கருமத்தை
எவனாச்சிம் கண்டு புடிச்சா என்ன?
//

:)))

Ayyanar Viswanath said...

ரெளத்ரன்

உண்மை எப்போதும் விகாரமானதுதான்..

நன்றி சென்ஷி

ரௌத்ரன் said...

அய்யனார்.. எனது குழப்பம் உண்மை அழகானதா விகாரமானதா என்பது குறித்தல்ல...விகாரம் நம்மை சார்ந்ததா உண்மையை சார்ந்ததா என்பது தான்.
ஒரு சொல்லின் பொருள் சொல்லுக்குரியதா?சொல்பவனுக்குரியதா?

உண்மை விகாரமானது தான் என்பது உங்களது கண்டடைதல்.இது இன்னும் எனது அனுபவமாகததால் இந்த கூற்றை ஏற்றுக்கொள்ளவோ மறுக்கவோ முடியவில்லை.

நன்றி அய்யனார்.

ஆடுமாடு said...

நல்லாயிருக்கு.
என்ன கோபமோ?

கிருத்திகா ஸ்ரீதர் said...

"மெய்யிலிருந்து மீள்வதும்
மெய்த் தன்மையிலிருந்து விடுபடுவதென்பதும்"

சொல்ல வந்ததை சரியாய்த்தான் சொல்லியுள்ளீர்களா எனக்கென்னவோ ஒர் எழுத்து மாற்றம் போல் தோன்றுகிறது...:)

Ayyanar Viswanath said...

ரெளத்ரன் சொல் எப்போதும் சொல்லாகவே இருக்கிறது..சொல்பவன் தான் முழியை பியத்துக் கொள்கிறான்..சொல்லை சொல்லாகவே அனுகுவது மிகப்பெரிய, எளிதில் வசப்படாத ஒன்றாய்த்தான் இருக்க முடியும்.சொற்களின் குவியலில் மூழ்கிப்போவதும் பின்பு வெளி வருவதும் தொடர்ச்சியான விளையாட்டைப்போலவே நிகழ்த்திக்கொண்டிருக்கிறோம்..சொல் என்கிற புள்ளியில் தொடர்ச்சியாய் யோசிப்பது சலிப்பைத் தருகிறது..
சலித்ததையும் சொற்களைக் கொண்டே நிரூபிக்க வேண்டியிருப்பது எத்தனை பெரிய துயரம் :)

Ayyanar Viswanath said...

ஆடுமாடு..

மனுச பயலா பிறந்தாவே ஏகப்பட்ட பிரச்சினைங்க..உங்களுக்கென்ன நீங்கதான் ஆடுமாடாச்சே:)

கிருத்திகா மெய்த்தன்மை குறித்தான நமது அணுகுமுறைகள்தாம் மிகப்பெரிய பிரச்சினையாக இருக்கிரது..நன்றி..

seethag said...

சொல் எப்போதும் சொல்லாகவே இருக்கிறது..சொல்பவன் தான் முழியை பியத்துக் கொள்கிறான்....

அய்யனார்,

subjectivity அல்லது பாவிப்பரின் புரிதலின் அடிப்படையில் பொருள் விளங்கப்படும்ம்.எனக்கு தமிழில் இதை அழகாக சொல்ல தெரியவில்லை.

even the idea true/false can be a level subjectivity?

for e.g. when we talk about colors i would say green as green you may sya so too. but there may be soem oen who can call it with a differnet name for the same color..

i am sorry i am rambling. hard for me to clearly stae. simply put when we wear a pari of goggles, be that base don religion, country or any identity or experience life most often gets viewed through those goggles without clarity..

anujanya said...

யார் மீதோ கோபத்தில் உள்ளீர்கள் என்று புரிகிறது. ஹ்ம்.

அனுஜன்யா

Ayyanar Viswanath said...

சீதா
பச்சை நிறம் என்பது ஒரு சொல்தான் அந்த சொல் நம் மூளைக்கு கற்பனைக்கு ஏற்ற வடிவமாக இருக்கிறது அவ்வளவுதான்..இதே பச்சை நிறம் என்கிற சொல்லை மட்டும் சொல்லி நீல நிறத்தை காட்டி ஒரு குழந்தையை வளர்த்தோமானால் அக்குழந்தைக்கு பச்சை நிற்மாய் தோன்றுவது நமக்கு நீலநிறம்தான்..
ஆக சொல் சொல்லாகவே இருக்கிறது ..
உங்களின் தொடர்ச்சியான பகிவுகளுக்கு நன்றி...

அனுஜன்யா:கோபம்லாம் எதும் இல்லைங்க சும்மா :)

Featured Post

King Pele : அஞ்சலி

சனிக்கிழமை மாலை பயல்கள் ப்ரஸீலின் கால்பந்தாட்ட வீரரான பெலே வின் இழப்பைக் குறித்துக் கேட்டார்கள். அவர் எனக்கு முந்தைய தலைமுறை என்பதால் அவர் வ...