Monday, March 10, 2008

தமிழச்சிக்காவுக்கு கோனார் நோட்ஸ்

கோணேஸ்வரிகள்...!

நேற்றைய அவளுடைய சாவு -
எனக்குவேதனையைத் தரவில்லை.
மரத்துப் போய்விட்ட உணர்வுகளுக்குள்
அதிர்ந்து போதல் எப்படி நிகழும்.
அன்பான என் தமிழிச்சிகளே,
இத்தீவின் சமாதானத்திற்காய்
நீங்கள் என்ன செய்தீர்கள்!?ஆகவே:
வாருங்கள்உடைகளைக் கழற்றி
உங்களை நிர்வாணப்படுத்திக் கொள்ளுங்கள்
என் அம்மாவே உன்னையும் தான்.
சமாதானத்திற்காய் போரிடும்
புத்தரின் வழிவந்தவர்களுக்காய்
உங்கள் யோனிகளைத் திறவுங்கள்.பாவம்
அவர்களின் வக்கிரங்களை
எங்கு கொட்டுதல் இயலும்.
வீரர்களே! வாருங்கள்
உங்கள் வக்கிரங்களை தீர்த்துக் கொள்ளுங்கள்.
என் பின்னால்என் பள்ளித் தங்கையும் உள்ளாள்.
தீர்ந்ததா எல்லாம்
அவளோடு நின்றுவிடாதீர்!
எங்கள் யோனிகளின் ஊடே
நாளைய சந்ததி தளிர்விடக்கூடும்.
ஆகவே:வெடிவைத்தே சிதறடியுங்கள்
ஒவ்வொரு துண்டுகளையும்
கூட்டி அள்ளி புதையுங்கள்
இனிமேல் எம்மினம் தளிர்விடமுடியாதபடி.
சிங்கள சகோதரிகளே!
உங்கள் யோனிகளுக்குஇப்போது வேலையில்லை.

தமிழச்சிக்கா!

இந்த கவித ல இன்னா சொல்லிகிறாங்கன்னா ஒன்னால இம்புட்டுதான் முடியுமா? ங்கோத்தா இதோ நிக்கிறோம் பார்ரா தில்லா!.. உன்னால ஆவறத பாத்துக்கோ னு சொல்லிக்கிறாங்கோ....இது 1000000 மடங்கு அதிகமான எதிர்ப்பு..இந்த மாதிரி ஒரு தைகிரியம் யாருக்குமே வராது ..இந்த மாதிரி எதிர்ப்புக்கு நேரா எம்புட்டு பெரிய்ய வெடிகுண்டும் சொம்மா நிக்க கூட முடியாது.

எதிர்ப்புங்கிறது வெத்தா பேஏஏஏ னு கத்தறது மட்டும் இல்ல யக்கா... நிக்கிறோம் பார்ரா தில்லான்னு சொல்றது எல்லாதையும் தாண்டி நிக்கிற பெரிய்ய எதிர்ப்பு..நான் திரும்ப திரும்ப ஒங்ககிட்ட ஒண்ணே ஒண்ணு சொல்லிக்கிறேன் தயவு செய்ஞ்சி எல்லாத்தையும் மேலோட்டாமா பாக்காதீங்க..பெரியாரு தோழரு மாதிரி இல்ல இந்த மேட்டரு தயவு செய்ஞ்சி வுட்ருங்கோ...

பொழுது போவலன்னா கும்புதல், குறி பார்த்து சுடல், இப்படி புச்சு புச்சா கும்பு வார்த்தைகளை லக்கி அன்ட் கோ கூட சேர்ந்து கண்டு புடிங்கோ ... அட அவிங்களும் ஆட்டைக்கு வரலன்னா கும்மில ஒரு பதிவு போட்டு பகுத்தறிவு கும்மி அடிப்போம் நானும் வர்ரேன்.. அண்ணாச்சி, குசும்பன், கதிருன்னு மக்க எல்லாரையும் கூட்டிகினு வர்ரேன் தயவு செய்ஞ்சி இந்த மாதிரி உணர்வுபூர்வமான வெசயங்களோட உங்க பொரட்சி கள புகுத்தாதீங்க..

எவ்ளோ கஷ்டபட்டு அடக்கிபாத்தேன் தமிழச்சிக்கா ஆனா முடியல.. கொட்டிட்டேன்..செல்லா ஒங்களுக்கு மேட்டர் கெடச்சிடுச்சி நீங்க ஆரம்பிக்கலாம்..

17 comments:

கதிர் said...

+ + +
நச் நச் நச்

Anonymous said...

உண்மையில் தமிழச்சியின் பதிவு வேதனையின் உச்சத்துக்கே கொண்டு போய்விட்டது. உலகத்தில் என்ன நடக்கின்றதென்றே தெரியாத இந்தப் பெண் செய்யும் அடாவடிக் கருத்துக்களை தமிழ்மண உலகம் எத்தனை நாளுக்குத் தான் சகித்துக் கொண்டு வாளாவிருக்கப் போகிறதோ.

இனியும் இந்தப் பெண்ணின் பேதலித்த கருத்துக்களுக்கு இடம் கொடாது தமிழ்மணம் முற்றுப் புள்ளி வைத்தால் பெருமகிழ்வு கொள்வேன்.

கதிர் said...

தமிழச்சி கூறும் கருத்துக்கள் சிலவும் நியாயமானவையாக இருந்தாலும். பெண்குரல் ஓங்கி ஒலிப்பது ஆரோக்கியமான ஒன்றாக இருப்பினும். சில கேணத்தனமான உளறல்களுக்கும் தமிழச்சி ஆதரவாளர்கள் மடத்தனமாக ஆதரவளிப்பது வேதனையை அளிக்கிறது. இந்த ஆதரவுதான் மறைமுகமாக "எப்படியும்" பதிவெழுதலாம் என அவரை தூண்டுகிறது.

தமிழச்சி,
உங்கள் கொளுகைகளை பகுத்தறிவு, பெண் விடுதலை, பெண்ணுரிமை போன்ற விஷயங்களில் ஜல்லியடித்துக் கொள்ளலாம் ஆனால் இது போன்ற உணர்வு பூர்வமான விஷயங்களை காயப்படுத்த வேண்டாம்.

Anonymous said...

தமிழச்சிக்கு முதுகு இருக்கு..

முட்டுக் கொடுக்க செல்லா எதுக்கு..

பிரச்சனைகள் எதிர்த்து தில்லா நில்லு தமிழச்சி..

கதிர் said...

//தமிழச்சிக்கு முதுகு இருக்கு..

முட்டுக் கொடுக்க செல்லா எதுக்கு..

பிரச்சனைகள் எதிர்த்து தில்லா நில்லு தமிழச்சி..//

தோ பார்றா இந்த காமெடியன :)))

TBCD said...

இந்தப் பதிவின் பின்னுட்டங்களைப் படிக்க, இனைப்புக் கொடுக்க மட்டுமே..

லக்ஷ்மி said...

கவிதைக்கே இப்படி ஒரு ரெஸ்பான்ஸா? அப்ப மணிப்பூர்ல நடந்த பேரணிய பத்தி இவங்க என்ன சொல்வாங்களோ? பல்லக் கடிச்சு கடிச்சு பல்லே உதிர்ந்துடும் போல இருகே இந்த அழும்பெல்லாம் பாக்கையில...

M.Rishan Shareef said...

.

M.Rishan Shareef said...

அன்பின் அய்யனார்,

சகோதரி தமிழச்சியின் அப்பதிவு என்னை மிகவும் வேதனைக்குள்ளாக்கியதொன்று.
இலங்கையில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பெண்ணும் ஆயுத‌ங்க‌ளுக்கு ம‌த்தியில் என்ன‌ பாடுப‌டுகிறார்க‌ளென்று என‌க்குத் தெரியும்.

வாழ்க்கை முழுவ‌தையும் மிக‌ வேத‌னையோடு க‌ட‌ந்து செல்லும் இப்பெண்க‌ளின் வ‌லி முழுவ‌தையும் த‌மிழ‌ச்சி அவ‌ர்க‌ள் பாரிஸிலிருந்து மிக‌ எளிதாக‌க் கையாண்டிருக்கிறார்.

இங்கு ஒரு க‌லா த‌ன் க‌ருத்தினை தைரிய‌மாக‌ச் சொல்லியிருக்கிறார்.அத‌னைக் க‌விதையாக‌க் கொள்வ‌து அவ‌ர‌வ‌ர் விருப்ப‌ம் என்றாலும் என் பார்வையில் அது ஒரு வ‌லி மிகுந்த‌ ஆவ‌ண‌ம்.இதை தைரியமாக எழுதிய‌ பிற்பாடு க‌லாவுக்கு ஆயுத‌ங்க‌ளின் மூல‌ம் என்ன‌ அநீதிக‌ள் ந‌ட‌க்கும் என‌த் தெரிந்த‌ பிறகும் அவர் இதனை எழுதியிருக்கிறார் என்றால் அவ‌ர‌து தைரிய‌த்திற்கு வேறென்ன‌ சாட்சிக‌ள் வேண்டும்?அதிலும் சிங்க‌ள‌த்திலும் இது மொழிபெய‌ர்க்க‌ப் ப‌ட்ட‌ பின்ன‌ர் ஆயுத‌ ஆப‌த்துக‌ள் ப‌ல‌ ம‌ட‌ங்கு ஆகும்தானே.
அத்த‌னையையும் எதிர்கொள்ள‌ ம‌ன‌தில் எவ்வ‌ள‌வு வ‌லு வேண்டும் ந‌ண்ப‌ரே...?

பிர‌ச்சினைக‌ள் வ‌ரும் என்று அவ‌ருக்குத் தெரியும்.தெரிந்தும் எழுதியிருக்கிறார்.அவ‌ர் அப்ப‌டி எழுதிய‌ப‌டியால் தானே இன்றும் அக் கோர‌ங்க‌ள் பேச‌ப்ப‌டுகின்ற‌ன‌.
இங்கு க‌லா 'யோனி' என்னும் வார்த்தையை த‌ன்னுடைய‌ பிர‌ப‌ல‌த்திற்காக‌ப் ப‌ய‌ன்ப‌டுத்த‌வில்லை.ஒரு க‌ச‌ப்பான‌ உண்மையைச் சுட்டுகிறார்.
அது அய்யனாரின்
//இந்த கவித ல இன்னா சொல்லிகிறாங்கன்னா ஒன்னால இம்புட்டுதான் முடியுமா? ங்கோத்தா இதோ நிக்கிறோம் பார்ரா தில்லா!.. உன்னால ஆவறத பாத்துக்கோ னு சொல்லிக்கிறாங்கோ....இது 1000000 மடங்கு அதிகமான எதிர்ப்பு..இந்த மாதிரி ஒரு தைகிரியம் யாருக்குமே வராது ..இந்த மாதிரி எதிர்ப்புக்கு நேரா எம்புட்டு பெரிய்ய வெடிகுண்டும் சொம்மா நிக்க கூட முடியாது.

எதிர்ப்புங்கிறது வெத்தா பேஏஏஏ னு கத்தறது மட்டும் இல்ல யக்கா... நிக்கிறோம் பார்ரா தில்லான்னு சொல்றது எல்லாதையும் தாண்டி நிக்கிற பெரிய்ய எதிர்ப்பு..//
இந்த வரிகளைத் தான் உள்ளடக்கிச் சுட்டுகிறது.

நாளைக்கே
நானும் கொல்லப்படலாம் ;
சோகம் தவித்துக்கனக்குமெனது
மெல்லிய மேனியில்
மரணம் தன் குரூரத்தை - மிக
ஆழமாக வரையவும் கூடுமான
அக்கணத்தில்
நான் கூட‌ச் சொல்வேன்
வா வ‌ந்து கொல்லு
என்னை,த‌ந்தையை,அண்ண‌னை,த‌ம்பியை...


பெரிய பின்னூட்ட‌ம் என்றால் ம‌ன்னிக்க‌வும் அய்ய‌னார்.
வேறுவ‌ழிதெரிய‌வில்லை.விழிநீர் க‌சிய‌ எழுதுகிறேன்.
ப‌திவுக்கு மிக‌ மிக‌ மிக‌ மிக‌ மிக‌ ந‌ன்றி ந‌ண்ப‌ரே !

Ayyanar Viswanath said...

ஷெரிஃப் உங்கள் உணர்வுகளைப் புரிந்து கொள்ள முடிந்தது ..தமிழச்சியின் புரிதல் அறியாமையின் வெளிப்பாடய்த்தான் இருக்க முடியும் இதில் வருந்த வேண்டிய அவசியம் இல்லை கொழுவியைப் போல சிரித்துவிட்டுப் போங்கள்

Ayyanar Viswanath said...

லக்ஷ்மி நானும் பல்ல கடிச்சி பார்த்துட்டுதான் கொட்டிட்டேன் ..மணிப்பூர் பத்திலாம் அவங்க காதுக்கு போச்சோ என்னமோ நீங்க வேர எடுத்து கொடுக்கிறீங்களா :)

SriRam said...

தமிழச்சி உங்கள் புரட்சி கருத்துகள் தமிழ் ஈழத்தில் இப்போது தேவை இல்லை கொஞ்சம் அடக்கி வாசியுங்கள்
ஈழத்தில் இருந்து அன்புடன் மக

ரௌத்ரன் said...

அய்யனார்..நேத்து தான் உங்க கிட்ட ஒரு கோரிக்கைய வச்சேன்.அடுத்த நாளே "தமிழச்சிக்காவுக்கு கோனார் நோட்ஸ்" கொடுத்திருக்கீங்க.தொடரட்டும் அதகளம்.

Mayooran said...

தமிழச்சி ஒரு விளம்பரப்பிரியை. அவரது நோக்கம் தமிழ்மணத்தில் தன்னைப் பிரபலப்படுத்துவதுதான், தமிழச்சிக்காக ஒரு பதிவுபோட்டு நம்ம நேரத்தை வீணடிக்கவேண்டாம். ரிஷான் சொல்வதுபோல் தமிழச்சிக்கோ அவரது அடிப்பொடிகளுக்கோ ஈழத்தவன் வேதனை புரியாது.

மதி கந்தசாமி (Mathy Kandasamy) said...

வெள்ளத்தனைய மலர்நீட்டம்.

இரயாகரனின் 'ஆணாதிக்கத்தை எதிர்த்து எழுந்த வர்க்க கவிதை'க்கு எதையோ எதிர்பார்த்துப் போனவர் ஏமாற்றத்தில் வாரிச்சுருட்டிக்கொண்டு கைக்கு வந்ததை எழுதிக்குவித்திருக்கிறார்.

பல்லைக்கடித்துக்கொண்டு பொறுமை காக்கப்பார்த்தாலும் இந்த விளம்பரமோகத்தை இந்தமுறை புறந்தள்ளிவிடமுடியவில்லை.

அதுவும் கடந்த வாரம் இலங்கையில் என்ன நடந்திருக்கிறது. சில தினங்களுக்கு முன்பு என்ன நடந்தது என்பதை அறிந்தவர்களுக்கு அந்த விளம்பரமோகத்தின் இடுகை ஏற்படுத்தியிருக்கும் மனக்கஷ்டம் கொஞ்சநஞ்சமில்லை.

என்ன சொல்வது.. முதலிலேயே சொன்னபடி

வெள்ளத்தனைய மலர்நீட்டம்..

-மதி

thiru said...

கோணேஸ்வரி பற்றிய கவிதை கலகத்தின் குரல்.

ஜூலை 2007ல் பூஜா சவுகான் என்ற 22 வயது பெண் குஜராத் மாநிலத்தின் ராஜ்காட் வீதியில் உள்ளாடைகள் மட்டும் அணிந்து காவல்த்துறை அலுவலகம் நோக்கி அரைநிர்வாணமாக வீதி வழியே சென்றாள். வரதட்சணை சித்திரவதை கொடுமையை எதிரக்க அப்பெண் ஆடையை எறிந்தது குற்றமாக கருதப்படவில்லை. இந்திய பாதுகாப்பு(!) படைகளின் தேகப்பசிக்கு பலியான மனோரமாவிற்கான மணிப்பூர் பெண்கள் கலகமும் அவ்வாறே!

Anonymous said...

திரு! அய்யனார்! மற்றும் நண்பர்களுக்கு! நான் யாரென இங்கு முகங்காட்டாவிடினும், என்னை உங்களுக்கு நிச்சயம் தெரியும். இது பரந்த இணையப்பெருவெளி. இதிலே எல்லாவற்றையும் வெளிப்படையாகச் சொல்ல முடியாவதில்லை. ஈழப் போராட்டத்தில் பல் வேறு அர்ப்பணிப்புக்கள் வெளித்தெரியா வேர்களாகவே இன்றளவும் உள்ளன. அப்படியொரு வேராக இருந்தவளின் பெயரும் கலா. இந்தக்கவிதையின் சீற்றமாகவே வாழ்ந்தவள். சிறிலங்கா இராணுவத்தின் புலனாய்வுப்பிரிவின் தலைமைச் செயலகத்தில்(4ம்மாடி) கடுமையான விசாரணைகளை கண்டு வந்தவள். உடல் உளப் பலம் பன்மடங்கு வாய்க்கப் பெற்ற சமூகப்போராளி (வெத்து வேட்டல்ல, நிஜ வேட்டு).வரிகளில் வன்மம் வைத்து எதிரிகளை காவு கொள்ளும் தின்மம், வெற்றுக்கூச்சல்களாலோ, வேஷப் பேச்சுக்களாலோ வந்துவிடாது. மரணத்துள் வாழும் மகத்தான தவம் அது. பேசிச் சாகடிப்பதிலும், மெளனமாயிருப்பது ஒன்றும் குற்றமல்ல. மெளனமாயிருப்பது மடமையென்றும் பொருளல்ல. அறிந்தவர் அறிவாராக.
நன்றி.

Featured Post

King Pele : அஞ்சலி

சனிக்கிழமை மாலை பயல்கள் ப்ரஸீலின் கால்பந்தாட்ட வீரரான பெலே வின் இழப்பைக் குறித்துக் கேட்டார்கள். அவர் எனக்கு முந்தைய தலைமுறை என்பதால் அவர் வ...