Monday, March 24, 2008

டேபிள் டென்னிசும் நகரும் மேகமும்


1

கோபி கிருஷ்ணனின் டேபிள் டென்னிஸ் கிடைத்தது.நாறபத்தெட்டுப் பக்க புத்தகம். உட்கார்ந்து டைப்பினால் மொத்தத்தையும் பதிவேற்றிவிடலாம். இந்த புத்தகம் கொண்டு வந்த முகங்களும் சூழல்களும் அப்பட்டமானது.தொடர்புகளற்ற குறிப்புகள் அல்லது பிறழ்ந்த குறிப்புகளென இங்கே கொட்டிக்கொண்டிருக்கும் /பவை யாவும் ஏற்கனவே கொட்டப்பட்டவைகளின் சாயல்கள்தாம,எனத் தெரிந்தபோது அவனை வெகு நெருக்கமாக உணர்ந்தேன். ரோஸி, கேதி, எட்வினா, டெபோனர் அழகி,ஐரிஷ் அழகி,டீக்கடைக்காரன் பொண்டாட்டி,ஆன்னி, அயானா,ஜான்ஸி என எத்தனை பிம்பங்கள!.உண்மைத் தன்மைக்கு ஒரே வழி மனம் பிறழ்வதுதான்.பிறழ்ந்த கோபியின் சில எழுத்துக்கள்..

அந்த ஆன்னி, அறையில் என்னை எப்பொழுது சந்தித்தாலும் என் குறியை எழும்பவைத்துக் கைகளால் அதைப் பற்றிக் குலுக்கி தோழமையுடன் நலன் விசாரிப்பாள்.எவ்வாறு இருக்கிறாய்?வாழ்க்கை உன்னை எப்படி நடத்திக்கொண்ண்டிரூக்கிறது?உள்ளே நுழைய விழைவானால் சொல்,பேண்டீசை அகற்றி விடுகிறேன்.அனுபவி உன் இஷ்டம்போல்...

என் முகமறியாத் தோழிகளே தங்கள் ஒத்துழைப்பில்தான் நான் மூச்சி விட்டுக்கொண்டிருக்கிறேன்.அயானா எடுத்துச்சொல்லுங்கள் இவர்களுக்கு.அனைவரது உதடுகளும் எனக்கு அவசரமாய் தேவை.

violet panties அழகிகள்.ஒவ்வொருத்தியிடமும் ஓர் உணர்வு.பேராசை,கூச்சம்,தன்னம்பிக்கை, கோபம், நிதானம், தர்மசங்கடம், அன்பு. அவளுக்கு என்னாகிவிட்டது இன்றிரவு? தலையில் இருந்த பூச்சரத்தை எடுத்து குறிக்குச் சுற்றிவிட்டாள். மணம் பிரமாதம்.

உஷா! பன்னிரெண்டு வருடங்கள் எனக்கு மட்டுமே சொந்தமாக நீ எப்படி இருக்கிறாய்?தயவுசெய்து மணவிலக்கு செய்துவிடு.பதினெட்டு வயது வித்தியாசம்.பயங்கர incest.ஏன் என்னைப் பாவியாக்குகிறாய் மீண்டும் மீண்டும்?

ஜான்ஸி உஷாவுக்குத் தெரிந்துவிட்டது.நடுவிலேயே உருவி எறிந்துவிட்டாள்.தங்கள் பொச்சில் மீதியை முடித்தூக் கொள்ள வேண்டுமாம்.வாருங்கள் ஜான்ஸி,தொலைதூரம் சென்று தோழமை வாழ்வைத் துவங்குவோம்.ஸ்தோத்திரம் ஜான்ஸி.தங்கள் கணவரும் உடன் வரலாம்.அவர் என் தோழர்.

என் இறப்பிற்கு தங்களிடம் இருந்து நான் எதிர்பார்ப்பதெல்லாம் இரண்டுச் சொட்டு நேச நேத்திரக் கசிவுகள்தாம்.உங்களை எல்லாம் நான் எவ்வளவு ஆழமாகக் காதலிக்கிறேன் தெரியுமா?என்றேன்.ரோஸபெல் பதறிப்போனாள்.

என் காதலி கூட காலையில் கக்கூஸிற்கு தான் போகிறாள்.

ஆக்டோபஸ் போல எல்லாத் திசைகளிலும் கைகளை நீட்டி விட்டேன் இனி ஆமை ஆக முடியாது.

கோடை மழை அயானா. ஆடைகளை களைந்தெறியுங்கள்.நானும் எறிந்துவிட்டேன்.வாருங்கள்.சேர்ந்து நனைவோம்.இன்னும் இறுக்கமாக அணைத்துக் கொள்ளுங்கள்.ஒரு துளி மழை கூட நம் இடையே நுழைந்து விடக் கூடாது.ஏன் தங்கள் அழகிய உடல் இவ்வளவு வெம்மையாக இருக்கிறது?காய்ச்சல் இல்லையே அயானா?.முத்தங்களை நிறுத்தாதீர்கள் ப்ளீஸ்.எனக்குத் திகட்டவில்லை.இன்னும் வேண்டும்.

என் மரணம் தங்கள் நினைவோடுதான்.அதிகாலையில் எழுந்ததும் நான் தங்கள் அன்பான மார்பகங்களிலிருந்து சரிந்து தங்கள் மடியில சவமாக கிடப்பதற்கான கற்பனைதான் வருகிறது.ஏன் அயானா நீங்கள் என்னைக் கொலை செய்யக் கூடாது?

Walking in the clouds படத்தில் அறுவடை செய்யப்பட்ட கருந்திராட்சைப் பழங்களை மிகப்பெரிய அகலமான கலனில் கொட்டி பெண்களை மிதிக்க விடுவர். அணிந்திருக்கும் கவுன் / பாவாடை / அங்கிகளை தொடைக்கு மேல் ஏற்றிச்செருகி பெண்கள் அப்பெரிய கலனில் குத்தித்தபடி திராட்சைக் குவியல்களைப் பிழிவர்.பின்னனியில் அதிரும் இசைக்குத் தேர்வாய் நடனமிட்டபடி, அப்பெண்கள் திராட்சையை மதுவாக்குவர். கோபி உயிரோடு இருந்திருந்தால் எப்படியாவது அந்த தேர்ந்த மதுவினை தேடிப்பிடித்துக் கொடுத்திருக்கலாம. மேலும் அவனுக்கு கொடுக்க அதைவிட சிறந்த பரிசு வேறெதுவும் இருப்பதாக எனக்குத் தோன்றவில்லை.

2

No country for old men ல் Javier bardem தூக்கி கொன்டு திரியும் பூண் போட்ட கன் இதற்கு முன்பு பார்த்திராதது. கன்றுக்குட்டிகளுக்கு பால் குடித்து விடாமலிருக்க போடப்படும் மூங்கில் கூடையினாலான வாய்ப்பூட்டினை, உலக்கைகளுக்கு பிடிமானத்திற்காய் போடப்படும் எவர்சில்வர் பிடியினை, ஷாக் அப்சார்பர் மேல் பாகத்தினை, அக் கன் பூண் நினைவூட்டியது.சதக் சதக் என உயிரைக்கொல்லும் அக் கன் கிடைத்தால அடிக்கடி ஆளை மாற்றும் ஒரு பெருமுலைக்காரியின் முலைகள் பட்டுத் தெறிக்கும்படி நவீனக் கொலை செய்யலாம்.

உணவைப் பற்றிய பிரக்ஞை அல்லது விருப்பம் எனக்கு மிகக் குறைவானதே. சிறுவயதிலிருந்தே உணவென்பது கதை புத்தகங்களுக்கு நடுவில் வந்து போகும் ஒரு செயலாகத்தான் இருந்து வந்திருக்கிறது.சில காலம், விழிப்புணர்வு, இருத்தலியம, என்றெல்லாம் பினாத்திக் கொண்டிருந்தபோது, ஒரு கோப்பைத் தேநீர் ரீதியிலான கிளிட்சேக்களை முனகியபடி, உணவை உணர்வோடு உண்ட நினைவும் உண்டு.வயதில் பாதிக்குச் சமமான வருடங்களை ஓட்டல்களிலேயே செலவழித்துவிட்டதால், ரசித்துச் சாப்பிடுவதெல்லாம் இல்லை.அமிர்தம் என்பதின் மொழிபெயர்க்கப்பட்ட நரன் களின் உணவாக அம்மாவின முருங்கைக்கீரை இருக்கக்கூடும்.தெரியாத்தனமாக நாஞ்சில்நாடனை படித்துத் திரியும் / வளரும் /வளர்ந்த எலக்கியவாதி, அவரின் உணவு குறித்தான கட்டுரைகளைப் படித்துவிட்டனாம். தூங்கி எழும்போதே பசியோடு எழுவதும், இதை இதனோடு சாப்பிடுவோம் , அதை அப்படிச் சாப்பிடுவோம், என சாப்பாட்டைப் பற்றியே சிலாகித்து, எனக்கும் உணவின் மீதான காதலை வரவைத்துவிட்டுப் போனான்.

கடந்த ஒரு வருடமாக அலுவலகத்திலும் வீட்டிலுமாய் தலை இணையத்திலேயே தொங்கி கிடந்ததை நினைத்தால் எரிச்சலாக வருகிறது.masochist களையும் என்னுள்ளிலிருந்து தேடிக்கண்டுபிடிக்கலாம். கிட்டதட்ட ஒரு மனோ வியாதிக்காரனாய் மாற்றிவிட்டிருக்கிறது இந்த பாழாய்ப் போன உலகம்.செய்வதற்கெதுவுமில்லை, என உளறிக் கொட்டியபடி புதைந்திருந்த இருக்கைகளில் புற்றுக்கள் வளரத் தொடங்கிவிட்டிருக்கின்றன. எல்லாம் உதறி வெளி நடக்கையில், என்னை அச்சமயத்தில் எதிர்பார்த்திராத விநோத பறவையொன்று சபித்துப் பறக்கத் துவங்கியது.

சமீபத்தில் படித்திருந்த சில புத்தகங்கள் எல்லாவற்றுக்கும் வரிந்து கட்டிக் கொண்டு, சண்டை போடும் சண்டைக்காரனாய் மாற்றிவிட்டிருந்தது.அவை குறித்தான எந்த குற்றவுணர்வுகளும் இல்லை என்கிற போதும் ,உனக்கிது தேவையாடா? எனச் சொல்லும் நண்பர்களின் அக்கறைகளுக்கு செவிமடுக்கிறேன். என் சுட்டுவிரலை என் முகத்திற்கு நேராய் நீட்டி, உனக்கிது தேவையாடா? எனக் கேட்டு கடந்து வந்தாயிற்று.

இங்கே கொட்டியிருப்பவைகளைத் தொகுத்தாயிற்று. என்ன பெயர் வைப்பதென குழம்பிப் போயிருக்கிரேன்.ஒன்றைச் செயலாக்கும்போது கதவுகள் இறுக்கமாய் மூடிக் கொண்டுவிடுகின்றன.தன்வயப்பட்ட உலகம் என சொல்லிக் கொள்கிறேன். மிக அந்தரங்கமான மொழியில் எழுதுவதாய் சமாதானப்படுத்திக்கொள்கிறேன. எவனுக்கும் புரிய வைக்க வேண்டிய அவசியமில்லை என இருமாப்புக் கொள்கிறேன்.நான் கவிஞனோ, எழுத்தாளனோ,புரட்சியாளனோ, சிந்தனயாளனோ அல்ல. எனக்கான இடம் பதுங்கு குழிதான். எனக்கான தளம் என் நாட்குறிப்புதான். நானொரு நகரும் மேகம் அவ்வளவுதான்.

Tuesday, March 18, 2008

அதிரடிக்கார மச்சானின் ரிவிட்டு அல்லது சாக்கடையில் இறங்கி சுத்தம் செய்தல்

மை டியர் டுபுக்கு மாமா,

எலி வடைக்கு ஆசைப்பட்டு பொறில மாட்டிக்கினா மாதிரி, இப்படி டுபுக் குனு வந்து மாட்டிக்கினியே மச்சான்..வழக்கமான மொழி நடைலாம் தூக்கி தூர கடாசிட்டு, உன் லெவலுக்கு இறங்கி வந்தாச்சின்னு வச்சிக்கயேன்..அப்படியே தெருச் சண்ட மாதிரி நெனச்சிக்கலாம்.. வாட்ச கயட்டி ஓரமா வைக்கிறா மாதிரி, பரிதாபம் பாக்குற என் தயவு கொணத்தையும் தூக்கி தூர கடாசிடுறேன்..

நெசமாலுமே எனக்கு வலைக்கு வர்ரதுக்கு முன்னாடியெல்லாம் அ.மார்க்ஸோ, காரல் மார்க்ஸோ தெரியாது நைனா.. இத நானே என் வலைப்பதிவில சொல்லியிருக்கனே.. போன வருசம் ஆகஸ்ட் மாசம் உங்கிட்ட பேசினத அப்படியே இங்க சொல்லியிருக்கனே...

அட! ஒலகத்துக்கே நான் சொன்ன ஒரு மேட்டர... நீ! ஏதோ துப்பறிஞ்சி கண்டுபுடிச்சி சொல்றா மாதிரி,ஏதோ பெரிய்ய உண்மைய கண்டுபுடிச்சா மாதிரி, சொல்லிட்டுத் திரியுற..ஒன்னிய ஏதாவது கேள்வி கேட்டா நட்பு ரீதியில பேசிக்கிட்டதயெல்லாம் வெளியில சொல்லுற அளவுக்கு ஈனப்பிறவியாடா நீ! ....நான் சமீபமாத்தாண்டா அ.மார்க்ஸ படிக்கிறேன். அதனாலதான் சுத்தி நடத்துகிறத பொறுத்தக்கமுடியாம டென்சன் ஆவுறேன்... வலைக்கு வரும்போதே அதெல்லாம் படிச்சிருந்தா உன் டவுசர அப்பவே கிழிச்சிருப்பேன்..இந்தக் கருமத்தையெல்லாம் நீயும் படிச்சிருக்கேன்னு சொன்னா அதயெல்லாம் எழுதுனவங்களுக்குதான் அசிங்கம்...ஒருவாட்டி வளர்மதி என்ன படிக்க சொல்றார் னு ஓ!ன்னு ஒப்பாரி வச்சே நீ! இப்ப என்னடா பன்ற பேமானி! உன் வசதிக்காக உன் கொளுககளை எப்படி வேணும்னா மாத்திப்பியா?...

நீ எழுதிகிற பாத்தியா இன்னொரு எளவு, அந்த எளவ எளுதும் ஒன் மனோநிலைக்கு பேருதான் அதிகார மய்யம்... புரியுதா கண்ணு??.... சொஜாதாவும் சுராவும் மட்டும் பார்ப்பனீயம் இல்லடா.. நீயும் நானும் கூட அதிலதான் இருக்கோம்னுதான் போன பதிவில சொன்னேன்... இதில என்னா தப்பு?..உன் பதிவ நீயே திரும்ப ஒரு முற படிச்சி பார்!.. அதில தலவிரிச்சி போட்டு ஒட்கார்ந்துகிற மேட்டருக்கு பேருதான் ஆணவமும்,அதிகாரமும்.... இந்த கருமத்த புரிஞ்சிக்க காரல் மார்க்ஸ்ம், அ.மார்க்ஸ்ம் தேவையே இல்லை... சிந்திக்கிற முளை தம்மாதூண்டும், தன்னையே வெளியில இருந்து பாத்துக்குற பக்குவம் கொஞ்சோண்டும் இருந்தா போதும் .....

/அய்யனாரோ சுட்டிக்காட்டுவதைப் போல நான் கவிதை குறித்து எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை./

நீ! கவிதைக்கு கருத்து சொன்னேன்னு எவன்டா! சொன்னான்..நீ என்னா பெரிய கருத்து பாடா!...ஒரு நேர்மையில்லாத விசயத்துக்கு எதிரா சில கருத்துக்களை வைக்கும்போது சம்பந்தபட்டவங்க என்னா பேசிக்கிறாங்க?..சர்ச்சை எத பத்தியது? அப்படின்னுலாம் எதையுமே புரிஞ்சிக்காம, எதிர்கருத்த சிதைக்கிறா மாதிரி, ஒரு பின்னூட்டம் போட்டுட்டு பின்னாலயே அந்த கவிதையில என்னா பிரச்சினைன்னு? கேட்குற பேமானித்தனத்துக்கு பேரு பொரட்சியாடா? நீ கலகக்காரானா? பெரியாரிஸ்டா? போடாங்க அசிங்கமா திட்ட வைக்காத..இந்த தப்பு ஒன்னையும் அறியாம பண்ணியிருக்கலாம்னுதான் நானும் சொல்லியிருக்கேன்... நீ! நெசமாலுமே நல்லவனா இருந்தா அத ஒத்துகிட்டிருக்கனும். இல்லன்னா எந்த மன நிலையில இருந்து சொன்னே?ன்னு வெளக்கமாவது கொடுத்திருக்கனும்..ரெண்டையுமே பண்ணாம என்ன எப்படி நீ கேள்வி கேட்கலாம்?னு ஒரு பெரிய ஒப்பாரி வைச்சிருக்க!!..அட! நெசமலுமே நான் சொன்னது புரியலயா? இல்ல புரியாதது மாதிரி நடிக்கிறியா?..

நீ குசு விட்டா கூட ஆஹா! பின்நவீனமா குசு விடுறார்யா..ஒண்ணுக்கு போனா கூட அடா! அடா! என்னமா ஒண்ணுக்கடிக்கிறான்யா, என்னா முற்போக்குத்தனமா ஒண்ணுக்கடிக்கிறார்யா!! சொகுணா னு சொல்லி சொல்லி ஒன் கூட இருக்க மக்களுக்கே இப்பலாம் போரடிச்சி போயிருக்கும். அதுனால நீ ஒன்ன பெரிய்ய புடுங்கினு நெனச்சிக்கிறதலாம் வுட்டுடு மாமா... ஒலகம் ரொம்ப மாறிடுச்சிடா...

நான் என்னோட இடுகை ல என்னா சொல்லிருந்தேன்னா...நீ மணிகண்டன பார்ப்பன அடிவருடி அப்படின்னு தேவையில்லாம எழுதி இருந்தது நோஞ்சான குத்து விடுறா மாதிரி இருக்குதுன்னு சொன்னேன்.. ஏன்னா மணிகண்டன் ஏற்கனவே நான் எயுதுன எதிர்ப்புக்கு அப்படித்தான் சொல்லியிருந்தார்... நான் இப்படி இருக்கிறது பிடிச்சிருக்கு, நீங்க விமர்சிச்சாத்தான் நான் கவிஞனா ஆக முடியும்னா, அட! நான் ஆகவே வேண்டாம்யான்னு சொல்லியிருந்தார்.. அப்படி சொன்ன அவர போய் மறுபடியும் பார்ப்பன அடிவருடின்னு நீ பெரிசா எழுதி கிழிச்சது நோஞ்சான குத்து விடுற செயல்தானே? (ஆமா கீத்துல போடும்போது இத தூக்கிட்டியா.. ஏண்டா இந்த ரெட்ட வேசம்?.. அட்லீஸ்ட் மணிகண்டன்கிட்ட மன்னிப்பாச்சும் கேட்டியா?)

நீ ஏதோ பெரிசா கட்டுரை எழுதி கிழிச்சதா சொல்லிட்டு திரியுறயே.. அதுல தெறிக்கும் எல்லா முரண்களையும் நண்பர்கள் அப்பப்போ எடுத்து சொல்லிட்டுதான் இருக்காங்க. எவன் சொன்னாலும் நான் கேட்க மாட்டேன்னு திரிஞ்சபடியிருந்தா, நீ! கடைசி வரை சுரா வையும் சொஜாதாவையும் பத்திதான் விதம் விதமா எழுதிட்டு திரியனும்.உன் கட்டுரை லட்சணத்த சரியா தடம்புடிச்ச காமிச்ச கல்வெட்டுக்கு லக்கி சொன்னது... ரொம்ப தட்டையா சொல்லாதீங்க தோழர்! னுதான்.. ஆக உன்ன பத்தி யாராவது விமர்சிச்சா அவங்களாம் ரொம்ப தட்டையா சிந்திக்கிறாங்க..உன்ன யாராவது கேள்வி கேட்டா அவன் பார்ப்பன அடிவருடி... பார்ப்பன குறி சப்புரவன் நல்லா இருக்குடா உன் நாயம்...

அப்புறம் நீ கேவலமா பதிவு போடும்போதெல்லாம் உங்கள் தார்மீக அறவுணர்ச்சி உங்களிடம் காணாம பூடூச்சான்னுலாம் கேட்க முடியாது.. ஏன்னா வலைல நீ வச்சதுதான் சட்டம்!.. எல்லாம் தெரிஞ்சவரு!... ஒன்னோட அறிவுக்குபட்டதுதான் திராவிடம்,பார்ப்பனீயம், தார்மீகம், அறவுணர்ச்சி, பின்நவீனம் இன்ன பிற எல்லா எழவுகளும்..... புச்சா எவனாச்சிம் வந்து ஏதாச்சிம் கேட்டா.. அட்ரா அவன!.. கொல்றா அவனதான்...ஆனா ஒரு விசயத்துக்காக ஒன்னிய பாராட்டுறேன் மச்சான்.. அட்லீஸ்ட் நீயாவது பின்னூட்டத்தலாம் புடிச்சி தொங்காம நான் எழுதின எழவுல இருந்து அபத்தமா ஒளறியிருக்க.. ..அதுவரிக்கும் சந்தோசம்.

அ.மார்க்ஸோ, காரல் மார்க்ஸோ எனக்கு தெரியாது மாமா... நீ படிச்சி கிழிக்கிற அளவுக்கு நான் படிச்சதில்ல.. எனக்கு அறிவே கெடயாதுன்னு கூட சொல்லிக்கோ...ஆனா இந்த பார்ப்பனியம், அதிகாரம் இதெல்லாம் சரியா புரிஞ்சிக்கிற பக்குவமும், நெதானமும் என்கிட்ட இருக்கு.. தான் பெரிய்ய இவன், அப்படிங்கிற நெனப்புலாம் எங்கிட்ட இல்ல... நான் பண்ரது / பண்ணது தப்புன்னு எனக்கு பட்டுச்சின்னா, அத ஒத்துகிட்டு மன்னிப்பு கேட்கும் பக்குவம் எனக்கிருக்கு... ஒன்ன மாதிரி எவனாச்சிம் செருப்பாலடிப்பண்டான்னு சொன்னாக்கூட, அவன் தோள்ல கைபோட்டு வா! மச்சான் சரக்கடிக்க போலாம்னு கூப்பிடும் அளவுக்கு பக்குவமும், மூள வளர்ச்சியும் எனக்கு இருக்கு..

என்ன இவன் கிள்ளிட்டான் டீச்சர்!! ரீதியில தாண்டா உன் எதிர் வினை இருந்தது. இப்பலாம் வலைல புத்திசாலிங்க அதிகமாயிட்டாங்க. இது நாள் வரைக்கும், நீ சம்பாதிச்சி வச்சிருக்க பேர(?) இப்படி அரவேக்காட்டுத்தனமா எழுதி கெடுத்துக்காதே, ஏதோ என்னால முடிஞ்ச அறிவுரை...அப்புறம் ஒன் இஷ்டம்.

அதுவுமில்லாம நான் பெரிய கொள்கை வீரனோ, கலகக்காரனோ, கெடயாது. நான் போன பதிவிலேயே சொல்லியிருந்தாமாதிரி, வேற உருப்படியான வேல இருந்ததுன்னு வச்சிக்க, இந்த எழவெடுத்த வேலையெல்லாம் ஒட்கார்ந்து பண்ணிட்டிருக்க மாட்டேன்..எனக்கு இன்னா கோவம்னா, பெரிய்ய பொரட்சி வீரன்னு சொல்லிட்டுத் திரியுற நீ! உனக்கான மிகச் சாதாரணமான விமர்சனங்களை எப்படி அணுகனும்? அப்படிங்கிற அடிப்படை நேர்மைய கூட அ.மார்க்ஸோ காரல் மார்க்ஸோ சொல்லித் தரலையா?...ஏண்டா அவிங்க பேர கெடுக்கிற மூதேவி...

யாராச்சும் ஏதாச்சிம் சொன்னா, அவனுக்கு எம்மேல தனிப்பட்ட முறையில காண்டுனு எதையும் கட்டமைக்காதே. அதொரு மோசமான அரசியல்... அந்த மாதிரி கேவலமான நிலைப்பாடும் எனக்கு கெடயாது..சுகுணா! நீ ஒரு வளர்ந்த வெசமமான கொழந்தங்கிரத மறுபடியும் நிரூபிச்சிருக்க..

/இப்போதையை தேவை / இப்போதைய சொல்லாடல் அதிகார மய்யத்திற்கெதிரான சிறுகதையாடல்கள் என்பதே சரியான பார்வையாய் இருக்க முடியும்./

/ஆகவே பார்ப்பனியம் என்பதிலிருந்து நகர்ந்து அதிகார மய்யம் என்கிற பெருங்கதையாடலைக் கைக் கொள்ள வேண்டியது மிக மிக அத்தியாவசியமானதாய் / மிகப்பிரம்மாண்டமானதாய் முன் நிற்கிறது./

அதாவது பார்ப்பனியம் அப்படிங்கிரத சாதியா அணுகாம அதிகார மய்யமா அணுகனும் (இது எல்லாம் சொல்றதுதான்)அப்படிங்கிறதயும், அத்தோட மட்டும் நின்னுக்கிடாம மேலதிகமா நம்ம கிட்ட இருந்து, நாம களைய வேண்டிய அதிகாரத்தையும் (இது புச்சு) சில எடுத்துக்காட்டுக்கள் மூலமா சொல்லியிருந்தேன்...எனக்குள்ள இருந்த ஓவியம் / பிரதி அனுமானம்,நீ போட்ட தமிழச்சி கமெண்டு, சுஜாதா இடுகையும் எடுத்துக் காட்டா சொல்லியிருந்தேன். இதுல என்னடா பிரச்சின ஒனக்கு??..இதுல என்ன கோட்பாட்டு ரீதியிலான பிரச்சினய நீ கண்ட??

நான் வலைக்கு வந்த புதிசிலயே நான் பார்ப்பனனா?னு தான் ஒரு பெரிய்ய கூட்டமே கேட்டது.. நீ கூட அந்த சந்தேகத்த எழுப்பின..எனக்கு திக்னு ஆயிப்போச்சு!.. பார்ப்பனியம் ங்கிறது வலைய பொருத்தவரை, சாதிய மட்டும்தான் முன் வைக்குதான்னு டவுட்டாயிப் போச்சு..அதுனால இந்த வலைச்சூழலுக்கு, நான் மேல எயுதனது சரியா பொருந்தும்னு நெனக்கிறேன்... உன்னோட டிபால்ட் எதிரிகளான காலச்சுவடு கோஷ்டிகள திட்டினது மட்டுந்தான், எனக்கு தெரிஞ்சி வலைல நீ காட்ன பகுத்தறிவு ..எவ்ளோ நாளைக்கு இப்படியே திட்டிட்டு இருக்கப்போற?..கொஞ்சமாவது அந்த பார்ப்பனீயம் அப்படிங்கிறத நம்மோடயும் பொருத்தி பாக்க கூடாதான்னு ஒரு கேள்விய எழுப்பினேன்..நம்ம முழுசா வெளிய வந்து (முழுசா இல்லனாலும் கொஞ்சமாவது)அதிகார மய்யம் என்கிற பெருங்கதையாடலை நோக்கி நகரனும்னு சொல்லியிருந்தேன்..இனிமே இந்த மாதிரி விசயங்கள எயுதுனா, உன்ன மாதிரி கூமுட்டை க்கும் புரியுறா மாதிரி எயுத ட்ரை பன்றேன்.

/இங்கு அதிகார மய்யமே பார்ப்பனீயமும் சுஜாதா மாதிரியான ஆபத்துக்களும்தானடா..//

டே பாடு மொதல்ல நீ பெரிய்ய மய்யமா வளர்ந்து நிக்கிறேங்கிறத புரிஞ்சிக்க.. அப்புறம் உன் சீர்த்திருத்த வேலய எல்லாம் ஆரம்பி...

/'உன் முலை சின்னதாயிருப்பதால்தான் கல்யாணம் பண்ணவில்லை' என்றெல்லாம் கதை எழுதுகிற வேலையை மட்டும் பார்./

நீ என்னா பகுத்தறிவு பிரான்ட் மேனேஜரா? இல்ல பார்ப்பன எதிர்ப்புக்கு பேடன்ட் வாங்கி வச்சிருக்கியா? நான் எத எழுதனும் எத எழுதக்கூடாதுன்னு சொல்ல நீ யார்ரா?

அட எவ்ளோ நாளைக்கு தான் இதே எழவுகளா எழுதிட்டு இருக்கிறது..போரடிக்குது மாமு... ஒண்ண மாதிரி அரைவேக்காட்டு முண்டங்களே, தன்ன பெரிய்ய புடுங்கின்னு நெனச்சி ஒளறிக்கொட்டிகிட்டு இருக்க இதே சூழல்ல, நானும் என் பங்குக்கு கொஞ்சம் குப்பய கொட்டுறனே..

எழுதப்பட்ட வரலாறுகளையே சந்தேகிக்கலாண்டா ..இந்த சூழல் அதுக்கான உரிமைய தருது. நீ எம்மாத்திரம்??..எனக்கு ஒரு விசயம் உறுத்திச்சினா அதை குறைந்த பட்ச அடிப்படை மரியாதையோடு கேள்வி கேட்கும் பக்குவம் எனக்கு இருக்கு.. அதே மாதிரி என்ன யாராச்சிம் கேள்வி கேட்டா, நெதானமா பதில் சொல்ர பக்குவத்தையும் நான் வளர்த்துக்க முயற்சி பண்ணிட்டு இருக்கேன் ...நீயும் முடிஞ்சா பாலோ பண்ணு..இல்ல தாறுமாறா எழுதனும்னு ஆசப்பட்டினா அதுக்கும் ரெடிதான்..இந்த ஆட்டத்த நான் ரொம்ப லைக் பன்றேன் மச்சான்.. நீயும் அடிச்சி ஆடு..ஆனா சம்பந்தமில்லாம அடுத்தவங்கள உள்ள இழுத்து விடாதே..தமிழச்சியும், லக்கியும் சொன்னா மாதிரி உனக்கு கீல / பூலு வளரலன்னுலாம் சின்ன புள்ளத்தனமா சொல்ல மாட்டேன்னு நம்புறேன்..(அந்த பின்னூட்டத்த வெளியிட்டு தன் தார்மீக அறவுணர்ச்சியை நிரூபித்த லக்கி அவர்களுக்கு என் அன்பு)

ஆனா தனிப்பட்ட உம்மேல இருக்க நட்பு எப்பவும் ஒரே மாதிரிதான்.கொளுகைக்கும், பொதுவில இயங்குறதுக்கும்(?), நட்புக்கும்,இருக்க வித்தியாசம் எனக்கு ஓரளவிற்கு புரியும்.. அதுனால ங்கோத்தா! கல்யாணத்துக்கு வாடான்னும் கூப்பிடுற தெனாவட்டு எப்பவுமே எங்கிட்ட இருக்கு..ஆனா அதுக்காக உன் டவுசர கழட்டாம வுடப்போறதில்ல..

இது நீ வாந்தி எடுத்த பாதிக்கான எதிர்வினைதான். இன்னும் பாதி இருக்கு கண்ணா!!..

**சுகுணாவுடனான இக்கருத்தாடல்களை உரையாடல் வடிவில் நிகழ்த்துதலே என் ஆவலாக இருந்தது.ஆனால் அவனுள் மிகுந்திருக்கும் அதிகாரத் திமிர் உரையாடல்களை சாத்தியமாக்கவில்லை.அவனது நடையை ஒட்டி அவனுக்கு இணக்கமான மொழியிலே இந்த எழவுக்களை எழுதித் தொலைக்க வேண்டியதாய் போயிற்று. இதன் தொடர்ச்சியான அடுத்த பாகம் இதைவிட மோசமான மொழியில் எழுதப்படவும் வாய்ப்புகள் இருக்கின்றன.பொது வெளியில் இவ்வாறு நடந்துகொள்வதற்கு மன்னிக்கவும்

லக்கிக்கு: இந்த இடுகைக்கு ஆன செலவு ஒரே ஒரு சிகரெட் அதுவும் எழுதி முடிச்ச பின்னாடி...

(வெளக்குதல் தொடரும்)

ப்ளீச்சிங் பவுடர் போட்டு வெளக்குதல்

நான் இந்த எழவ எயுத தொடங்கின காலத்தில இருந்து இன்னிய தேதி வரிக்கும் நான் செஞ்ச ஒரே தப்பு.. பிலசர் ஆப் டெக்சட நோக்கி நவுரும், வலைஒலக பிரமுகர், பிதாமகர், ஒலகத்துக்கு உண்மய சொல்ற நடுவர், பதிவர், நண்பர், லக்கி லுக்கின் பின்னுட்டத்தை ஒரு மணி நேரம் லேட்டா வெளியிட்டது மட்டுந்தான்னு எல்லாம் வல்ல சமூகத்திடம் சொல்லிக்கிறேனுங்க..

அத்தோட இல்லாம நண்பர் பைத்தியக்காரனுக்கு சமீபத்திய லக்கி இடுகையின் பின்னூட்டத்த படிக்கவும் பரிந்துரைக்கிறேனுங்க...

அத்தோட இல்லாம மாமு பொட்டீ
நான் ஒரு பின்நவீனத்துவ பெரமுகன் இங்க நான் வாந்தியெடுக்கிறதே எனக்கு சொந்தமில்ல எவனோ வாந்தியெடுக்கிறதுலாம் எனக்கு எப்படி சொந்தமாவும்???

அதுவுமில்லாம ஒரு gay ஒரு ஆண முத்தமிடுறதுக்கும் ஒரு ஆண் இன்னொரு ஆண முத்தமிடறதுக்கும் நெறய வித்தியாசமிருக்கு பா ..இந்த வித்தியாசம்லாம் ஒனிக்கு புரியனும்னா நீ அ.மார்க்ஸோட வித்தியாசங்களின் அரசியலை படிச்சிருக்கனும் அத படிக்காம நீ எப்படி அவுஸ்திரேலியா போலாம்..??? இது எம்புட்டு பெரிய குத்தம் தெரியுமா?

இந்த எழவுக்கான செலவு : ஒரு பாட்டில் ஃபோஸ்டர் + டபுள் ஓல்ட் மங்க் + டபுள் ஓல்ட் மங்க் + டபுள் ஓல்ட் மங்க் + டபுள் ஓல்ட் மங்க் + சிங்கிள் ஓல்ட் மங்க்

நேரங்கெட்ட நேரத்துல ரொம்ப செலவு வைக்காதீங்கயா....

Friday, March 14, 2008

வார்த்தைகளில் வரைதலும் தொடர்புகளற்ற குறிப்புகளும்

வியாழக்கிழமை கடவுளர்களை ஜமாலன் புதன் கிழமையே நலம் விசாரித்ததால் சில வாரங்களாய் தலைவைத்துப் படுக்காதிருந்த கராமாவிற்கு தனியாய்ச் செல்ல வேண்டியதாய்ப் போயிற்று. தனியே குடிப்பதை விடச் சலிப்பானது எதுவுமில்லை.இன்றைய மாலையை நுரை பொங்கத் ததும்பி வழியும் பொன்னிற மதுவினைக் கொண்டு குளிப்பாட்டுவோம் ரீதியிலான கிளிட்சே க்களை முனகியபடியிருந்த சமயத்தில் என் எதிர் இருக்கையில் ஓர் இந்தியத் தம்பதிகள் வந்தமர்ந்தனர்.Henican pitcher யைத் தருவித்த கணவர் விரைந்து குடிக்க ஆரம்பித்தார்.அவரின் மனைவி அவரின் குப்பியில் இரு சிப் அடித்துவிட்டு வேண்டாமென்பதாய் தலையசைத்தார்.பின் கழிவறை செல்ல எழுந்திருந்த மனைவியுடன் கழிவறை வரைச் சென்றார்.மனைவி உள்ளே சென்ற சிறிய இடைவெளியில் பிலிப்பைன் பார்டெண்டரிடம் அவசரஅவசரமாக ஒரு லார்ஜ் கேட்டார்.பொறுமையில்லாது அவரே எழுந்து சென்று லார்ஜை வாங்கி வந்து பியர் ஜாரில் உற்றிவிட்டு உடனே பணத்தையும் கொடுத்துவிட்டார்.இந்த லார்ஜ்ஜை பில்லில் சேர்க்க வேண்டாமெனவும் கேட்டுக்கொண்டார்.திரும்பி வந்த மனைவியிடம் இன்னொரு சிறிய டின்னுக்கான ஸ்பெசல் அனுமதி வாங்கிக்கொண்டு அதையும் குடித்து முடித்தார்.ஆக ஒரு பிட்சர்,ஒரு லார்ஜ்,ஒரு டின் பியர் இதைக் குடித்து முடிக்க அவர் எடுத்துக் கொண்ட நிமிடங்கள் பதினைந்திலிருந்து இருபது நிமிடங்களே. இதற்கு நடுவில் அவர் மனைவியை சமயோசிதமாய் ஏமாற்றவும் மெனக்கெட்டார்.இந்த நிகழ்வு அவரின் மேல் ஒரு பரிதாபத்தை வரவைத்தது.எங்கேயோ,ஏதோ,எவையோ நம்மை திருப்திபடுத்திக்கொண்டிருக்கிறது அல்லது எதையோ திருப்திபடுத்த நாம் எந்தவகையிலாவது மெனக்கெட்டுக் கொண்டிருக்கிறோம்.இது போன்ற ஒரு சூழலில் என்னை வைத்துப் பார்த்துக்கொண்டிருந்தேன் இப்படி ஒரு சூழலை எதிர்கொள்ள வேண்டுமென்றால் சிலவற்றை எவ்வித தயக்கமுமில்லாமல் விட்டொழிவதே நேர்மையான செயலாய் இருக்க முடியும்.

*********

அது எதிர்பார்த்திராத ஒரு சிறிய கண முடிவில் குறுக்கு வெட்டாய் என் இடது கரத்தை அதன் அடிவயிற்றில் இறக்கினேன்.மீண்டுமது சுதாரித்து எழுவதற்குள் இந்த எல்லையைக் கடந்துவிட வேண்டும்.இதுநாள்வரை குடித்திருந்த பியர்கள் ஓடவிடாமல் செய்துவிட்டிருந்தது. முதன்முறையாய் மதுவினைச் சபித்தபடி ஓடிக்கொண்டிருந்தேன்.தொலைவில் அது நெருங்கும் சப்தங்கள் கேட்டபடியேயிருந்தது. இந்தச் சாலைசந்திப்பில் கலந்துவிட்டால் போதும் பின்பு அதனால் தொடரமுடியாது...தொலைவில் மிகப் பிரகாசமான வெளிச்சப் பந்துகள் முன்னோக்கி நகர்ந்து வந்தது.வாகனமாயிருக்கும் என சாலையின் ஓரமாய் ஒதுங்கினேன்.அருகினில் வர வர வெளிச்சம் மிகப் பிரம்மாண்டமானதாயிற்று வேனிற்கால சூரிய உதயத்தில் தகிப்புகளோடு மேலெழும் சூரியனின் உக்கிரத்தைக் கொண்டிருந்தது. தாங்கமுடியாமல் கண்களை மூடிக்கொண்டேன்.வெளிச்சம் நீண்டு, பரவி, சூழ்ந்து என் தலைமுடியைப் பிடித்து தூக்கி தனது வாயினுள் போட்டுக்கொண்டது.

**********

அந்திவானத்தை கண்ணிமைக்காமல் பார்ப்பது நிறைவைத் தருமொரு செயல்.மேகத்தைக் கவனித்தல் என்றொரு ஓஷோ தியான முறையுமிருக்கிறது. திரண்ட, இளகிய, மென்மையான, இழைகளோடிய, நீல, வெள்ளை நிற மேகங்களை வெளிர் நீல வானப் பின்னனியில் கண்ணிமைக்காது படுத்தபடி பார்த்துக்கொண்டிருப்பது மிகவும் இணக்கமான செயல்.இந்த நாட்டில் அத்தனை மேகங்களில்லை..வானமும் அத்தனை நீலமாய் இருக்காது.. மேலும் வானம் வெகு தொலைவிலிருப்பது போன்ற உணர்வையும் தரும்....குளிர்காலங்களில் மட்டும் திரெண்டெழுந்த மேகங்களைப் பார்க்கலாம்....அப்போது வானமென்னவோ நெருங்கி வந்திருப்பதாய்த் தோன்றும்...இரண்டு நாளைக்கு முன்பான என் வானம் தப்புதலில் ஒரு பறவையைப் பார்த்தேன்...முதலில் அது பறவை எனத் தோன்றவில்லை பட்டம் என்கிற வடிவத்தையே நினைவூட்டியது.... இருள் தொடங்கியிருந்த மாலையில் கண்களைக் கூர்ந்து பார்த்ததில் அஃதொரு பட்டமில்லை என்பது உறுதியாயிற்று....பறவை என நம்புவதா வேண்டாமா? எனற யோசனையோடு உற்று நோக்கியதில் அது பறவையேதான்...இறக்கைகள் இல்லாத பறவை.. ஆம்! அதற்கு இறக்கைகள் இல்லை....மேலும் அது பறக்கவும் இல்லை... மிதந்துகொண்டிருந்தது.. எவ்வித அவசரமுமில்லாமல் மிக நிதானமாக மிதந்துகொண்டிருந்தது.. மனதில் மெல்லியதாய் குளிரின் சாயல்களில் பயம் படரத் துவங்கியது.. அந்த மிதந்த பறவை எனது மாடியின் கிழக்குத் திசையிலிருந்துதான் வந்தது.. காற்றே இல்லாத வெளியில் அந்நீளமான சற்று அகலமான பறவை மசூதியின் கோபுரத்தை சுற்றி மிதந்து பின் மெல்ல மீண்டும் நான் நின்றிருந்த வாக்கில் திரும்பி மிதந்து வந்தது.. என்னில் பதட்டம் சீராய் கூடியது.. அதை இன்னும் கூர்ந்து நோக்கினேன்.. மழலையின் பழகத் துவங்கும் நடையின் சாயல்களில் அது அசைந்து,மிதந்து வந்தது ..கீழே இறங்கிப் போய்விடலாமா என்ற எண்ணம் மிகத் துவங்கிய கணத்தில் அது தன் திசையை மாற்றியது.. பின் மெல்ல இருள் புள்ளியில் கலந்து மறைந்தது... அடுத்தநாள் காலையை புகை மூடியிருந்தது.சில கார்கள் எரிந்தன... சில உயிர்கள் பிரிந்தன... சிலர் தன் உடல் பாகங்களை இழந்தனர்...நான் அந்த பறவையை வரைய முயன்று தோற்று வார்த்தைகளை இறைத்துக் கொண்டிருக்கிறேன்..

Thursday, March 13, 2008

சுகுணா திவாகர் மற்றும் அய்யனார் பிரதிகளினூடாய் அதிகார மய்யங்களை எதிர்த்து எழுதப்படும் பிரதிகளில் கட்டமைக்கப்படும் அதிகாரங்கள்

சுகுணாவின் சமீபத்திய பிரதியொன்றில் அவர் சுட்டியிருந்த பார்ப்பனிய எதிர்ப்பு மிகப்பெரிய இளக்காரத்தையே வரவைத்தது. முதலில் பார்ப்பனியம் என்கிற சொல்லாடல் மூலமாக கட்டமைக்கப்படும் உண்மை என்னவென நோக்குகையில் அஃதொரு அதிகார மய்யத்திற்கான எதிர்ப்பு என்பதுதான் உண்மையான விழைவாய் இருக்கமுடியம்.பார்ப்பனியம் என்ற சொல்லாடல் மீது எனக்கு மிகப்பெரிய மனக்கசப்புகள் இருக்கின்றன.மறைமுகமாக இச்சொல்லாடல் ஒரு குறிப்பிட்ட சாதியைக் கட்டமைப்பதால் இச்சொல்லாடல் ஒற்றைப்பரிமாணத் தன்மைக் கொண்டது என்பதாய் நம்புகிறேன்.நவீன யுகம் சிதைந்து விளிம்பு நிலை கதையாடல்களை பேசத்துவங்கிய காலகட்டத்தில் பார்ப்பனிய எதிர்ப்பென்பது மிகச்சக்தி வாய்ந்த இடது சாரித் தன்மையாய் கோலோச்சியது.அப்போது அவ்வெதிர்ப்புகள் மிகத் தேவையானதுமாய் இருந்தது.ஆனால் பின்நவீன சூழலில் இப்பார்ப்பனீயம் என்கிர சொல்லாடல் விஜயகாந்த படம் பார்த்த இண்டர்வெலில் ஒரு நோஞ்சானைக் குத்துவிடுவது என்பது போன்ற படிமத்தையேக் கட்டமைக்கிறது இப்போதையை தேவை / இப்போதைய சொல்லாடல் அதிகார மய்யத்திற்கெதிரான சிறுகதையாடல்கள் என்பதே சரியான பார்வையாய் இருக்க முடியும்.இன்னமும் ஒரு குறிப்பிட்ட பிரிவினரை மட்டுமே முன்னிறுத்தி நமது அதிகாரங்களை நிலைநாட்டிக் கொள்வதென்பது நேர்மையற்றதாய் உண்மைக்குப் புறம்பானதாய் மட்டுமே இருக்க முடியும்..

ஆகவே பார்ப்பனியம் என்பதிலிருந்து நகர்ந்து அதிகார மய்யம் என்கிற பெருங்கதையாடலைக் கைக் கொள்ள வேண்டியது மிக மிக அத்தியாவசியமானதாய் / மிகப்பிரம்மாண்டமானதாய் முன் நிற்கிறது.இந்த அதிகாரமய்யமென்பது நம் எல்லாரிடமும் நமக்கேத் தெரியாது வேரூன்றிக் கிளைத்துப் பரவி தன் நீண்ட பற்களால் கண்ணில் படுபவற்றைக் கிழித்துப் போடுகிறது.இதிலிருந்து நாம் தப்ப முடியாது.விலங்கின் வளர்ந்த நிலையான மனிதனென்பவன் தன்னுடைய இயலபுச் சூழலிலிருந்து வெளிவரல் என்பது மிகப்பெரிய போராட்டமே. நாமெல்லாரும் வளர்ந்த/வளர்ச்சியடைந்த மிருகங்களென்பதால் மிருகங்கள் தனக்கே உரித்தான அதிகாரங்களை தான் அடக்கியாள வேண்டிய போராட்டங்களை முன் நிறுத்துவதால் நாம அனைவரும் அதிகார மய்யத்தின் பிரதிகளே..

தன்னளவில் இதைப் புரிந்து கொள்வதென்பது இயலாத காரியமென்பதால் பிறிதொருவர் சுட்டி புரிந்து கொண்ட அதிகார பிம்பங்களை இங்கே முன் வைக்கிறேன்..சமீபத்தில் நண்பர் ஓவியர் அசோக்குடனான உரையாடல்களின் முடிவில் அவர் வைத்த வாதங்கள் மிகப்பெரிய அதிர்ச்சியை வரவைத்தது. ஓவியம, பிரதி இவ்விரண்டுக்குமான வேற்றுமைகளை அவர் சொல்லிக்கொண்டிருந்தார். நான் பிரதியை முழுமையாய் புரிந்து கொள்ள பிரத்திக்கான ஓவியங்கள் எந்த அளவு துணையாய் இருக்கிரதென சிலாகித்துப் பேசிக்கொண்டிருக்கையில் அவர் பிரதிக்கான ஓவியமென்பது கிடையவே கிடையாது.. நீ உன்னுடைய பிரதியை முன்னிருத்தி, அதிகாரத்தைக் கட்டமைத்து உன் பிரதியைப் பிரதானப்படுத்தி அவ்வோயியங்களை பயன்படுத்திக் கொள்கிறாயே தவிர ஓவியமென்பது ஓவியமாகவே இருக்கிறது... அது உனக்கானதில்லை... அது அதற்கானது.. எனச் சொல்லி என்னில் அதிரச்சிகளை உண்டாக்கினார்.நான் என் பிரதிகளை எவரோக்களின் ஓவியங்களினூடாய் காட்சிப்படுத்துகிறேன் இஃதொரு அதிகார மய்யத்தின் மிக ஆணவமான நடவடிக்கையே என்பதை உணர்ந்த கணத்தில் நான் மிகவும் அதிர்ந்து போனேன் என் இதுநாள் வரைக்குமான நிலைப்பாடென்பது சிதைந்து போன சிதைவுகளை உள்ளடக்கிய ஒன்றானதாய் இருந்து வந்திருக்கிறது. மிகக் குறைந்த பட்ச நியாயமென அவ்வோவியம் எங்கிருந்து எடுக்கப்பட்டதென்கிற சுட்டிகளைக் கூட கொடுக்காதிருந்தது என்னை குற்ற உணர்வுகளின் கீழ் தள்ளியது..

நானொரு அதிகாரமய்யப் பிரதி..

சுகுணா தமிழச்சியின் பதிவொன்றின் பின்னூட்டத்தில் என் பின்னூட்டத்திலிருந்த வீரம் என்பதை இவர் அவர்களுக்கு சொல்லித் தர வேண்டியதில்லை என்கிற வாக்கியத்தை மட்டும் எடுத்துக்கொண்டு பிரச்சினைகளின் அல்லது சர்ச்சைகளின் கரு என்னவென்பதே தெரியாது வீரம் என்றால் என்ன? என்றொரு பின்னூட்டத்தை இட்டிருந்தார் இதில் பல்லிளித்த அதிகார மய்யம் மிகக் கூர்மையான பற்களைக் கொண்டிருந்தது.ஒரு பிரதியினை முழுமாய் வாசிக்காது அதன் எதிர்கருத்துகளை சிதைப்பதென்பது அதிகார மய்யத்தின் செயல்பாடே.. தெரிந்தோ தெரியாமலோ அவர் அதை நிறுவியிருந்தார். அதனோடு மட்டுமில்லாது அவர் சமீபத்தில் எழுதியிருந்த பிரதி நீர்த்துப்போன நோஞ்சானைக் குத்துவிடுகிற செயலாகவே இருந்ததென்பது என் அனுமானமாய் இருக்கிறது.

இனிமேலும் பார்ப்பனீயம, சுரா, சுஜாதா என ஜல்லியடிததுக் கொண்டிருப்பதிலிருந்து மீண்டு அதிகார மய்யம் என்பதினை நோக்கி நகரத் துவங்குவோம. அதற்கு முதலில் நம்மளவில் தூக்கலாய் நிற்கும் அதிகாரத்தினைச் சிதைப்போம்.இப்போதைய வலைச்சூழலில் மிகப்பெரிய அதிகார மய்யமென நான் உணர்வது தமிழச்சி பதிவுகளையும் அதற்கு ஒத்து ஊதும் திராவிட ப்ளா ப்ளாக்களை மாத்திரமே. பார்ப்பனியத்திற்கெதிரான திராவிடமென்பது தன்னளவிள் இன்னொரு பார்ப்பனியமாக வளர்ந்து நிற்பது மிகவும் ஆபத்தானது..

சற்றுத் தாமதமான பின்குறிப்பு: இப்பதிவிற்கு வரும் / வரப்போகும் பார்ப்பனீய சார்பு பின்னூட்டங்களுக்கு : இப்பிரதியில் நான் சொல்லியிருப்பதெல்லாம் / சொல்ல வந்திருப்பதெல்லாம் பார்ப்பனீய எதிர்ப்பு நிலைப்பாடே இஃதொரு ஒற்றைப் பரிமாணமாய் இருப்பதின் அபாயங்களைச் சுட்டியிருக்கிறேனே தவிர சார்பு நிலைப்பாடில்லை.எந்த ஒரு வடிவிலும் அதிகாரத்தினை மகிழச் செய்ய நான் எப்போதுமே விரும்புவதில்லை

Monday, March 10, 2008

தமிழச்சிக்காவுக்கு கோனார் நோட்ஸ்

கோணேஸ்வரிகள்...!

நேற்றைய அவளுடைய சாவு -
எனக்குவேதனையைத் தரவில்லை.
மரத்துப் போய்விட்ட உணர்வுகளுக்குள்
அதிர்ந்து போதல் எப்படி நிகழும்.
அன்பான என் தமிழிச்சிகளே,
இத்தீவின் சமாதானத்திற்காய்
நீங்கள் என்ன செய்தீர்கள்!?ஆகவே:
வாருங்கள்உடைகளைக் கழற்றி
உங்களை நிர்வாணப்படுத்திக் கொள்ளுங்கள்
என் அம்மாவே உன்னையும் தான்.
சமாதானத்திற்காய் போரிடும்
புத்தரின் வழிவந்தவர்களுக்காய்
உங்கள் யோனிகளைத் திறவுங்கள்.பாவம்
அவர்களின் வக்கிரங்களை
எங்கு கொட்டுதல் இயலும்.
வீரர்களே! வாருங்கள்
உங்கள் வக்கிரங்களை தீர்த்துக் கொள்ளுங்கள்.
என் பின்னால்என் பள்ளித் தங்கையும் உள்ளாள்.
தீர்ந்ததா எல்லாம்
அவளோடு நின்றுவிடாதீர்!
எங்கள் யோனிகளின் ஊடே
நாளைய சந்ததி தளிர்விடக்கூடும்.
ஆகவே:வெடிவைத்தே சிதறடியுங்கள்
ஒவ்வொரு துண்டுகளையும்
கூட்டி அள்ளி புதையுங்கள்
இனிமேல் எம்மினம் தளிர்விடமுடியாதபடி.
சிங்கள சகோதரிகளே!
உங்கள் யோனிகளுக்குஇப்போது வேலையில்லை.

தமிழச்சிக்கா!

இந்த கவித ல இன்னா சொல்லிகிறாங்கன்னா ஒன்னால இம்புட்டுதான் முடியுமா? ங்கோத்தா இதோ நிக்கிறோம் பார்ரா தில்லா!.. உன்னால ஆவறத பாத்துக்கோ னு சொல்லிக்கிறாங்கோ....இது 1000000 மடங்கு அதிகமான எதிர்ப்பு..இந்த மாதிரி ஒரு தைகிரியம் யாருக்குமே வராது ..இந்த மாதிரி எதிர்ப்புக்கு நேரா எம்புட்டு பெரிய்ய வெடிகுண்டும் சொம்மா நிக்க கூட முடியாது.

எதிர்ப்புங்கிறது வெத்தா பேஏஏஏ னு கத்தறது மட்டும் இல்ல யக்கா... நிக்கிறோம் பார்ரா தில்லான்னு சொல்றது எல்லாதையும் தாண்டி நிக்கிற பெரிய்ய எதிர்ப்பு..நான் திரும்ப திரும்ப ஒங்ககிட்ட ஒண்ணே ஒண்ணு சொல்லிக்கிறேன் தயவு செய்ஞ்சி எல்லாத்தையும் மேலோட்டாமா பாக்காதீங்க..பெரியாரு தோழரு மாதிரி இல்ல இந்த மேட்டரு தயவு செய்ஞ்சி வுட்ருங்கோ...

பொழுது போவலன்னா கும்புதல், குறி பார்த்து சுடல், இப்படி புச்சு புச்சா கும்பு வார்த்தைகளை லக்கி அன்ட் கோ கூட சேர்ந்து கண்டு புடிங்கோ ... அட அவிங்களும் ஆட்டைக்கு வரலன்னா கும்மில ஒரு பதிவு போட்டு பகுத்தறிவு கும்மி அடிப்போம் நானும் வர்ரேன்.. அண்ணாச்சி, குசும்பன், கதிருன்னு மக்க எல்லாரையும் கூட்டிகினு வர்ரேன் தயவு செய்ஞ்சி இந்த மாதிரி உணர்வுபூர்வமான வெசயங்களோட உங்க பொரட்சி கள புகுத்தாதீங்க..

எவ்ளோ கஷ்டபட்டு அடக்கிபாத்தேன் தமிழச்சிக்கா ஆனா முடியல.. கொட்டிட்டேன்..செல்லா ஒங்களுக்கு மேட்டர் கெடச்சிடுச்சி நீங்க ஆரம்பிக்கலாம்..

Saturday, March 8, 2008

தனிமையின் நிழல் குடை - அகிலன்


பின்
ஓர் இரவில்
துப்பாக்கியின் கண்கள்
அவன் முதுகினில் நிழலெனப்படிந்து
அவன் குரலுருவி
ஒரு பறவையைப் போல்
விரைந்து மறைந்ததாய்
அவன் குழந்தைகள் சொல்லின


தமிழ்சூழலை வெற்றுச் சொற்களால், பகட்டால், விளம்பர மிகைப்படுத்தல்களால் நிறைக்கும் மாதிரிகளின் குரல்வளையை / கைவிரலை நெறிக்கத் தோன்றும் அதே சமயத்தில் உண்மைக்கு சமீபமான எழுத்துக்களை கொண்டாடத் தோணுகிறது.தனது வாழ்வை கிசுகிசுப்பான குரலில் ஈரத்தோடு பதிவிக்கும் கவிஞனை இறுக அணைத்துக்கொள்ளலாம். மிகுந்த அன்பும் நெகிழ்வும் கொண்ட வினோத படைப்பு கவிஞனாகத்தான் இருக்க முடியும்.அகிலனின் கவிதைகள் வலைப்பக்கத்தில் படிக்கும்போது ஏற்படுத்திய உணர்வுகளை விட முழுத் தொகுப்பாய் படிக்கும்போது அதன் வீர்யம் சற்று அதிகமாய்த்தான் இருந்தது.

மழையையும், வண்ணத்துப் பூச்சியையும், அன்பையும், நெகிழ்தலையும், துயரையும், வலிகளையும் அழைத்து வந்திருக்கும் இன்னொரு கவிஞன்.இவனுக்கான பின்புலமாய் அலைவுகளுக்குட்பட்ட வாழ்வும், துப்பாக்கி சப்தங்களும், நெருக்கமான மரணங்களும், அந்நியத்தின் இணக்கமற்ற குரூரமும், அடையாளங்களுக்கான தவிப்புகளுமாய் இருந்திருக்கிறது.மொழியில் வாழ்வைப் பொதிந்துவைக்கும் அல்லது பொய்மை/பூச்சுகளைத் தவிர்க்கும் கவிதைகளோடு என்னால் நெருக்கமாக ஒட்டிக்கொள்ள முடிகிறது.உரத்த குரலில் பேசுவது எப்போதும் நிம்மதியின்மையைத் தருகிறது.கிசுகிசுப்புகளாய் சொல்லப்படும் குருதி வாடை கலந்த கவிதைகள் என்னமோ செய்து விட்டுப் போகிறது.

அகிலனின் முதல் கவிதைத் தொகுப்பை மின் நூலாகத்தான் படிக்க முடிந்தது. இக்கவிதைகளை எந்த ஒரு சட்டகத்துக்குள்ளும் நான் அடைத்து வைக்க விரும்பவில்லை.தனி மனிதனின் நுண்ணுணர்வுகளை மொழியாக்கும்போது அதை விமர்சிக்கவோ, இப்படி இருந்திருக்கலாம், அப்படி இருந்திருக்கலாம் ரீதியிலான மேதாவித் தனங்களை வெளிப்படுத்திக் கொள்ளவோ எனக்கு விருப்பமில்லை. மேலும் இக்கவிதைகளிள் அதிகமாய் விரவி இருக்கும் தன் வயத்தன்மை மிகுந்த பரிவுகளை உண்டாக்கி கவிஞனை மிக நெருக்கமாய் உணரச் செய்துவிடுகிறது.வடிவ நேர்த்தி, ஒழுங்கு, கவித்துவம் என்பதின் மீதான நம்பிக்கைகள் எனக்கு எப்போதும் இருந்திராதது மிக வறட்சியான கவிதைகளையே எழுதத் தூண்டி இருக்கிறது.இக்கவிதைகளில் எனக்குப் பட்ட கச்சிதத் தன்மை படிக்க ஏதுவாகவும் கனவுத் தன்மையை உயிர்ப்பிப்பதாகவும் இருந்தது...

வெயில் சார்ந்த வாழ்வு மழையின் மீது காதலை,ஏக்கத்தை அதிகரித்துப் போகிறது. மழையைப் பற்றி எழுதாதவனை கவிஞனில்லை எனச் சொன்னாலும் அதை புன்முறுவலோடு ஏற்றுக்கொள்ளலாம் மழையின் மீதான நெகிழ்வை அகிலனின் மொழி கதவுகளைப் பிறாண்டும் பிராணி என்கிறது.இப்படிமம் மழையை சக உயிராக நினைக்கும் நெகிழ்வான மனதை கண் முன் நிறுத்துகிறது.வண்ணத்துப் பூச்சிகள், சிட்டுக்குருவிகள், முத்தம், கொலுசு என சன்னமாய் பெய்து கொன்டிருக்கும் மழையை நினைவூட்டும் கவிதைகள் சில பக்கங்கள் தாண்டியதும் குரூரத்தைப் பேசுகிறது. வன்மத்தை, அதிகாரத்தை, நசுக்கப்படுதலை, எதிர்க்கத் திராணியற்று போதலை பேசத் துவங்கியதும் கவிதையின் மொழியில் இறுக்கம் கூடுகிறது.குறிப்பாய் காட்டின் நினைவு என்கிற கவிதை திரும்பத் திரும்ப வாசிக்க வைத்தது.அந்த கச்சிதமான எதிர்ப்பு, மிகக் குறைவான/சன்னமான ஆனால் அழுத்தமான எதிர்ப்பு எல்லாவற்றுக்குமான காரணங்களை சொல்கிறது.

எம்மிடம்
பை நிறையக் கனவுகள் இருந்தன
வேரெதையும் எடுத்துக்கொள்ளவுமில்லை
விட்டுச்செல்லவுமில்லை
கொஞ்சம் விரோதங்களைத் தவிர..
கவிதை மய்யங்களின் சீரான வளர்ச்சி மொழியின் வசீகரத்தைத் தவிர்த்திருக்கிறது தவிர்ப்பது தேவையானதும் கூட. வீர்யமான கவிதைகளுக்கான காலமென இச்சூழலைச் சொல்லலாம் புனைவை நோக்கி நகர வேண்டிய நிர்பந்தத்திலும் நாமிருப்பது அல்லது புனைவின் மீதான விருப்பங்களில் நாமிருப்பது மிகவும் ஆரோக்கியமானது. எழுதப்படாத சொற்களும் தாள்களும் புனையும் தளம் விநோதமானது

தன் பின்னலைத் தளர்த்திய
ஒரு கிழவியின்
சாபத்தின் சொற்கள்
ஊரை நிறைத்தது

பின்பொரு நாள்
பூவரசம் வேலிகளைத்
தறித்தபடியெழும் கோடாரின் கரங்கள்
ஒரு குழந்தையிடமிருக்கக்
கண்டேன்
அம்மம்மாவின் சுருக்குப் பை மிக அழகான கிராமத்து வாழ்வை மிகுந்த ரசனைகளோடு சொல்கிறது
தும்புமிட்டாஸ்காரனின்
கிணுகிணுப்பிற்கு
அவிழ்கிற அம்மம்மாவின்
சுருக்குப் பை போல
அவிழ்ந்து கிளம்புகின்றன
ஞாபகங்கள்
கடவுள், துரத்தப்பட்ட ஆடு, மதங்கொண்ட நிலவு போன்ற கவிதைகள் சிறுகதைக்கான காட்சிகளை உள்ளடக்கியிருக்கிறது.கவிஞனுக்கு இருக்கும் பொது குணமாக கழிவிரக்கத்தையும் குற்றவுணர்வையும் சொல்லலாம் அல்லது மிகுந்த குற்ற உணர்வுகளும், கழிவிரக்கமும், பிரிவும், துயர்களும் மாத்திரமே கவிதை எழுதத் தூண்டுகிறதோ என்னமோ..பிறழ்வில் முடித்திருக்கும் அகிலனிடமிருந்து பிறழ்வின் வசீகரங்களை, பிறழ்வின் மூலமாய் நிகழ்த்தப்படக்கூடிய சாத்தியங்களை, புது மொழிகளை எதிர்பார்க்கலாம் எனத்தான் தோன்றுகிறது.நல்லதொரு கவிதை அனுபவத்தை தந்த அகிலனுக்கு வாழ்த்துக்களும் அன்பும்.

Featured Post

King Pele : அஞ்சலி

சனிக்கிழமை மாலை பயல்கள் ப்ரஸீலின் கால்பந்தாட்ட வீரரான பெலே வின் இழப்பைக் குறித்துக் கேட்டார்கள். அவர் எனக்கு முந்தைய தலைமுறை என்பதால் அவர் வ...