Friday, February 29, 2008

கூடு தப்பிப்போய் பைத்தியமாதல்


மழைக்காலங்களின் மேல் எப்போதுமொரு காதலிருக்கிறது.மேகங்கள் சூழத் துவங்கும் பகல்பொழுதொன்றில் உள்ளிருந்து ஏதோ ஒன்று விழித்துக்கொள்ளும்.செய்து கொண்டிருக்கும் எல்லாவற்றையும் புறந்தள்ளி கற்பனைகளில் மூழ்கத் துவங்குவேன்.மிகச்சரியாய் என் பால்யங்களின் தடம் கண்முன்விரியும்.பதிமூன்று வயது வரை நானொரு மலைக்கிராமத்தில் வசித்து வந்தேன் மேற்குத் தொடர்ச்சி மலையின் சரிவில் மூங்கில் தோப்புகள் அடர்வாய் செழித்து வளர்ந்திருந்த பகுதியை ஒட்டி எங்களின் குடிசை இருந்தது.விடியல்களில் பனி மூங்கிலின் இலை மீது படிந்திருக்கும். என் பெயர் செதுக்கியிருக்கும் மரமொன்றின் அடியில்தான் நான் சிறுநீர் கழிப்பேன். உடல் சிலிர்த்துக் குலுங்கி வெளிப்படும் சூடான சிறுநீர் எத்தனைக் கிளர்ச்சி!மெல்ல மரத்தை உலுக்கும்போது சிதறுண்ட பனித்துளிகள் என் தலைக்கேசம் தொடும்.மீண்டுமொருமுறை உடல் சிலிர்த்துப் போகும்.மலையின் மீது கவிழ்ந்து தூங்கும் மேகக் கூட்டங்களை கல்லெறிந்து எழுப்புவேன்.அப்போதிருந்த மனநிலையில் மேகங்களுக்கு வலிக்குமா? என்பது பற்றிய பிரக்ஞை எனக்கு இல்லாதிருந்தது.எத்தனை முறை கல்லெறிந்தாலும் மேகங்கள் ஒருபோதும் கோபித்துக் கொண்டதில்லை.மெல்ல தலை எழுப்பிப் பார்த்து மரங்களின் வழி இறங்கத் துவங்கும்.பின்பு அக்கூட்டங்களோடு சேர்ந்து விளையாடப் போவேன்.அருவிகளில் குதித்து விளையாடுவதுதான் எனக்குப் பிடித்தமான விளையாட்டாக இருந்தது.

அருவி மிகப் பெரிய வடிவினள்.மலையின் எந்தச் சரிவிலிருந்து வருகிறாள் என்பது எவருக்கும் புலப்படாததாய் இருந்து வந்தது. அவளது விரிந்த உடலின் ஒவ்வொரு பாகத்திலிருந்தும் வழிந்து கொண்டிருந்து நீர். அருவி மிக மோசமானவள். சிறுவர்களைக் கண்டால் அவளுக்குப் பிடிக்காது.நான் மட்டும் எப்படியோ அவளின் அன்பைப் பெற்றிருந்தேன். என்னை மட்டும் அவளது அந்தரங்கப் பிரதேசங்களுக்கு கூட்டிப் போவாள்.மேகக்கூட்டங்கள் தொலைவிலிருந்தபடியே அவளின் பிரம்மாண்டத்தில் மனம் பிறழ்ந்து தன்னை அவளுக்குள் மூழ்கடித்துக் கொள்ளும்.அருவி ஒரு தாய், அருவி ஒரு காதலி,அருவி ஒரு காமுகி,அருவி ஒரு சகோதரி,அருவி ஒரு பெண்,அருவி ஒரு வேசி,அருவி எல்லாப் பெண்ணின் வடிவமுமாய் என்னை அரவணைப்பாள் நான் திக்குமுக்காடிப்போவேன். எங்கிருக்கிறேன் என்பது மறந்துபோவேன். மேகக்கூட்டங்கள் மலையின் சிரசில் கவிழ்ந்திருப்பது போல் நான் அருவியின் தனங்களில் முகம் புதைத்துத் தூங்கிப் போவேன்.முலைகளில் முகம் புதைப்பதென்பது உன்னதமானது.

பிறகெப்போதுமந்த அரவணைப்பும் பாதுகாப்பும் கிடைக்கவே இல்லை நகரத்தில் எவரையும் எனக்குப் பிடிக்கவில்லை.என்னையும் எவருக்காவது பிடித்துவிடுமோ என நடுங்கியபடி நகரின் இருளான பிரதேசங்ககளில் என்னைப் புதைத்துக்கொள்கிறேன்.புதைந்து, பயந்து ,நடுங்கி, பதபதைத்து.....எனக்காக வைக்கப்பட்டிருந்த விஷம் தோய்ந்த பாலை வேறாதாயினும் பூனை அருந்தி இறந்துபோனாலும் நான் கலவரப்படத் துவங்குகிறேன் குற்ற உணர்வுகளை நிரப்பிக் கொள்வதில் எனக்கு நிகர் எவருமில்லை நானொரு குற்ற உணர்வின் பிறப்பிடம்.

ரெட்லேபிளோடு ஸ்மைரைன் ஆஃப் அடித்திருக்கிறார்களா? அது ஒரு நல்ல காம்பினேசன்.பியர் குடித்து முடித்தவுடன் டகீலா அடித்துப் பாருங்கள் அதும் கருப்பு தேசத்துப் பெண் தன் பிரத்யேக வாசனைகளோடும் பருத்த ஆகிருதியோடும் உங்கள் உள்ளங்கையினை குவிக்கச் செய்து அதில் உப்பைத் தூவுவாள் நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் ஒரே கல்ஃபில் அடித்து விட்டு உப்பை நாக்கில் தடவிக் கொள்வதே. அந்த நேரத்தில் பக்கத்திலிருப்பவன் அவளை சகிலா என்றாலும் நல்லெண்ணெய் சித்ரா என்றாலும் நீங்கள் ஒப்புக் கொள்ள வேண்டும். மறுத்தால் அஃதொரு நீளமான விவாதத்திற்கு உங்களை இட்டுச் செல்லும்.குடிக்கும்போது விவாதங்களைத் தவிருங்கள். மாறாய் கண்ணில் படுபவர்களை நேசிக்கத் துவங்குங்கள்.உடன் வந்த நண்பனை முத்தமிடுங்கள்.அல்லது பழைய காதலியை முத்தமிட்டட தருணத்தைப் பகிர்ந்துகொள்ளுங்கள்

மூளையழிவதும் நமது கூட்டுக்குள் திரும்புவதென்பதும் வெவ்வேறானதில்லை.

அதீத வன்முறையை நான் நேரில் பார்த்ததில்லை. எனக்குத் தெரிந்து என் கண்ணெதிரில் சில விபத்துக்களைப் பார்த்து சில இரவுகள் தூங்காமலிருந்திருக்கிறேன்.மற்றபடி உச்சகட்ட வன்முறை என்பது சில படங்களாக மட்டும் இருந்தது. A Clockwork Orange படம் பார்த்தேன் உச்சகட்ட வன்முறை இதுவாய்த்தான் இருக்கமுடியும்.sinsity யை என்னால் comical லாகத்தான் அணுக முடிந்தது.ஆனால் இது அப்படி இல்லை.கையில் ஒரு இரும்புத் தடிகொண்டு சாலையோரக் கிழவனை அடித்துக் கொள்கிறார்கள் தனியாய் ஒருவீட்டினுள் நுழைந்து..இல்லை..என்னால் எழுத முடியவில்லை..நீங்கள் தயவு செய்து இந்தப் படத்தைப் பார்க்காமல் இருப்பது உசிதம்..மீறிப்பார்த்தால் தயாராய் ஒரு பியர் புட்டியாவது கைவசம் இருக்குமாறு பார்த்துக்கொள்ளுங்கள்.Maria Full of Grace யாராவது பார்த்தீர்களா?..என்னா அழகு அந்தப் பொண்ணு!..போதை மருந்துக் குப்பிகளை டாய்லட் பிள்ஷ் ல இருந்து எடுத்து பேஸ்ட் தடவி மீண்டும் முழுங்குவாளே... என்னக் கொடுமையான காட்சி அது.
தேவை/நிர்பந்தம்/சுயம்/fantasy/அலைவுறும் மூளை/ இன்னும் என்னென்ன எழவுக்களோ வாழ்வ குரூரமாக்கிடுதில்ல..எந்த சனியனுக்கும் தெரியாம எங்கவூட்டு வேப்பமரத்துக் கெளயில ஒளிஞ்சிருக்குதுய்யா உண்மையான வாழ்வு!...உங்க வூட்ல கீதான்னு நீதான் பார்த்துக்கனும்..எத சொன்னாலும் கேப்பியா..அடச்சீ ஏஞ்சிப் போ மூதேவி!..

20 comments:

கோபிநாத் said...

அடபாவி மனுஷா...!!!

Anonymous said...

boozeல எழுதுன மாதிரி இருக்கு , வண்முறையின் உச்சகட்டமாக என் நினைவுக்கு வருவது 1.irreversible, 2.death proof 3.cannibal holocaust

கிருத்திகா ஸ்ரீதர் said...

கல்யாணம் வேற ஆகப்போகுது.. ரொம்ப கவலையா இருக்கு அய்யனார்... பிறழும் மனத்தை திசை திருப்பும் உத்திகள் தெரியும் தானே.. வாழ்த்துக்கள்.

KARTHIK said...

//பியர் குடித்து முடித்தவுடன் டகீலா அடித்துப் பாருங்கள் அதும். உங்கள் உள்ளங்கையினை குவிக்கச் செய்து அதில் உப்பைத் தூவுவாள் நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் ஒரே கல்ஃபில் அடித்து விட்டு உப்பை நாக்கில் தடவிக் கொள்வதே. //

Lemon ன மறந்துட்டிங்கள இல்ல சேத்துக்கிரதில்லையா.

//எத சொன்னாலும் கேப்பியா..அடச்சீ ஏஞ்சிப் போ மூதேவி!.. //

:((

இராவணன் said...

hahahahhahaha...

enakku bayangarama sirippu vanthuchu machan..

kalakku

ரௌத்ரன் said...

என்ன எழுதறதுன்னே தெரியல அய்யனார்...

காட்டாறு said...

சன்னமாய் பெய்யும் பனிச் சாரலில், ஜன்னலின் வழியே தெரியும் போர்த்திக் கிடக்கும் மர வீடு. உங்கள் பதிவை வாசித்துக்கொண்டே வெளியில் கூடு தப்பி போனால்.... ம்ம்ம்.... அருமையான போதை தரும் வார்த்தைக் கோர்வை.

கதிர் said...

யோவ் ஒவ்வொரு மனுசங்க கிட்டயும் ஒரு சாயல் இருக்கும். நல்லெண்ணை சித்ரா மாதிரி இருக்குனு சொன்னா ஒத்துகிட்டு போவவேண்டியதுதான் உன்ன யார் அதுக்கு மேல பேச சொன்னது.

கதிர் said...

//உள்ளங்கையினை குவிக்கச் செய்து அதில் உப்பைத் தூவுவாள் //

அங்க போயும் பெருமா கோயில்ல உண்டகட்டி வாங்கி திங்கிற பழக்கம் உனுக்கு போகல.

கண்ணா
உப்ப கட்டை விரலின் மேல்பாகத்துல சிறிய மைதானம் மாதிரி இருக்குற இடத்துல தூவுவா... அதுதான் சம்பிரதாயம் அதை நீ மீறியிருக்க அதுமில்லா கைய விரிச்சி வச்சி உள்ளங்கைல வாங்கிருக்க. எவனாச்சும் உப்ப அப்படி வாங்குவானா???
அவ என்ன பொறிகடலையா தர்றா?

எழுது வேணான்னு சொல்லல. ஆனா பிழையில்லாம எழுதணும்.
சரியா...

ரசிகன் said...

//
ரெட்லேபிளோடு ஸ்மைரைன் ஆஃப் அடித்திருக்கிறார்களா? அது ஒரு நல்ல காம்பினேசன்.பியர் குடித்து முடித்தவுடன் டகீலா அடித்துப் பாருங்கள்//

avvvv.try panni paakarenunga maams..))

தமிழச்சி said...

//எந்த சனியனுக்கும் தெரியாம எங்கவூட்டு வேப்பமரத்துக் கெளயில ஒளிஞ்சிருக்குதுய்யா உண்மையான வாழ்வு!...//

சமூக சூழல்களைப் பொறுத்து இப்படியான எண்ணங்கள் சிதறுகின்றது. பின்னால் அரிப்பெடுத்தால் கூட அடுத்தவனுக்காக அடக்கிக் கொள்ளும் சமூகம் வாழ்வு என்பது கொடுமைகளின் உடனே போராடிக் கொண்டிருக்கும் பொய்கள் நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் அய்யனார்?

Ayyanar Viswanath said...

கோபி::)

செந்தில்: irreversible கேள்விப்பட்டிருக்கேன் இன்னும் பார்க்கவில்லை

கிருத்திகா: நீங்க கவலைப்பட வேண்டியது எனக்காக இல்லை :)

கார்த்திக்:லெமனை எழுதத்தான் மறந்தேன் :)

இலக்குவன்::)

Ayyanar Viswanath said...

ரெளத்ரன் : நன்றி

காட்டாறு:கூடு தப்புவது சரிதாங்க பைத்தியமாகாம இருந்தா சரி :

தம்பி:உன் கண்ணுக்கு ஆப்பிரிக்க அழகியும் வெளக்கெண்ன சித்ரா வா தெரியுமளவுக்கு முத்திப்போச்சே ஐயகோ!

Ayyanar Viswanath said...

ரசிகன்:இதையெல்லாம் சொன்னா உடனே செய்துபாத்திடனும் :)

தமிழச்சி:என்னா சொல்றிங்கன்னு புரியலைங்க..என்ன பொருத்தவரை வாழ்வுங்கிறது இரண்டு இசைக்குறிப்புகளுக்கு இடைப்பட்ட மெளனம் ..ஓஷோ சொன்னதுதான் :)

தமிழச்சி said...

///தமிழச்சி:என்னா சொல்றிங்கன்னு புரியலைங்க..என்ன பொருத்தவரை வாழ்வுங்கிறது இரண்டு இசைக்குறிப்புகளுக்கு இடைப்பட்ட மெளனம் ..ஓஷோ சொன்னது தான்///

கேள்விகளும் புரிவதில்லை பதில்களும் புரிவதில்லை.
வாழ்வு சிதறுண்டு மண்டைக் குழம்பி போய் நிற்கும் போது வாழ்வின் மர்மம் நம்முள் விஸ்வருபமெடுத்து நிற்கிறது.

Ayyanar Viswanath said...

இப்ப புரியுதுங்க..வாழ்க்க ஒரு மாதிரி மர்மமான மேட்டர்தாங்க..இல்லைனா சீக்கிரம் அலுத்துடுமில்லையா..

தமிழச்சி said...

///அய்யனார் said...

இப்ப புரியுதுங்க..வாழ்க்க ஒரு மாதிரி மர்மமான மேட்டர்தாங்க..இல்லைனா சீக்கிரம் அலுத்துடுமில்லையா..////

வாழ்க்கை மர்மமான மேட்டர் தான் அய்யனார். ஆனால் நீங்கள் இன்னும் வாழவே ஆரம்பிக்கவில்லையே! கல்யாணமாமே! இனிமேல் தான் இருக்கு உங்களுக்கு .... தத்துவம் பிய்த்துக் கொண்டு வரும்...

வாழ்த்துக்கள் தோழா!

Ayyanar Viswanath said...

நன்றி தமிழச்சி..
இருக்குற தத்துவம்லாம் பியத்துக் கொண்டு ஓடினால் சந்தோசப்படுவேன்..பிய்த்துக் கொண்டு வந்தாலும் சந்தோசம்தான்

தமிழச்சி said...

///அய்யனார் said...

நன்றி தமிழச்சி..
இருக்குற தத்துவம்லாம் பியத்துக் கொண்டு ஓடினால் சந்தோசப்படுவேன்..பிய்த்துக் கொண்டு வந்தாலும் சந்தோசம் தான்///

அனேக மனிதர்கள் பிய்த்துக் கொண்டு தான் ஓடிக் கொண்டிருக்கின்றார்கள். காரணத்தை ஆராயும் நிதானம் வருவதில்லை. ஈகோ பிரச்சனை அங்கே முன்னுக்கு தள்ளப்பபட்டு விட்டன. உம்மில் புரிதல்கள் இருக்குமென்று எமக்கு தோன்றுகிறது. வாழ்க்கை ஒரு கவிதை இசை மீண்டும் வீணை போன்றது. இசை வரும் வரும் வரையில் மீட்டிக் கொண்டிருப்போம் சுதி கம்பி அறும் போது அந்த மரணத்தையும் இயல்பாய் பார்ப்போம் இல்லையா? நாம் ஆராய வேண்டியது எங்கே முரண்படுகின்றாம் என்ற ஆராய்ச்சியை நம்மில் இருந்தே தொடங்குவது தான் ....

சென்ஷி said...

கூடு தப்பி போகப்போறது தெரியும். ஆனா பைத்தியமானது சத்தியமா எனக்கு தெரியாது அய்யனார் :))

Featured Post

King Pele : அஞ்சலி

சனிக்கிழமை மாலை பயல்கள் ப்ரஸீலின் கால்பந்தாட்ட வீரரான பெலே வின் இழப்பைக் குறித்துக் கேட்டார்கள். அவர் எனக்கு முந்தைய தலைமுறை என்பதால் அவர் வ...