Monday, January 14, 2008

கண்மணி டீச்சரும் ஜார்ஜ் புஷ்ஷும் மஞ்சூராரும்



மொக்கை போட டீச்சரும் புத்தாண்டு சபதமெழுத மஞ்சூராரும் அழைத்த பின் என்ன எழுதுவதென யோசித்து மண்டை குளிர்ந்ததுதான் மிச்சம்.மொக்கைத் தழலாரின் பதிவுகள் ஆசிப்பின் ட்ரேட் மார்க் மொக்ககளை மேய்ந்தும் எந்த தலைப்பிலெழுத எனத் தோன்றவே இல்லை.மொக்கைத் தியரிகள் குறித்து உஷாவின் வரையறைகள் மொக்கைக்கான சாரங்களை மற்றும் அழகியலை மிக அழுத்தமாய் பதிவிக்கிறது.நாமெழுதுவதெல்லாமே மொக்கைகள்தான் என்கிற மங்கையின் உண்மை இத் தொடரின் நுண்ணரசியலை மிக அழுத்தமாய் நம் கண் முன் நிறுத்துகிறது.இத்தகைய சூழலில் கதிர் எழுதிய எறும்புகளின் தியரி மிகச் சிறந்த மாந்திரீக யதார்த்தவியல் மொக்கை குறிப்பு.காப்பிக் கோப்பைகளில் மதுவை சுவைக்கும் அவனுடைய பழக்கத்தையும் உள்நுழைத்திருப்பது செறிவான சம தள புனைவு.கப்பியின் முற்றுப்புள்ளிகள் குறைவான மொக்கை மிகச் சிறந்த அ புனைவு.

புத்தாண்டு சபதங்கள் எப்போதுமே இறுக்கமான ஒன்று புதிய வருடத்தில் எல்லாவற்றையும் அழித்துவிட்டு புதிதாய் துவங்கும் ஆவலில் டிசம்பர் இறுதிகளில் வழக்கத்திற்கதிகமாக விட வேண்டியவைகளை செய்து கொள்வது இதற்கு முந்தைய ஆண்டுகளின் வழக்கமாக இருந்தது.இந்த வருடத்தில அது போன்றெதுவும் இல்லை.குற்ற உணர்வுகள் என்பதிலிருந்து மீண்டெழுவதின துவக்கப் புள்ளியாக இதை நான் என்னிலிருந்து அணுகுகிறேன். சென்ற வருட அனுபவங்களைப் பகிர்வது உங்களுக்குப் புரிந்து கொள்ள ஏதுவாக இருக்கும் 2005 மற்றும் 2006 ஆம் ஆண்டுகளில் நாளொன்றுக்கு 7 முதல் 8 சிகெரெட்டுகளை ஊதி தள்ளுவது வழக்கம்.கொளுத்தும் வெயிலில் ஒரு கையில் டீயும் இன்னொரு கையில் கிங்க்ஸுமாய் சென்னையில் எங்காவது ஒர் பொட் டீக் கடையில்(இந்த மனுசன ரொம்ப நாளாக் காணோம்) என்னைப் பார்த்திருக்கலாம். இங்கு வந்த பிறகு கிங்ஸின் பரம திருப்தியை இழந்து போனேன் மார்ல்ப்ரோ முதல் கொண்டு டன்ஹில், எலெம் வரை எல்லாம் முயற்சித்து எலெமில் நிற்கிறது.இங்கு வந்த பின் சிகரெட் புகைப்பதும் குறைந்து போயிற்று.நாளொன்றுக்கு இரண்டு (வார இறுதிகளில் சற்றுக் கூடலாம் ) மட்டும் என்பதால் இந்த வருட சபதங்கள் தேவை இல்லாத ஒன்றாய் போய்விட்டது.

அ.கதிரும் நானும் புகைப்பது எல் எம்
ஆ.கோபியும் சென்ஷியும் புகைப்பது மார்ல்ப்ரோ
இ.நண்பனும் முத்துக்குமரனும் ரோத்மன்ஸ்
ஈ.அபிஅப்பா புகைப்பது போன்
உ.குசும்பர்,லொடுக்கு,மின்னல் மற்றும் ஆசிப்புக்கான காஜா பிராண்டுகள் கிடைப்பது அபூர்வமாகிவிட்டதால் அவர்கள் புகைப்பதில்லை.

ஜார்ஜ்புஷ் துபாய் வந்திருப்பதால் நகரின் பிரதான சாலைகள் மூடப்பட்டு விட்டன. துபை வாழ் மக்களுக்கு இன்று விடுமுறை. லேசான தூறலும், மேகங்கள் சூழ்ந்த இருளும், வரவேற்பரையில் கவிழ்ந்திருக்கும் அமைதியும் மிகப் பரவசமான இன்னொரு நாளின் மிக அழகான மதியப் பொழுதில் என்னால் எழுதப்படுகிறது இம்மொக்கை.

கடைசிக்குறிப்பாய் ஒரு கிசுகிசு
ஊ.குசும்பர் டாவடிக்கும் பெண்ணின் பெயர் ம வில் தொடங்கி சு வில் முடியும் இடையில் ஒரே எழுத்து மட்டும்தான்.

13 comments:

ஆடுமாடு said...

மொக்கையை கூட நவீனத்துவமா எப்படிங்க எழுத முடியுது?

இதுதான் மொக்கைன்னா எங்கிட்ட கூட ஏகப்பட்ட சரக்கு இருக்கு.

நன்றி அய்யனார்.

குக்கர் பொங்கல் வாழ்த்துகள்

கண்மணி/kanmani said...

இன்னும் எதிர்பார்த்தேன் என பொய் சொல்ல விரும்பவில்லை.
வாய் சுளுவா மொக்கைனு சொல்லிடுறோம்.ஆனா எதை எழுதுவது னு புரியலை.
கொசுவர்த்திகளும் சுய கேள்விகளும் சுயபுரிதல்களும் இன்ன பிறவும் மொக்கையாக கருதப் படுமெனில் தமிழ்மணத்தில் வரும் பதிவுகள் அனைத்துமே மொக்கை தான் னு இனியாவது புனிதர்கள் புரிந்து கொள்ளட்டும்.
ஆமாம் நானும்,மஞ்சூராரும் சரி ஜார்ஜ் புஷ் ஏன்?சிகெரெட் புடிக்க கூடாதுன்னாரா?நன்றி அய்யனார்

Baby Pavan said...

ஊ.குசும்பர் டாவடிக்கும் பெண்ணின் பெயர் ம வில் தொடங்கி சு வில் முடியும் இடையில் ஒரே எழுத்து மட்டும்தான்.

ஓ அதான் வேலன்டைன் டேக்கு இப்ப இருந்தே பிரிப்பரேசன் பண்ணராரா

கோபிநாத் said...

\\அ.கதிரும் நானும் புகைப்பது எல் எம்
ஆ.கோபியும் சென்ஷியும் புகைப்பது மார்ல்ப்ரோ\\

அய்ஸ் இந்த வருடத்தில் இருந்து எல் எம் தான் ;)

\\ஜார்ஜ்புஷ் துபாய் வந்திருப்பதால் நகரின் பிரதான சாலைகள் மூடப்பட்டு விட்டன.\\

கொடுத்துவச்சவுங்க..அனுபவிங்க ;(

குசும்பன் said...

ஆமாம் இது என்னா புது கதை எனக்கு தெரியாம? ஏதோ அப்படியாவது ஒன்னை செட் செஞ்சு விடு மாமே!!! நானும் கொஞ்சம் வாழ்ந்துக்கிறேன்

குசும்பன் said...

பாட்டில் பொங்கல் வாழ்த்துக்கள் என்று சொல்லனும் ஆடுமாடு சார்!!!

கப்பி | Kappi said...

//கப்பியின் முற்றுப்புள்ளிகள் குறைவான மொக்கை மிகச் சிறந்த அ புனைவு.
//

அ புனைவா? அப்படின்னா இன்னா நைனா?? :)))



//குசும்பர் டாவடிக்கும் பெண்ணின் பெயர் //

இது 'குசும்பர் டாவடிக்கும் பெண்களில் ஒருவர் பெயர்'னுல வரணும்??

காட்டாறு said...

நீங்களுமா? ஆஆஆ.......உங்களை அழைத்த கண்மணி சூப்பர்!

அபி அப்பா said...

அடங்கொய்யால!

மார்பலோ= 4.50 திர்காம்
LM= 4 திர்காம்
போன்= 1.5 திர்ர்காம்
பீடி= சும்மா கிடைக்கும்

என் மானத்தை வாங்கிட்டியடா பாவி மனுசா!
ஆனா நான் ஒரு நாளைக்கு எத்தனை பாக்கெட் வாக்குறேன் எத்தனை என் பசங்களுக்கு கொடுக்கறேன்!! நான் மார்பலோ வாங்கினா கட்டுபடியாகுமா! சொல் தம்பி சொல்!!!!

Ayyanar Viswanath said...

நன்றி ..பொங்கல் வாழ்த்துக்கள் ஆடுமாடு

ஆமாம் டீச்சர் ..மொக்கங்கறத போட்டு பார்த்தாத்தான் தெரியுது எம்புட்டு கஷ்டம்னு ..தலைப்புக்கும் இடுகைக்கும் சம்பந்தமிருக்க கூடாதுங்கிறது மொக்கையோட முதல் விதியாம் அதுனாலதான் புஷ் :)

பேபி பவன்
என்ன தயாராவரார்? நீங்கலாம் விடாம கலாய்ங்கயா அப்பதான் குச்சும்பர் அடங்குவார்..

Ayyanar Viswanath said...

புகவிடாத கோபி :)

குசும்பர் இப்ப அதில பொங்கல் வைக்க ஆரம்பிச்சிட்டியா உண்ம ஒலகத்துக்கே தெரியும்யா..அடங்கு

நச்சுன்னு சொன்ன கப்பி

காட்டாறு நாங்க எப்பவுமே ஒரே குரூப்தான் :)

அபிஅப்பா எங்கப்பன் குதிருக்குள்ள இல்லன்னு நீரே சொல்லிட்டீரே பேர்தான சொன்னன் விலையுமா சொன்னேன் :)

கிருத்திகா ஸ்ரீதர் said...

ரெபரென்ஸ் அதிகமா இருக்கு அதுனால கொஞ்சம் புரியல.. எல்லாதுக்கும் லிங் கொடுத்திருக்கலாமில்ல... பொங்கல் வாழ்த்துக்கள்

லொடுக்கு said...

தாமதமான வருகைக்கு மன்னிக்கவும்.

அப்போ குசும்பன் தான் அந்த பிரபல பெண் அனானியா!!! :)

Featured Post

கோவேறு கழுதைகள்

இமையத்தின் கோவேறு கழுதைகள் நாவலை   நேற்றும் இன்றுமாக வாசித்து முடித்தேன். இருபத்தெட்டு வருடங்களுக்கு முன்பு எழுதப்பட்ட புதினம் இ ப்போது வாசி...