Sunday, January 6, 2008

புனிதர்களை எரிச்சலூட்டுதல் அல்லது சில சொல்லாடல்களுக்கான விளக்கமும் எஸ்தரைப் பற்றிய அறிமுகமும்

கோடைகால இரவுகள் மிகவும் அழகானது.இக்காலங்களில் விண்மீண்களின் பிரகாசம் மிக அதிகமாய் இருப்பதாகப்படும்.நிர்மல வானில் நட்சத்திரங்கள் (இதுபோன்ற தலைப்புடைய ஒரு புத்தகத்தை எங்கேயோ பார்த்த நினைவு) நிலவினோடு சேர்ந்து ஏற்படுத்தும் அமைதியும் அழகும் மிகச் சாந்தமானது,கிடைக் காவலுக்கு தாத்தாவுடன் போகும் இரவுகளில் இதுபோன்ற பளிச்சிடும் இரவினைப் பார்த்ததுண்டு.பிசாசுக் கதைகளையும்,வயோதிகத்தின் படித்துறையில் படிந்துபோன பதின்மங்களின் சிலாகிப்புகளையும் கேட்டபடி வானம் பார்த்துப் படுத்துக்கிடப்பேன்.ஏதோ ஒரு இடத்தில் பேச்சு உறைந்து சில் வண்டுகளின் பின்னிசை மட்டும் எங்கும் வியாபித்திருக்கும்.(இதை மோனவெளி என பின்னாளில் அர்த்தப்படுத்திக் கொண்டேன்).வாழ்வில் மிகச் சாதாரணமாய் கடந்துபோன தருணங்களை எழுத்துப் பூச்சு கொண்டு பின்னாளில் ஒரு ஓவியமாய் தீட்டுபவனை கவிஞன் என்றோ எழுத்தாளன் என்றோ அர்த்தப்படுத்திக் கொள்வதை நான் எதிர்க்கிறேன்.வாழ்வைச் சந்தைப்படுத்துபவனை அதுவும் மிக அழகாய் சந்தைப்படுத்துபவனை கயவன் என பெயரிட்டு அழைக்கலாம்.அல்லது வியாபாரி எனக் காறி உமிழலாம். எழுதப்படாதவை, சொல்லப்படாதவை, மிகைப்படுத்தாதவை மட்டுமே உயிர்த்தன்மை கொண்டிருக்கிறது.இது ஒருவித பிரச்சார தன்மை கொண்ட வாசகமாய்த் தென்பட்டாலும் இது உண்மையாகத்தான் இருக்கமுடியும்.

கோடைகால இரவுகளைப் பற்றி எதனால் எழுத ஆரம்பித்தேன் என சரியாய்த் தெரியவில்லை சரி.. இப்போது குளிர்கால இரவுகளைப் பற்றி யோசிப்போம்..குளிரும் இரவும் தூங்கிக்கழிக்கத்தான் ஏதுவாய் இருக்கும்... அல்லது நன்றாய் குடிக்கலாம்...கோடைகாலங்களை விட குளிர்காலங்கள் குடிப்பதற்கு உகந்தது...சிலருடன்,உண்மையாய் இருப்பவர்கள் என நம்புகிறவர்களிடம் அல்லது என்னைப் போன்ற இன்னொருத்த/தி யினுடன் குடிப்பது,குடித்தபடி பேசிக்கொண்டிருப்பது மிகவும் உவப்பான ஒன்று.எல்லாம் தீர்ந்த பின்னும் பேச்சும் -வெளியும், பேச்சும் - சொற்களும், வெறும் பேச்சு இவைகளைக் கொண்டு பிரபஞ்சத்தை நிரப்பி விடும் அதீதப் பிரயாசையும் அந்தத் தருணங்களில் ஏற்படும்.இனிப்பேச சொற்களில்லை அல்லது எல்லாம் பேசித்தீர்த்த காலினஸ் (குடிப்பதை பற்றி பேசிக்கொண்டிருப்பதால் மொழி கலந்து புதிய மொழி உருவாகும் என்பதை குறியீடாக காட்டியிருக்கிறேன்.அடூருக்கு குறியீடுகளின் மேல் நம்பிக்கையில்லையாம் ஆனால் காய்ந்த தென்னை ஓலை விழுவது மூத்த மரணத்தை உணர்த்துமாம்.எத்தனை சலித்த எரிச்சலான காட்சி இது.மலையாளிகள் முட்டாப் பசங்க இன்னும் அய்ம்பது வருசம் போனாலும் ராசாத்தி உன்னையும், குண்டான பெண்களையும்,கலைப்படம் என்கிற பெயரில் சில மொக்கைகளையும் விட்டுத் தொலையமாட்டானுங்க..நாவல் தடம் மாறுவதால் மலையாளிகளைப் பற்றி வேரொரு நாவலில்) ஏற்படும் வரை பேசிக்கொண்டிருக்க குளிர் இரவுகள் உகந்தது.காதலியோடு பயணிக்க,பயணித்துக் கடந்த தொலைவுகளின் சோர்வுகளோடு அவளைக் கட்டிக் கொண்டு தூங்கவும் குளிர் இரவுகள் உகந்தது (கலவி குறித்தான பிரக்ஞைப் பூர்வமான அறிவு எனக்கு இல்லாததால் தூங்குவதோடு நிறுத்திக்கொள்கிறேன்)

காதலில் துரோகம் என்பது நடைமுறையாகிவிட்டது.மேலும் துரோகம் என்ற சொல்லும் மிகைப்படுத்திக் கொள்ளப்பட்ட ஒன்றே.தேவைகள் பூர்த்தியான அல்லது உறவுகள் சலித்துப்போன பின் விலகுவது மிக நேர்மையான ஒன்றாய்த்தான் இருக்கமுடியும்.எனவே இந்த துரோகம் என்ற சொல்லாடலை நட்புக்குப் பயன்படுத்துவோம்.நம்ப வைத்துக் கழுத்தறுத்தல் நட்பில் சாத்தியப்படக்கூடிய மிகவும் அருவெருக்கத் தக்க ஒரு குணாதிசயம்.எனக்கு நண்பர்கள் மிக அதிகம் அதில் மிகவும் புளகாங்கிதம் அடைவதும் உண்டு.சமீபத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியை உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன்.கவச்சி நடிகை ஜிகினாஸ்ரீ (நடிகைன்னா இந்த மாதிரி பேர்தான் வைக்கனும்.. அப்பதான் ஒரு கிக் இருக்கும்.... இதிலலாம் கட்டுடைக்க முடியாது...)நான் ரோட்ல நடந்துபோனதை கார்ல இருந்து பாத்திருக்காங்க..அன்னிக்கு என்ன எழவாச்சோ நான் ரொம்ப அழகாபட்டிருக்கேன் போல.. (சரக்கு கிரக்கு அடிச்சிருந்தாங்களோ என்னமோ..)நம்ம மேல ஒரு இது வந்திருக்கு.. அந்த இத அவங்க என் நண்பர்கள் கிட்ட சொல்லியிருக்காங்க.. பயபுள்ளைகளுக்கு காதுல பொக...சடக் னு என் நண்பர்கள் குழு இரண்டா பிரிஞ்சது... ஒரு குழு எல்லாம் ஜிகினாக்கு அண்ணன்மார்களாகவும்... இன்னொரு குழு நெருக்கமான,அக்கறையுள்ள, உண்மையான தோழர்களாகவும் மாறிட்டாங்க.. (பெண்களோட உறவு ன்னா ஏண்டா மூதேவிகளா ஒடனே ஒரு லேபிள குத்திகிறீங்க?) எனக்கு அங்க இங்க இருந்த சில பெண் நண்பர்களுக்கும் இது தெரிஞ்சிபோய் பாத்துட்டிருந்த வேலையெல்லாம் உட்டுபுட்டு ஜிகினாவோட அந்தரங்க ஆலோசகர் அப்படிங்கிற தற்காலிக பெறுப்ப தானா முன் வந்து ஏத்துகிட்டாங்க..... இவர்கள் எல்லோரும் என்னைப் பற்றி ஜிகினா விடம் சொன்னவைகளின் சாராம்சத்தைக் கீழே தருகிறேன்..

1.என்னுடைய குறிக்கும் மற்ற ஆண்களின் குறிகளுக்கும் வித்தியாசங்கள் அதிகம் அல்லது வழக்கத்திலிருந்து மாறுபட்டது (இத எப்படா பாத்தீங்க!!)
2.சராசரி நீள அகல தடிமன்களுக்குள் என் குறி பொருந்திவரவில்லை (என்ன கொடும சார்!)
3.ஜிகினாஸ்ரீ யின் யோனியின் நீளத்தை விட என் குறி சிறியது (இத எப்படி தீர்மானிச்சாங்கன்னு இன்னிய வரிக்கும் டவுட்டு சார்!)
4 நான் சிகெரெட் பிடிக்கிறேன்.. வாரம் ஒரு முறை மதுவிடுதிக்கு சென்று குடிக்கிறேன் (தெனம் காலங்காத்தால வெளிக்கி போவேன் அத சொன்னீங்களாடா!!)
5 என் மர்ம உறுப்புகளில் நோய் தாக்கியுள்ளது.. எய்ட்ஸ் ஆக இருக்கலாம் (எவ்வளவு நேர்மை பாருங்க இருக்கலாமாம்..இதை அடித்துச் சொன்ன அண்ணன்மார்களில் ஒருத்தனின் மேல் மூத்திரம் பெய்யத் தோன்றியதை தனிக்கதையாக எழுதுகிறேன்)
6 என் பெண் நண்பர்கள் ஜிகினா வின் முடிவைக் கேட்டு அதிர்ச்சியும் திக்பிரமையும் அடைந்ததாகவும்,ஒரு பெண் முன்பொரு தரம் என்னுடன் கலவி கொள்ள வந்திருந்தபோது எனக்கு குறியிருக்குமிடத்தில் புலி வால் இருந்ததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்து ஓடிவந்ததாகவும் சொன்னார்களாம்..

இப்போது துரோகம் என்ற சொல்லாடலுக்கான விளக்கத்தை உங்களால் புரிந்துகொள்ள முடியும் என நம்புகிறேன்.(உங்களுக்கு என் மீதான நம்பிக்கையை எப்படி ஏற்படுத்த ..ம்ம்ம் சில காதல் கவிதைகளை என் பக்கத்தில் எழுதியிருக்கிறேன்..சிலது மென்மையாய் இருக்கும் அதைப் படித்த பின்பாவது என்னை நம்புவீர்களா?)

வேறு எதைப்பற்றி எழுதலாம் அல்லது விளக்கம் கொடுக்கலாம் என யோசித்துக் கொண்டிருக்கையில் சிகரெட் பிடிக்கலாம் என தோன்றியதையும் எழுதிவிடுவது எனத் தோன்றியதையும் எழுதிவிடுகிறேன்.சிகெரெட் பிடித்து திரும்பி தொடர்ந்தால் தொடர்வேன் அல்லது இந்தப் பத்தியையே பிரசுரித்தாலும் பிரசுரித்துவிடுவேன்.
2

இருப்பு குறித்தான தீவிர விசாரிப்புகளில் நான் கண்டடைந்தது இந்தப் பிரபஞ்சத்தில் நாம் ஏனைய விலங்குகளோடு இன்னுமொரு விலங்கு என்பதைத்தான்.(இந்த உண்மையை இந்தப் பக்கத்தில் எத்தனையாவது முறையாக எழுதுகிறேன்?..திரும்ப திரும்ப இத மட்டுமே சொல்வது போரடிச்சா மன்னிச்சிக்க மக்கா...)இந்த உண்மைக்குப் பிறகு என்னிடம் தாழ்வுமனப்பான்மைகளும் தன் சார்ந்த பெரிதுபடுத்தல்களும் குறைந்து போயின எனத்தான் சொல்ல வேண்டும். இந்த விலங்கிற்கு நன்றாய் எழுத வருகிறது.. இந்த விலங்கு நன்றாய் சாப்பிடுகிறது... இந்த விலங்கு நன்றாய் குடிக்கிறது.. எனக்கூட சொல்லக் கூச்சமாக இருக்கிறது.. வேண்டுமானால் இது செயல்படுகிறது அல்லது இயக்கத்திலிருக்கிறது எனச் சொல்லிக்கொள்ளலாம்.
3

நாற்பதாம் இலக்க எண் கொண்ட வீட்டில் வசித்து வரும் எஸ்தருக்கு(வண்ணநிலவனின் எஸ்தர் இல்லை) தன் அழகின் மேல் கர்வம் அதிகம்.எஸ்தர் நிறைய ஆங்கிலப் புத்தகம் படிப்பாள். எஸ்தருக்கு முப்பத்து நான்கு முறை திருமணமாகியது. இருபத்தேழு ஆண்களையும் ஆறு பெண்களையும் ஒரு அரவாணியையும் திருமணம் செய்து கொண்டாள். புளிச் என துப்பும் வெற்றிலைக் காவியின் நிறம் தந்த அழகு.வாசித்திருந்த புத்தகங்கள் தந்த கர்வம் எல்லாமுமாய் சேர்ந்தவளை இறுமாப்பில் ஆழ்த்தியிருந்தது.நெருடாவின் பதிமூன்றாவது வழித்தோன்றலினோடு நிகழ்ந்த தொலைபேசி உரையாடல்கள் மூலம் எஸ்தர் அடைந்த கிளர்வுகள் வேறெப்போதும் அவள் பெற்றிராதது.இதை உணர்ந்த ஒரு நள்ளிரவில் குறைந்தபட்ச உச்சத்தைக் கூட தர இயலாத முப்பத்து நான்கு பேரையும் கார்பேஜ் பையில் போட்டுக் கட்டி எவரும் எழுந்திரித்திராத விடியலில் கடலில் தூக்கிப் போட்டு விட்டு வந்தாள்.போர்ஹே கொள்கைப் பரப்பு செயலாளனான பிரதியை எழுதுபவன் பரிந்துரைத்த மார்க்வெஸின் நூற்றாண்டுகால தனிமை வாசத்தை சூரியன் உதிப்பதற்கு பதிமூன்று விநாடிகளுக்கு முன்பு படித்து முடித்தாள்.பின்பு தன்னிடம் குவிந்திருந்த புத்தகங்கள் மிக அபத்தமானவை என்பதை உணரத் துவங்கினாள்.தான் நம்பியிருந்தவைகளின் வசீகரம் வெளிறத் துவங்கும்போது ஏற்படும் அருவெருப்புகளை பிரதியாளனும் அனுபவித்திருப்பதால் எஸ்தரின் மனக்கிலேசங்களையும் எழுதுவதினோடே உணரமுடிகிறது.புத்தகத்தின் பின்னட்டையிலிருந்த மார்க்வெஸின் புகைப்படத்தை கிழித்து படுக்கையின் மீது கிடத்தி அதன் மேல் படுத்துத் தூங்கிப் போனாள்.சூரியன் மறைந்து பின்பு எழுந்த எஸ்தர் அறை முழுக்க சிதறிக் கிடந்த புத்தகங்களைச் சேகரிக்கத் தொடங்கினாள்.ரமணிசந்திரன் முதல் கொண்டு ஆப்பிரிக்க பழங்குடினரின் மொழியான புஷ்மெனில் எழுதப்பட்டு ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்ட விலங்குகளின் விநோத பழக்கங்கள் நூல் வரைக்குமாய் அவளிடம் இருந்தவைகளை எண்ண முடியவில்லை.ஆனால் புத்தகங்களை கட்டப் பயன்பட்ட கார்பேஜ் பைகளை எண்ணிவிடலாம்.அதையும் எண்ணச் சோம்பல் பட்டு கடலில் எறியும்போது குறித்துவைத்துக்கொள்ளலாமென தற்போது குறிக்க மறந்து போனாள்.எல்லாப் பைகளும் தனியாளாய் அவள் கட்டி முடித்தபோது சூரியன் வருவதற்கு பதிமூன்று நிமிடங்கள் மட்டுமே மீதமிருந்தது.சோர்ந்து களைத்துப்போய் மார்க்வெஸின புகைப்படத்தை உற்றுப்பார்த்துவிட்டு அதன் மீதே படுத்துத் தூங்கிப்போனாள்.

நன்றாய் இருள் சூழ்ந்த பின்பு எழுந்திரித்த எஸ்தர் அதிர்ச்சியில் சில கணம் உறைந்துபோனாள்.அவள் தன்னுடைய வீட்டை ஒரு எலிப்பொந்தென நினைத்து வருந்தி வந்திருந்தாள்.இப்போது அவ்வீடு மிகப்பரந்ததாய் இருக்கிறது.விஸ்தாரமான கூடமும் மூன்று படுக்கையறைகளும் அவள் முன் பல்லைக்காட்டி இளித்துக்கொண்டிருக்கிறது.இது எப்படி நிகழ்ந்ததென யோசிக்கையில் கட்டப்பட்டிருந்த கார்பேஜ் பைகளுக்குள் இருந்து புத்தகங்கள் சப்தம் போட்டு சிரிப்பதைக் கேட்டாள்.தான் முட்டாளானதை உணர்ந்து இறுக்கமும் வன்மமும் மிகுந்து அம்மூட்டைகளை எட்டி உதைத்தாள்.நள்ளிரவு நெருங்கும் வரை வீட்டிற்குள் அலைந்தபடி இருந்தாள்.புத்தகங்கள் களைந்த வீடு வெளிக்கிப் போய் காலியான வயிற்றைப்போலிருக்கிறது என்ற உவமையோடு பொருத்திப்பார்த்து சத்தம் போட்டு சிரித்தாள்..

ஒரு பெண் சிரிப்பதோடு ஒன்றை முடிப்பது மிகப் பழைய அணுகுமுறைதான்.ஆனால் என்னைப்பொருத்தவரை நான் எந்த ஒன்றையும் ஆரம்பிக்கவும் முடிக்கவும் இன்னும் தயாராகவில்லை. அவ்வப்போது தோன்றுவதை மட்டுமே பதிகிறேன் என்பதால் இந்த எஸ்தரை நீட்டித்தோ குறைத்தோ பின்பொரு முறை சொல்லிவிடுகிறேன்.

24 comments:

முபாரக் said...

அய்யனார்,
நனவின் அபத்தங்களை வழிமறித்துப் பிடுங்கிக் கொண்டு கனவின் வெளிக்குள் எறிந்து கிறுகிறுப்பை வழங்குகிறது உங்களது எழுத்துக்கள். யதார்த்தத்தின் எந்த நிலையிலிருந்து வாசித்தாலும் இது தரும் போதை அலாதியானது. ஒருவேளை மனச்சிதைவு கொண்டவர்களுக்கே இது நிகழுமோ என்னவோ ;-), பெரும்பாலான புத்தகங்களை தருவித்து வாசிக்கும் சூழலில்லாத (சவூதி) அரேபிய வாழ்வில் உங்கள் பதிவுகள் போதையினைக் கசியவிடும் மேகக்கூட்டமாய் அலைந்துகொண்டேயிருப்பது ஆறுதலாயிருக்கிறது.

பயணம் தொடர வாழ்த்துக்கள்

சினேகபூர்வம்,
முபாரக்

முபாரக் said...

தயவு செய்து பதிவு இடப்பக்கம் வரும்படி உங்கள் அடைப்பலகையை மாற்றுங்கள். அச்செடுக்கும் போது பாதிதான் வருகிறது. ப்ளீஸ்

Anonymous said...

உங்க பதிவுல பின்னூட்டம் போடவே பயமாயிருக்குங்க அய்யானார். என்னையும் உங்களை மாதிரி நெனச்சுக்குவாங்களோன்னு?

சாத்தான்குளத்தான்

முபாரக் said...

//உங்க பதிவுல பின்னூட்டம் போடவே பயமாயிருக்குங்க அய்யானார். என்னையும் உங்களை மாதிரி நெனச்சுக்குவாங்களோன்னு? //

ஆசிப்,
பின்னூட்டம் போடாட்டி மட்டும் உங்கள விட்ருவமா என்ன? :-)

கதிர் said...

//இப்போது துரோகம் என்ற சொல்லாடலுக்கான விளக்கத்தை உங்களால் புரிந்துகொள்ள முடியும் என நம்புகிறேன்.(உங்களுக்கு என் மீதான நம்பிக்கையை எப்படி ஏற்படுத்த ..ம்ம்ம் சில காதல் கவிதைகளை என் பக்கத்தில் எழுதியிருக்கிறேன்..சிலது மென்மையாய் இருக்கும் அதைப் படித்த பின்பாவது என்னை நம்புவீர்களா?)//

கதிரவனால் ஜீவிதாவுக்கு எழுதப்படும் மஞ்சல் வெயில் கடிதத்தில் இதே வரிகள் இருக்கின்றன.

யோவ் ஒரே மாதிரி எண்ணங்கள் இருவருக்கு வரலாம் தவறில்லை. ஒரே மாதிரியான எண்ணங்கள் ஒரே மாதிரியான எழுத்துக்களுடன் உதிப்பது விசித்திரமும் விந்தையாகவும் இருக்கிறது அய்யா அய்யனாரே!

கதிர் said...

//உங்க பதிவுல பின்னூட்டம் போடவே பயமாயிருக்குங்க அய்யானார். என்னையும் உங்களை மாதிரி நெனச்சுக்குவாங்களோன்னு? //

அண்ணாச்சி..
அப்போ அய்யனார் எந்த மாதிரி? ஏன் அவர பாத்து பயப்படறிங்க? திடீர்னு உங்களின் நீங்க, உங்க மரியாதை பாத்தவுடனே சிரிப்பு வந்துருச்சு. அதனால வழக்கமா போடுவீங்கல்ல டேய், சவத்து மூதி, இந்த மாதிரி எழுதினாதான் உங்களுக்கு அடையாளம். நான் கூட எதோ போலி ஆசிப்தான் கமெண்ட் போட்டுருக்குன்னு நினைச்சிட்டேன்.

கதிர் said...

இந்த நல்ல பதிவினை யாரும் படிக்கவில்லை என்று அய்யனார் குறைபட்டுக்கொண்டதற்கிணங்க மூன்றாவதாக ஒரு பின்னூட்டம் இட்டு முகப்பில் தெரியவைக்கும் கயமையாக இதை செய்கிறேன்.

Ayyanar Viswanath said...

டம்பி!

காமலைக் கண்ணனுக்கு கண்டதெல்லாம் மஞளதான் தெரியுமாமாம் போய் கண்ண கழுவுடே!!
நீதான் எலக்கிய வியாதின்னு சொல்லிடமில்ல அப்புறம் இன்னாயா பில்ட் அப் :)

சாயல்களைத் தவிர்க்க முடியாதென்பதை ஒத்துக்கொள்கிறேன் ஆனால் திருடுவது என் வழக்கமில்லை..

Ayyanar Viswanath said...

முபாரக்
இந்த வடிவமைப்பை மாற்ற முடியவில்லை/எனக்குத் தெரியவில்லை தெரிந்தவர் யாரேனும் உதவுஙளேன்

Ayyanar Viswanath said...

அண்ணாச்சி அப்போ நீங்க என்ன மாதிரி இல்லையா :))

கதிர் said...

//காமலைக் கண்ணனுக்கு கண்டதெல்லாம் மஞளதான் தெரியுமாமாம் போய் கண்ண கழுவுடே!!//

இந்த ரெண்டு வரில ரெண்டாயிரம் எழுத்துப்பிழை இருக்கு. இதுலருந்து தெரிலயா யாருக்கு காமாலைன்னு??

:))))))))))))))))))

கோபிநாத் said...

\\தம்பி said...
இந்த நல்ல பதிவினை யாரும் படிக்கவில்லை என்று அய்யனார் குறைபட்டுக்கொண்டதற்கிணங்க மூன்றாவதாக ஒரு பின்னூட்டம் இட்டு முகப்பில் தெரியவைக்கும் கயமையாக இதை செய்கிறேன்.\\

நானும் கடமையை செய்கிறேன்..வாழ்க அய்யனார் ;)

TBCD said...

இந்தப் பதிவில் எல்லாமே கலந்துக் கட்டி அடிச்சியிருக்கீங்களா ஐய்யனார்..?

தகர்வமைப்பு, மேஜிக்கல் ரியாலிசம், பின் நவினத்துவம்..

எதோ விளங்குற மாதிரி இருக்கு..ஆனா விளங்கவில்லை...

இங்க இது தான் பொருந்தும்.

புரியல்ல. தயவு செய்து விளக்கவும்.

Jazeela said...

//தயவு செய்து பதிவு இடப்பக்கம் வரும்படி உங்கள் அடைப்பலகையை மாற்றுங்கள். அச்செடுக்கும் போது பாதிதான் வருகிறது. ப்ளீஸ்// முபாரக் பதிவை notepadல் ஒட்டி படிமமெடுங்கள்.

குசும்பன் said...

எனக்கு சிலது புரியுது சில புரியலை, இந்த பதிவை படிக்க சொன்ன ஆசிப் அவர்களை தனியாக கவனிக்கனும்.

KARTHIK said...

கொஞ்சம் புருஞ்சும்,புரியாமலும் இருக்கு.
நன்றி

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

படிக்கறதுக்கே ரொம்ப மகிழ்ச்சியாயிருக்கு அய்யனார். அற்புதமான அ-கதை. வண்ண நிலவனின் எஸ்தரை உள்ளே கொண்டு வந்தது, அடுத்த ‘நாவலில்' சொல்கிறேனென்பது, தொடர்ந்தாலும் தொடர்வேன், அல்லது அப்படியே பிரசுரிப்பேன் என்பது... சொல்லிக் கொண்டே போகலாம்.

இன்னும் கொஞ்சம் கவனமா எழுதினா நல்லாயிருக்கும்னு தோணுது. எஸ்தர் மார்க்வெஸின் படத்தின் மேல் படுத்துத் தூங்குவது இரண்டு முறை வருகிறது...

மதி கந்தசாமி (Mathy Kandasamy) said...

interesting!

Sathyaraj said...

//கோடைகால இரவுகள் மிகவும் அழகானது//

இரவு - அழகானது
இரவுகள் - அழகானவை

Anonymous said...

very interesting

Ayyanar Viswanath said...

கோபி,குசும்பன்,டிபிசிடி, ஜெஸிலா,கார்த்திக்,சுந்தர்,மதி,சத்யராஜ் மற்றும் சதீஷ்

பின்னூட்டங்களுக்கு நன்றி

jollupandi said...

யாரது எஸ்தர்? யாரை பற்றி இந்த தாக்கு தாக்குறீங்க...??

Anonymous said...

தரங்கெட்ட ஒருத்திக்காக உங்கள் நல்ல நேரத்தை வீணடிக்க வேண்டாம். அந்தக் கூவம் நாற்றத்தைப் பரப்புகிறது.

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

/தரங்கெட்ட ஒருத்திக்காக உங்கள் நல்ல நேரத்தை வீணடிக்க வேண்டாம். அந்தக் கூவம் நாற்றத்தைப் பரப்புகிறது./

அய்யனார், நீங்கள் இது போன்ற பின்னூட்டங்களை வெளியிடுவது வருத்தத்தை அளிக்கிறது. can you please have it removed.?

Featured Post

King Pele : அஞ்சலி

சனிக்கிழமை மாலை பயல்கள் ப்ரஸீலின் கால்பந்தாட்ட வீரரான பெலே வின் இழப்பைக் குறித்துக் கேட்டார்கள். அவர் எனக்கு முந்தைய தலைமுறை என்பதால் அவர் வ...