உன் அலட்சியங்களை எதிலாவது வைத்துப் பூட்டிவிடலாமா?
உன் சிந்தனைகளை என்ன செய்வது?
உன் கிண்டல்களை
எள்ளல்களை
புரிதல்களை
எல்லாம் தெரிந்து வைத்திருப்பதை
ஒற்றைச் சொல்லில் முழுசாய் நிராகரிப்பதை
என்ன செய்வது?
என்ன செய்வது?
என்ன?
என்ன?
குழம்பிப்போய்
தெளிந்து
பின் குழம்பி
உன்னை வசமாக்க
புலம்ப
காத்திருக்க
தவிக்க
உன்னுலகத்தைச் சிறைப்படுத்த
குறுகலாக்க
பைத்தியமாக்க
காதலைப் பிரயோகிக்கலாமென்றிருக்கிறேன்
என்னுடைய முலைகள் கவர்ச்சியானது
மேலும் எனக்கு அழகான உதடுகளும் உண்டு
நீ என்ன பெரிய மசிராடா?
............................******.........................................
யாரிடம் நிரூபிக்கலாம்?
எவரை பயமுறுத்தலாம்?
எவர் தலையில் ஏறி உட்காரலாம்?
யாரை நசுக்கலாம்?
குத்திக் கிழிக்க மென்மையான சில உடல்கள் எதிர்படுமா?
முளைக்கத் தொடங்கிய கொம்பின் நமைச்சல்கள்
மிகவும் அருவெருப்பானது
...............................******.........................................
எப்படியாவது என்னை அடையாளங் கண்டு கொள்கிறாய்
அல்லது
உனக்கு முன்னர்
நானும் என்னை அடையாளங் கண்டு கொள்கிறேன்
இது இதற்காகத்தான்
இது இதனால்தான்
பல்லிளிப்பின் பின்னாலிருப்பது எல்லாமும்
ஆடை விலக்கிப் பார்க்கும் குறி /யோனி நமைச்சலின்
நாகரீக வடிவமன்றி
வேறெதுவும் இல்லை
...............................******.........................................
ரகசியங்களைத் தெரியும்படி புதைத்துவைப்பதின்
பின்னாலிருக்கும் குறுகுறுப்புகள்
தெரியாமலில்லை
மறுத்தலின்
ஒளிதலின்
புரியாமலிருப்பது போன்ற பாவனைகளின்
அரசியலெல்லாம்
கண்டுபிடித்தலின்
தேடுவதின்
கிறங்குவதின்
மீதிருக்கும் வேட்கைகள்தான் என்பது
எனக்கும் தெரியும்
இருப்பினும் புரியாமலிருப்பது போன்ற நாடகத்தினை
இருவரும் சேர்ந்தே நடத்துவோம்
குறைந்தபட்சம்
கலவிக்கு முன்னாலான
சில காட்சி இன்பங்கள்
பாழாய்ப் போன உடலுக்கு
மிகவும் இன்றியமையாதது
............................******.........................................
கருப்புக்குழந்தையொன்று
உன்னை முத்தமிடுவதை
தொலைபேசியில் கேட்டேன்
இன்றென் மாலையை யாரோ
ஆசிர்வதித்திருக்கக்கூடும்
............................******.........................................
Subscribe to:
Post Comments (Atom)
Featured Post
King Pele : அஞ்சலி
சனிக்கிழமை மாலை பயல்கள் ப்ரஸீலின் கால்பந்தாட்ட வீரரான பெலே வின் இழப்பைக் குறித்துக் கேட்டார்கள். அவர் எனக்கு முந்தைய தலைமுறை என்பதால் அவர் வ...

-
அ றிவார்ந்த சமூகம் என கேரளத்தை அடையாளம் காட்டுவோர் உண்டு. நானும் சில கூறுகளில் கேரளத்தவரே முன்மாதிரி என்பேன். ஆனால் இன்றும் சாதியப் பெருமிதத...
-
என்னுடைய மிக விரிவான நேர்காணலை அரூ இதழ் வெளியிட்டிருக்கிறது. என் ஒட்டு மொத்த இலக்கியப் பங்களிப்பையும் இருப்பையும் கேள்விகளாகத் தொகுத்த நண்ப...
-
’லா க்டவுன்’ காலத்தை நூரி பில்கே சிலானுடன் தான் துவங்கினேன். இனி அலுவலகம் வரத் தேவையில்லை என்கிற விடுதலை உணர்வு, முன் நின்ற பூச்சி பயத்தை ...
6 comments:
:)
//ஆடை விலக்கிப் பார்க்கும் குறி /யோனி நமைச்சலின்
நாகரீக வடிவமன்றி
வேறெதுவும் இல்லை//
மகுடேஸ்வரன் கவிதை மாதிரியே இருக்குது. ஏன்யா இந்த மாதிரி காப்பி அடிக்கறிங்க?
//ஆடை விலக்கிப் பார்க்கும் குறி /யோனி நமைச்சலின்
நாகரீக வடிவமன்றி
வேறெதுவும் இல்லை//
மகுடேஸ்வரன் கவிதை ஒன்றின் சாயல் தெரிகிறது.
//கருப்புக்குழந்தையொன்று
உன்னை முத்தமிடுவதை
தொலைபேசியில் கேட்டேன்
இன்றென் மாலையை யாரோ
ஆசிர்வதித்திருக்கக்கூடும்//
ஆமாம்யா செம க்யூட் கருப்பு குழந்தை.
ராம் என்ன சிரிப்பு :)
எலே டம்பி அடங்குயா
/ என்னுடைய முலைகள் கவர்ச்சியானது
மேலும் எனக்கு அழகான உதடுகளும் உண்டு
நீ என்ன பெரிய மசிராடா?
/
Nijam.
Post a Comment