Friday, December 14, 2007

பில்லா - தலைல ராக்ஸ்நாவல்களைத் திரைப்படமாக்குவதில் தமிழ்சூழலில் இருக்கும் சிக்கலை விட ரீமேக் திரைப்படஙகளுக்கு அதிக சிக்கல்கள்.ஏற்கனவே தெரிந்த ஒரு கதையை வெற்றிபெற்ற ஒரு திரைப்படத்தை மீண்டும் பார்ப்பதென்பது அலுப்புத் தட்டக்கூடிய ஒன்றே. இதை நேர்த்தியான திரைக்கதையின் மூலமே சரிகட்ட இயலும்.விறுவிறுப்பான காட்சியமைப்புகள், பொருத்தமான நடிகர்கள்,உடை,இடத்தேர்வு போன்றவைகள் ரீமேக திரைப்படங்களுக்கு மிகவும் முக்கியமான ஒன்று.அறிந்தும் அறியாமலும், பட்டியல் போன்ற திரைப்படங்கள் மூலம் நேர்த்தியான வெகுசன இயக்குநர் என்ற அடையாளத்தைப் பெற்றிருந்த விஷ்ணுவர்த்தன் பில்லாவின் சொதப்பலான திரைக்கதையில் மற்றும் மேற்சொன்ன முக்கியமான விதயங்களில் சறுக்கியிருக்கிறார். திரைக்கதையில் ட்விஸ்ட் என மெனக்கெட்டிருப்பதற்கு பதிலாய் திரைக்கதையை இன்னும் விறுவிறுப்பாக்கி இருக்கலாம்.

மலேசியாவின் தரமான ஓட்டல்கள் மற்றும் வசதியான அடிப்படைக் கட்டமைப்புகள் படத்திற்கான ரிச்னெஸை தானாகவேத் தருகிறது.ஓட்டல்களைத் தேர்வு செய்திருந்ததில் காட்டியிருந்த சிரத்தையை படமாக்கப் பட்ட இடத்திலும் கொஞ்சம் காட்டியிருக்கலாம்.ஏறக்குறைய எல்லாக் காட்சிகளிலும் அந்த இரட்டைக்கோபுர கட்டிடம் வருவது மகா எரிச்சல்.தமிழனுக்கு கூலிங்க் க்ளாஸ் மேல் அப்படியென்ன காதலோ? சண்டைக் காட்சிகளில், நள்ளிரவில் என எல்லா நேரங்களிலும் எல்லா கதா பாத்திரங்களும் கூலிங்க் க்ளாசோடு வலம் வருகிறார்கள்.அஜித்தோடு நமீதா, நயன், துணைநடிகர்கள் என எல்லாரும் கூலிங்க் க்ளாஸ் சகிதமாகத்தான் திரிகிறார்கள்.ப்ளாக் சூட், கச்சிதமான உடல் என அட்டகாசமாய் பொருந்தும் அஜித் பாடிலேங்க்வேஜ் வாய்ஸ் மாடுலேஷன் என எல்லாவற்றிலும் கோட்டை விட்டிருப்பது பரிதாபம். மனிதருக்கு இன்னும் நேரம் சரியாகவில்லையோ? ஒரு படம் ஓடினால் நான்கு படம் சறுக்குகிறது.

தமிழனின் காம வடிகாலான நமீதாவை நயன் ஓரம் கட்ட முயற்சித்திருக்கிறார்.சிம்புவின் மீதிருக்கும் கோபத்தை அவர் இப்படிக் காட்டியிருக்க வேண்டாம்.பில்லா கதாநாயகிக்களுக்கான படம் இல்லையெனினும் ஸ்ரீப்ரியாவின் கவர்ச்சியான முகமும் பெரிய்ய கண்களும் பழைய பில்லாவிற்கு ஒரு கிக்கைத் தந்தது.அந்த கிக் இதில் இல்லை.நயன் இறுக்கமான பனியனோடு கன் னை தூக்கிக் கொண்டு நடந்து போகும்போது இந்த அம்மணிக்கு ஏன்யா இதெல்லாம் என ஆசிப் முனகினார். நயன் அட்டகாசமாய் நடித்திருந்த ராப்பகல் திரைப்படம் கண்முன் வந்து போனதோ என்னமோ.சந்தானம் வந்துபோகும் ஓரிரு இடங்களில் சிரிப்பை வரவைக்கிறார்.சிரிப்பு போலிசாக வரும் பிரபு எல்லாக் காட்சிகளிலும் சிரிப்பை வரவைக்கிறார் (பிரபு டிஎஸ்பி யா? என்ன கொடும சார்!)

மை நேம் ஈஸ் பில்லா பாடலை கொன்றிருப்பதுதான் உச்சகட்ட எரிச்சல்.எஸ்பிபியின் அழுத்தமான குரலும் நடுநடுவில் சிரிப்புகளோடு கம்பீரமாய் பாடப்பட்டிருந்த அப்பாடலை ஏதோ ஒரு மென்மையானப் பாடகர் பாடிக் கேட்பதை விட கொடுமை வேறெதுவும் இருக்கமுடியாது.எஸ்பிபியின் கால்ஷீட் கிடைக்கவில்லையா என்ன? படத்தில் ஈர்க்கும்படியாய் எதுவுமே இல்லையா? என்பதற்கு படம் மிக நீளமாய் இல்லை என்கிற நிறையைத்தான் என்னால் சொல்லமுடிகிறது.படம் முடிந்து வெளியில் வந்தபிறகு படம் பார்த்ததிற்கான எந்த உணர்வும் இல்லை.

ஆரம்பக் காட்சிகளில் ஏஏஏ!! தல ராக்ஸ் என விசிலடித்தும் கைத்தட்டியுமாய் மகிழ்ந்த ஆசிப் படம் ஆரம்பித்த 10 நிமிடங்களில் அசாதாரண மெளனத்திற்கு போய்விட்டார்.ஒரு விடுமுறை நாளின் மாலை வேளையை வீணாக்கியதற்கு பரிகாரமாய் துபாய் திரைப்பட விழாவில் ஞாயிற்றுக்கிழமை திரையிடப்படும் அடூரின் நாலு பெண்கள் திரைப்படத்திற்கான டிக்கெட்டுகளை ஆசிப் வாங்கித் தந்துவிட்டார்.சந்தோஷ் சிவனின் ஆங்கிலப் படம் ஒன்றுக்கும் போவதாய் திட்டமிட்டிருக்கிறோம்.

பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம் அஜித்...

15 comments:

Anonymous said...

Nee Vijay Fan aa?

கானா பிரபா said...

பதிவுக்கு நன்றி தல ;-)

ஒரு அன்புக்கட்டளை, அடூரின் நான்கு பெண்கள் பார்த்த வேகத்தில் நேரே கணினிக்கு வந்து பதிவு போட வேண்டுகிறேன்.

கதிர் said...

போட்டோ எங்கய்யா போட்டோ போட சொன்னேன்ல? எத்தனை படத்துலதான் குத்துவிளக்கு கேரக்டர்ல நடிப்பாங்க நயன்? ஒரு படத்துல காட்டிட்டு போவட்டுமே இப்ப என்ன வந்துச்சு? அந்த சீன் வரும்போது கண்ண மூடிகிட்டிங்களா நீங்க? உக்காந்து நல்லா பாத்துபுட்டு காம வடிகாலாம்?

நல்லா இருக்குய்யா உங்க நாயம்!

Ayyanar Viswanath said...

தல கண்டிப்பா எழுதிடுறேன்

டம்பி உன் கலைப்பார்வையை கொஞ்சம் கண்ட்ரோல் பண்ணுய்யா

FunScribbler said...

நல்ல விம்ரசனம்!!நான் படம் பார்த்தேன். as u said.. it is disappointing but stylish!

Anonymous said...

தாங்கள்,மிகச்சரியான,உரைகல்.

கோபிநாத் said...

\\ தம்பி said...
போட்டோ எங்கய்யா போட்டோ போட சொன்னேன்ல? எத்தனை படத்துலதான் குத்துவிளக்கு கேரக்டர்ல நடிப்பாங்க நயன்? ஒரு படத்துல காட்டிட்டு போவட்டுமே இப்ப என்ன வந்துச்சு? அந்த சீன் வரும்போது கண்ண மூடிகிட்டிங்களா நீங்க? உக்காந்து நல்லா பாத்துபுட்டு காம வடிகாலாம்?

நல்லா இருக்குய்யா உங்க நாயம்!\\

தம்பியும் படத்தை பார்த்துட்டான் ;)

Anonymous said...

சவத்து மூதி

நான் எழுதுதக்குள்ள உன்னை எவம்லே எழுதச் சொன்னான்? நான் சொன்னதையெல்லாம் அப்படியே போடணூமா? த்லைல ராக்ஸ் உட்பட :-)

நாகை சிவா said...

:)

தம்பி சரியா கேட்டான்ய்யா...

யோவ் அய்யனார் பதில் சொல்லு..

நாங்க எந்த தடை வந்தாலும் இந்த படத்தை பாப்போம்

நந்தா said...

அய்யனாரே, தமிழ் சினிமாவுல சமீப காலத்துல இப்படி STYLISH aa ஒரு படம் வந்ததில்லைன்னு இங்கே (சென்னைல) ஒரே பேச்சு.

ஆனா, நயந்தாரா ஒரு சீன்ல நடந்து போற கேட்வாக்கைப் பார்த்துட்டு, என் ஃப்ரண்டு அப்படியே ஏஞ்சலினா ஜூலி மாதிரியே இருக்கான்னு இன்னும் புலம்பிட்டு இருக்கான்... அவளோட ஸ்டைலுக்கு ஒரு ஃபைட் கொடுத்திருக்கலாம் மாப்ளைன்னு இன்னொருத்தன் சொல்றான்.

சரி எல்லாமே, அவன் சொல்றான், இவன் சொல்றான்னு சொல்றியே, நீ என்ன சொல்ல வர்றன்னு கேக்கறீங்களா???? நான் அடுத்த வாரம் இரண்டாவது தடவை இந்தப் படத்தைப் பார்க்கப் போறேன். அப்படி என்னய்யா இருக்கு இந்த படத்துலன்னு கேக்கறீங்களா???

பல ஆங்கிலப் படங்களில் இருக்கும் பிரம்மாண்டங்களைப் பார்த்து ஏங்கி இருந்தது ஒரு காலம். அப்புறம், நம்ம பாலிவுட்லயே, "மே ஹூன் நா", "ஓம் சாந்தி ஓம்", மாதிரியான படங்கள்ள கதைன்னு ஒண்ணும் பெரிசா இல்லைன்னாலும், அந்த கலர்ஃபுல் சீன்ஸ், அந்த போஸ்ட் ப்ரொடக்ஷன்ஸ் எஃப்பெக்ட்ஸ், ஸ்டைலோட தமிழ்ல ஒரு படம் வராதான்னு ரொம்பவே ஏங்கி இருக்கேன்.

ஷங்கர் படம் பிரம்மாண்டம் பிராமாண்டம்னு ஊரே கத்திக்கிட்டிருந்தாலும், எனக்கென்னமோ ஒருசில (சிவாஜி உட்பட) படம் எல்லாம் பார்த்துட்டு ஒரு சில செட்களைத் தவிர இந்த படங்கள்ல, அத்தனை கோடி செலவு பண்ண என்னய்யா இருக்குன்னு பெரிய்ய கேள்வி வரும்?

ஆனா நிச்சயமா பில்லா, ஒரு ஸ்டைலான படம்தான். பணமும், வாய்ப்புகளும் இருந்தால் தமிழ்லயும், இது மாதிரி படங்கள் வரும்னு நினைக்கிறப்போ சந்தோஷமா இருக்கு.

தியேட்டர் இடைவேளையில அதிகமா கேட்ட ஒரு பாமர டயலாக் என்ன தெரியுமா அய்யனாரே, "என்ன மாப்ளை இங்கிலீஷ் படத்துல தமிழ் பேசிக்கிட்டிருக்காங்க?"

Ayyanar Viswanath said...

தமிழ் மாங்கனி கோபி அனானி நன்றி

அண்ணாச்சி போன்ல பேசினதலாம் பதிவா போடுறாங்க..நேர்ல பேசினத போட்டா தப்பா :)

எலே புலி
நீர் எதுக்காக பார்ப்பேன்னு தெரியும் வே

Ayyanar Viswanath said...

நந்தா

நீர் அஜித் பேட்டிய போட்டு சிலாகிச்சப்பயே தெரியும்யா..

நம்ம மக்களுக்கு படத்துல வர எல்லா கேரக்டரும் கோட்சூட் போட்டு கருப்பு கண்ணாடி போட்டிருந்தா போதும்யா ஒடனே இங்கிலீசு படம் அப்படின்ருவாங்க பத்தாதுக்கு அரகுற கவர்ச்சி கதாநாயகிகள் னா ஒடனே வாய பொளந்திருவாங்க..

இதையெல்லாம் நம்புறிரா நீரு :)

ஆடுமாடு said...

அய்யனார். இன்னும் படம் பார்க்கலை. இங்க (சென்னையில) படம் ஸ்டைலா இருக்கு. ஆனா, ஸ்லோவா இருக்குன்னு ஒரே... பேச்சு. 'தல'க்கு வேற ஏகப்பட்ட ரசிகர்கள்.எல்லா தியேட்டர்லயும் உண்டு இல்லைனு பண்ணிட்டாங்க. பார்த்துட்டு நான் ஒரு பதிவை போடறேன்.

seethag said...

அய்யனார்,
கண்டிப்பாக இந்தப்படத்தை நான் பார்க்கபோவதில்லை.ஆகையால் எனக்கு சொல்லுவதர்க்கு இரண்டு பைசாவுக்கும் ஒன்றும் இல்லை. ஆனால் இப்போதுதான் படித்தேன் இதில் அஜீத் பெயர் 'டேவிட் 'பில்லா என்று.
யார் சொல்லிகொடுத்தார்கள் இந்த மாதிரி க்றிஸ்தவ பெயர்களை ஸ்ட்ரியோடைப் செய்வதர்க்கு?இது எத்தகய நுணரசியல் என்று சொல்ல முடியவில்லயே?நீங்களூம் அதைப்பற்றி சொல்லவில்லயே.

தன்கர் பச்சான் 'பள்ளிக்கூடம்' படத்தில் இந்தமாதிரி ஸ்டுயுபிடிடி செய்ததாக ஒரு ப்ளாகில் படித்தேன்.

ரஜினி படங்களில்/(அவருடய ஆசீர்வாதம் கிடைத்த)உள்ள நுண்ணரசியல்களும் இரட்டை அர்த்தம் வசங்களும் ஏனோ அவருடய ஆன்மீக இமேஜால் விமர்சனத்திருக்கு உள்ளாவதே இல்லை.

Ayyanar Viswanath said...

ஆடுமாடு மற்றும் சீதா பகிர்வுக்கு நன்றி

Featured Post

King Pele : அஞ்சலி

சனிக்கிழமை மாலை பயல்கள் ப்ரஸீலின் கால்பந்தாட்ட வீரரான பெலே வின் இழப்பைக் குறித்துக் கேட்டார்கள். அவர் எனக்கு முந்தைய தலைமுறை என்பதால் அவர் வ...