Monday, December 31, 2007

2007 ஆம் வருடத்திற்கு நினைவஞ்சலி


இந்த வருடம் எப்படித் துவங்கியதென யோசிக்கையில் சில பிலிப்பைன் தேசத்து நண்பர்கள் நினைவில் வந்து போகிறார்கள்.ஏழு பெண்கள் மற்றும் ஆறு ஆண்களின் உற்சாக கூச்சலோடுத் துவங்கிய ஆண்டிது.இந்த பிலிப்பைன் தேசத்து மக்களைப் பற்றிச் சொல்ல நிறைய இருக்கிறது.குடும்பம், சமூகம் என்பது போன்ற இறுக்கமான கட்டமைப்புகள் ஏதும் இல்லாதவர்.கலாச்சாரம், ஒழுங்கு போன்ற பிரச்சினைகளும் ஏதும் இல்லாதவர்.தனி மனித சுதந்திரம் தனி மனித விருப்பு வெருப்புகளை முதன்மையாய் கொண்டவர்கள். தனக்கான எழுத்து ஏதும் இல்லாதோர்.We are following american culture எனச் சொல்வதில் பெருமைப்பட்டுக் கொள்பவர். நமது மொழிக்கான எழுத்துகளை நாம் கொள்ளாது போயிருந்தால் நாமும் இபடித்தான் எவனோக்களின் அடிவருடிகளாயிருந்திருப்போம் என்பது போன்ற சிந்தனைகள் நமது மொழியை இன்னும் நேசிக்கத் தூண்டுகின்றன. பிலிப்பைன் தேசத்து மக்கள் கொண்டாட்டத்தை அடிப்படையாய் கொண்டவர்கள்.மிகச் சாதாரண செண்டிமெண்ட்கள் ஏதும் இல்லாதோர்.குட்டையான இவர்களை ஜீன்ஸ் இல்லாமல் பார்த்தால் நீங்கள் பாக்கியவான்கள்.

இத்தகைய பாக்கியவான்களோடு துவங்கிய இந்த ஆண்டு சடுதியில் தன்னை அடையாளம் மாற்றிக் கொண்டு வலைப்பதிவன் எனும் இன்னொரு அரிதாரத்தை பூசிச் சென்று கடந்தபடி இருக்கிறது.எனக்கேத் தெரியாத இன்னொரு வடிவத்தை எனக்குக் கொடுத்தபடி கடந்துபோன இக்காலத்தை மிக ஆச்சர்யத்தோடும் அதிசயத்தோடும் பார்க்கும் வழிப்போக்கனாயிருக்கிறேன்.எனக்கெப்போதுமிருந்த தனிமையை நம்பித் துவங்கிய இவ்வலைப்பதிவு நான்கு மாதங்களில் தனக்கான அடையாளத்தை இழந்தது.நட்பு என்பதின் மூலமாய் ஆட்டம் கண்ட இவ்வலைப்பதிவும் பதிவனும் இப்போதொரு மக்கள் நிரம்பிய கூட்டத்திலிருக்கிறார்கள்.இவனை நான்கு பேர்க்குத் தெரிந்திருக்கிறது. இவனைச் சிலர் படு மோசமாய் வெறுக்கிறார்கள்.மிகக் குறைந்த சிலர் நேசிக்கவும் இருக்கிறார்கள்.பயன்படுத்தத் தக்கவனாய் இருக்கிறான். குப்பைக்குச் சமானமானவனாயும் இருக்கிறான்.எதுவாய் இருக்கிறான் என்பது இன்னளவும் அவனுக்கு எட்டவில்லை.ஏகப்பட்ட குறைகளோடும் மிகச் சிறிய நிறைகளோடும் வாழும் சொற்பமானவர்களுக்குள் அவனை அடையாளப்படுத்தி விட முனையும் இன்னொரு அற்பமான முயற்சிகளிலுள் இதுவும் ஒன்று என்பதைத் தவிர சொல்ல வேறெதுவும் இல்லை அல்லது இதை அவன் ஒப்புக்கொள்கிறான்.

...............................**********......................................

நான் என் வாழ்வைக் கொண்டாடுகிறேன் / கொண்டாடுவதாய் நினைத்துக் கொள்கிறேன். நான் மிக விருப்போடு சில கொலைகள் புரிகிறேன்,நான் மிக வருத்தத்தோடு சில மகிழ்வுகளை எதிர்கொள்கிறேன்.நான் என்பதும், இது என்பதும், அது என்பதும் எனக்கெப்போதும் நிறைவையே தருகிறது.
*எந்த கதவிடுக்குகளிலும் வேட்டி நுனி சிக்கிக் கொள்ளாது கடந்து போகிறது என் காலம். எதிர் கொள்ள வருபவைகள் பற்றி ஏதொரு சிந்தனையுமில்லை.எப்போதுமே சிந்திக்கத் துணியாத என் வாழ்வு தந்திருப்பதெல்லாம் அவ்வப்போது நினைத்துக் கொள்ள சில சந்தோஷங்களையும் எப்போதும் நினைத்துக் கொள்ள சில துக்கங்களையும் தவிர்த்து வேறெதுவுமில்லை.
என்னைப் பிரிதொன்று கொல்லாதிருக்கும்வரை நான் வாழ விரும்புகிறேன்.
..................................**************.............................
இந்த வருசத்தோட ரெசுல்யூசன் என்ன அய்யனார்?
போடாங்கோஓஓஓஓஓஓஓஓ ......

நண்பர்களுக்குப் புத்தாண்டு வாழ்த்துக்கள்....
*கல்யாண்ஜி யினுடையது

11 comments:

கதிர் said...

புதுவருடத்தை முன்னிட்டு நம் அய்யனார் அவர்கள் கவிதை எழுதும் கெட்ட கொடிய பழக்கத்தை விடப்போவதாக அறிவித்திருக்கிறார். மக்கள் அனைவரும் சந்தோஷமாக இருக்க வேண்டுமென அவர் இந்த முடிவை எடுத்திருப்பதாக குசும்பர் வட்டார செய்திகள் தெரிவிக்கின்றன.

ஆடுமாடு said...

//எனக்கெப்போதுமிருந்த தனிமையை நம்பித் துவங்கிய இவ்வலைப்பதிவு நான்கு மாதங்களில் தனக்கான அடையாளத்தை இழந்தது.//

துணைக்கு நானும் இருக்கேன்ங்க. நல்லாயிருக்கு.
வாழ்த்துகள்.

கோபிநாத் said...

அய்ஸ்...புத்தாண்டு வாழ்த்துக்கள் ;))

குசும்பன் said...

//குட்டையான இவர்களை ஜீன்ஸ் இல்லாமல் பார்த்தால் நீங்கள் பாக்கியவான்கள்.//

பார் டா இத யார் சொல்வது என்று:))

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் அய்யனார்

KARTHIK said...

அய்யனார் ஏனோ தெரியவில்லை(மற்ற வலைப்பூக்களில் ) எல்லோரும் உங்க கவிதை பத்தியே பேசுறாங்க.
அதப்பத்தி கவலபடமா எழுதுங்க
(இந்த வருச்சமவது நா புரிஞ்சுக்க முயற்சிபன்னுரன்:)>
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
நன்றி

KARTHIK said...

அய்யனார் ஏனோ தெரியவில்லை(மற்ற வலைப்பூக்களில் ) எல்லோரும் உங்க கவிதை பத்தியே பேசுறாங்க.
அதப்பத்தி கவலபடமா எழுதுங்க
(இந்த வருச்சமவது நா புரிஞ்சுக்க முயற்சிபன்னுரன்:)>
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
நன்றி

Unknown said...

நண்பருக்கு புத்தாண்டு வாழ்த்துகள்.

seethag said...

புத்தாண்டு வாழ்த்துக்கள் அய்யனார்.

என்னைபோன்ற சிலர்,சூழ்னிலயால் மிகவும் தனிமையாய் உணர்ந்தவர்களுக்கு வலைப்பூவும் நல்ல இலக்கிய எண்ணம் உள்ளவர்களுடய பதிவுகளும் அன்றாட வாழ்க்கயை ஒரு விதத்தில் மென்மையாக்கியதை நன்றியுடன் தெரிவித்துகொள்கிறேன்.

ப்ளாக் என்றாலே ஒருவித மெகலோ மேனியா என்று நினைத்த எனக்கு ப்ளாகுகளே துணைஆனபோது மனது மிகவும் சந்தோஷப்பட்டது.
அதும் அமீரகத்திலிருந்து உங்கள் பாசக்கார குடும்பம் நிறையவே ரசனயுடன் செயல் படுவதைப்பார்க்கும்போது பொறாமை கூட ஏற்ப்படுகிறது அய்யனார்.

உங்கள் அனைவருக்கும் நன்றியுடன் கூடிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

Boston Bala said...

புத்தாண்டு வாழ்த்துகள்

Ayyanar Viswanath said...

தம்பி,ஆடுமாடு,கோபி, குசும்பர்,கார்த்திக்,சந்துரு,சீதா மற்றும் பாபா

அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

குசும்பன் said...

///குட்டையான இவர்களை ஜீன்ஸ் இல்லாமல் பார்த்தால் நீங்கள் பாக்கியவான்கள்.///

ச்சீ ஆபாசமாக பேசாத அய்ஸ்:))), பொது இடத்தில் அப்படி எல்லாம் பார்க்க முடியுமா? அப்படி பார்கனும் என்றால் ஜூமைரா பீச் தான் போகனும். போன வாரம் பார்த்தேன். அப்ப நான் பாக்கியவானா?

Featured Post

King Pele : அஞ்சலி

சனிக்கிழமை மாலை பயல்கள் ப்ரஸீலின் கால்பந்தாட்ட வீரரான பெலே வின் இழப்பைக் குறித்துக் கேட்டார்கள். அவர் எனக்கு முந்தைய தலைமுறை என்பதால் அவர் வ...