Tuesday, November 27, 2007

நான் சொன்னா கேட்பீங்களா கவிஞர்களே?


நேற்று மாலை பூட்டைத் திறந்து உள்நுழைகையில்
குவியல்களாய் சிதறிக்கிடந்தன தரையில்
புத்தக அலமாரியிலிருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டிருக்குமோவென
அஞ்சி நோக்குகையில் இறுகப் பூட்டப்பட்டிருந்தது அலமாரி.
கொஞ்சம் குனிந்து உற்றுப்பார்த்தேன் இப்படி இவைகள் கிடந்தன

அன்பே சுயம் பிரதி நெஞ்சு வெளி
காதல் தேடல் துயரம் மரம்
மழை யோனி இருப்பு வலி துடிக்குது ப றவை
குடை அவஸ்தை வாழ்வு சாம்பல்
விழி நாப்கின் நான் உதிரப்பெருக்கு கசிவு பிறழ்வு நீ புணர்ச்சி
இமை வசீகரம் திரிபு பின்னிரவு
புன்னகை நீட்சி புலம்பல் நதி
உதடு மீட்சி உயிர் இயங்குதல் பெருவெளி
முத்தம் ஈரம் குறி போதை
இடை தனிமை முலை
சடை பிரிவு வேதனை அவ நம்பிக்கை
ரோஜா பிரியம க ட்டுடைத்தல் இதயம்
மல்லிகை ஈரம் பிம்பம்


நான் வந்ததை உணர்ந்ததும் விழித்துக்கொண்டவை
ஒரே சமயத்தில் பேச ஆரம்பிக்க அவை கூச்சல்களாய் முடிந்தது ஒவ்வொன்றாய் முன் வந்து சொல்லும்படி வலியுறுத்தினேன்
அன்பே காதல் இமை மழை குடை மிகவும் இளைத்துபோயிருந்ததன
"பேனாவை கையிலெடுக்கும் எல்லா பேமானியும் எங்களைத்தான் எழுதறானுங்க 'த்தூ' "என ஒரே குரலில் சொல்லிற்று
சுயல் தேடல் தனிமை இருப்பு அவஸ்தை ஓரணியாய் வந்தன
மிகவும் நைந்துபோன அவைகள்
சன்னமான குரலில் புலம்பிற்று'விட்டுடச் சொல்லுங்க எங்கள'
வலி துயரம் வேதனை பிரிவு துயரம் தாங்கொணா கோபத்திலிருந்தன
"எங்கள் எழுதும் எல்லா நாதாறிகளும் பலருடன் சல்லாபித்து மூக்கு முட்ட குடிச்சிட்டு வாழ்வ கொண்டாடுதுங்க எழுத ஆரம்பிச்சா மட்டும் எங்கள இழுக்குதுங்க மசிர்" என்றன.
குறி முலை யோனி உதிரப்பெருக்கு எல்லாம் ஒன்றுசேர்ந்து உரக்கச் சொல்லியதை சபையில் பகிர விருப்பமில்லை
வெளி பெருவெளி மரம் பறவை பிறழ்வு பிரதி திரிபு கட்டுடைத்தல் கொஞ்சம் பூசினாற்போலிருந்தன
அவைகள் சத்தமாய் சொல்லிற்று
"இந்த பிந பொறம்போக்குங்க கட்டுடைக்கும் களவாணிகள பொத்திட்டு இருக்க சொல்லுங்க"
சத்தமில்லாமல் அவ்வப்போது புன்னகைத்தபடி கேட்டு முடித்தேன்

ஆகட்டும் பார்க்கலாம் சொல்லிப்பார்க்கிறேன் என
தேர்ந்த அரசியல்வாதியின்
சாயல்களோடு அவைகளை அனுப்பி
கதவை
சாத்தினேன்
நான் சொன்னா கேட்பீங்களா கவிஞர்களே?

11 comments:

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

வார்த்தைகள் வார்த்தைகள் வார்த்தைகள்
நாலாபுறமும் வார்த்தைகள்
சொல்லில் சிக்காது
சொல்லாமல் தீராது

(எழுதியவர் பெயர் மறந்து விட்டது)

இராம்/Raam said...

அய்ஸ்'ன் தனித்துவமான எழுத்து.... :)

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

காற்றின் கிளையேறி
திகுதிகுவென பரவின
எரியும் பிரச்சனைகள்

நாடி ஒடுங்கிற்று வார்த்தை பூதம்
(தேவதச்சன்)

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

வார்தைகளால் பயம் காட்டுவது ரொம்ப லேசு என்ற புதுமைப் பித்தன் நினைவிற்கு வருகிறார்.

ஆனால் என்க்கென்னவோ நகுலனின் இந்த வரி ரொம்பப் பிடிக்கும் : சாதாரண வார்த்தைகளில் பல தளச் சிக்கல்.

Anonymous said...

//குறி முலை யோனி உதிரப்பெருக்கு எல்லாம் ஒன்றுசேர்ந்து உரக்கச் சொல்லியதை சபையில் பகிர விருப்பமில்லை//

ஏனுங்கோ, அதையும் சபையில் போட்டுடைத்து கட்டுடைக்க வேண்டியதுதானே? அதில் மட்டும் ஏன் மறைவு?

manjoorraja said...

இதை தான் நானும் கேட்கிறேன் கவிஞரே (?!)

நான் சொன்னால் கேட்பீங்களா என்ன?

கோபிநாத் said...

\\"நான் சொன்னா கேட்பீங்களா கவிஞர்களே?"\\

இதை தான் நானும் நேத்து போனில் சொன்னோன்..;)

Ayyanar Viswanath said...

பகிர்தல்களுக்கு நன்றி சுந்தர்

டேங்க்ஸ் ராம்

மஞ்சூர் இது எனக்கும்தான்
கவனிக்க
உள்நுழைகையில்
கதவை சாத்தினேன்

chandru / RVC said...

வேறென்னத்த எழுத? இதுக எல்லாம் சேர்ந்துதான நம்ம வாழ்க்கையை சுவாரசியமாக்குது. எல்லாம் ஒரு நன்றி விசுவாசம்தான் :)

Anonymous said...

தனித்துவம் னு சொல்லி இப்படி அப்பட்டமா எழுதினால் உனக்கு என்ன கிடைக்கிறது? வெறுமை தானே மிஞ்சும் னு நேத்து உன் இந்த பதிவைப் பார்த்து நினைத்தேன்..
//சூழல்களை மாற்றுவது,வழக்கத்திற்கு எதிரான செயல்களை செய்வது போன்றவற்றின் மூலமாக என் அபத்தங்களை/இருப்பை பழிவாங்கிக் கொள்கிறேன்.//
னு தெளிவா அடுத்த பதிவில் பதில் சொல்லிட்ட..
ம்ம்ம்ம் good.

Anonymous said...

please suggest me a topic or concept to write a poem otherthan the mentioned things in ur poem...

Featured Post

King Pele : அஞ்சலி

சனிக்கிழமை மாலை பயல்கள் ப்ரஸீலின் கால்பந்தாட்ட வீரரான பெலே வின் இழப்பைக் குறித்துக் கேட்டார்கள். அவர் எனக்கு முந்தைய தலைமுறை என்பதால் அவர் வ...