Tuesday, November 6, 2007

உலகத்தின் வழிகாட்டி/கடவுள் #1 மற்றும் அவர் மனைவி


உலகத்தின் வழிகாட்டி/கடவுள் #1 க்கும் எனக்குமான உரையாடல்

மனம் பிறழ்தலென்பது உண்மைக்கு அருகாமையிலிருத்தல்..
மனம் பிறழ்ந்தோர் / பைத்தியக்காரர்கள் என்போர் உண்மையை கண்டறிந்து தவிர்த்தோர்...
சுவாமி,ஞானி,உள்விழிப்பு பெற்றவன்,என்லைட்டண்டு புத்தன் இவர்களனைவரும் உண்மையை கண்டறிந்ததாய் பிரச்சாரம் செய்துகொள்ளும் நாளைய ஆபத்தான உலகினுக்கான விதைகள்..
சமகாலத்தில் பெருத்துப்போய் இருக்கும் அத்தனை புராண, இதிகாச, மத, சாதீய பிரச்சினைகளுக்கும் அடிப்படை காரணம் இந்த உண்மையை கண்டறிந்ததாய் சொல்லிக்கொள்ளும் புத்தர்களே.. இதிலிருந்து வாழ்வை மீட்டெடுக்க நீ செய்ய வேண்டியதெல்லாம் மனத்தை தொலைப்பது அல்லது மனம் பிறழ்வது அல்லது பைத்தியமாவது..

மனதை எப்படித் தொலைப்பது?'நான்'ஐ எப்படி விடுவது? கிடைக்கும் எந்த ஒரு நிமிடத்தையும் இந்த கணினியில் என் பெயரைத்தான் தேடிக்கொண்டிருக்கிறேன்.இந்த உலகினை இரட்சிக்க வந்த பின்நவீன கடவுளாகத்தான் என்னை வெகு காலமாய் கற்பனை செய்து வைத்திருக்கிறேன்.அத்தோடு ஆண்/பெண் பித்தும் சேர்ந்து விட்டிருக்கிறது.புடைக்கும் சமயங்களிலல்லாது எப்போதைக்குமான நுழைத்தல்களை சாத்தியப்படுத்துவதற்கான ஆதார தேடுதல்களையும் கொண்டிருக்கும் இந்நாட்களில் எப்படித் தொலைப்பது?

உனது உடலின் மையப்புள்ளி எது?சிந்தனைகளின் தோற்றுவாய் எது? உன்னை எப்போதும் இயங்கச் செய்வது எது? நீ ஒரு இயங்கும் விலங்கு என எப்படி உனக்குத் தெரியும்?உன் உடலின் ஏதோ ஒரு பாகத்தில் தான் அதற்கான விடை இருக்கிறது.. உன் உடலின் ஏதோ ஒரு பாகம்தான் இது அத்தனைக்குமான தூண்டல்... மனம்..ஆம்!.. இம்மனம் தான் எல்லாவற்றிர்குமான தோற்றுவாய்.. அதன் ஊற்றுக்கண் எங்கிருக்கிறது என எவனுக்கும் தெரியாது...உடலின் எப்பாகத்தில் அது மறைக்கப்பட்டிருக்கிறதென எவனும் இங்கு கண்டறியவில்லை.ஆனால் அதை அடக்கிவிட்டதாய் கொக்கரிக்கிறார்கள்.. அரைவேக்காடுகள்!..அரசியல்வாதிகளுக்கும் சாமியார்களுக்கும் மட்டுமே தெரிந்த அந்த ரகசியத்தை இப்போது உனக்கு சொல்லுகிறேன்.. அது இருப்பது சிறுமூளையில்!!.. அதை அடக்க மது அல்லது போதை வஸ்துக்களை அதிகப்படியாய் பயன்படுத்தினாலே போதுமானது.. அல்லது மிக அதிக வீர்யமுள்ள போதை வஸ்துக்களை மிகக் குறைவாய் உபயோகப் படுத்தினாலும் நலமே...

உலகத்தின் வழிகாட்டி/கடவுள் #1ன் மனைவிக்கும் எனக்குமான உரையாடல்

உனக்கொன்று தெரியுமா?சம காலத்தில் சாமியார்களாய் வேசம் போடும் அத்தனை பேடிகளும் தடை செய்யப்பட்ட போதை மருந்துகளை உபயோகிப்பவர்கள்தாம். ஒரு பொது இடத்தில் தலைவனொருவன் தன் சகாக்களுக்கு பிரசாதத்தை வழங்குவது போல் ஒபியத்தை வழங்கிக்கொண்டிருக்கிறான் பார்! அனைத்து அடிவருடிகளும் நக்கிக் குடித்து மனத்தை தொலைக்கிறார்கள்.அவர்களுக்குத் தெரிந்திருக்கிறது உண்மைக்கான வழி! இருப்பினும் தலைவர்கள் எப்போதும் தலைவர்களாகவே இருக்கும் பொருட்டு பெருந்திரளாய் குழுமியிருக்கும் தன் தொண்டர்களை எப்படி பயன்படுத்துகிறார்கள் என்பதைப் பார்! சுன்னத் செய்யப்பட்டவர்களை கொல்லுமாறு ஏவி விடுகிறார்கள். சிலைகளை தலையில் சுமந்தபடி தெருவெங்கிலும் ஊர்வலம் வரும்படியாயும், முக்காடிட்ட பெண்களை வன்புணரும்படியுமாயும் கட்டளைகளை இடுகிறார்கள்.உண்மைக்கு இத்தனை சுலபமான வழியை ஒருபோதும் கேட்டிராத ஆட்டு மந்தைகள் எதிர்பார்த்ததிற்கதிகமாய் கொல்கிறார்கள்.உண்மையை கண்டுகொள்ளும் பேராவலில் கிழிக்கப்படும் யோனிகளின் சப்தம் தூங்கும் கடவுளர்களை எழுப்புவதற்கான இசை என மகிழ்ந்து இன்னும் வேகமாய் சப்தத்தை ஏற்படுத்துகிறார்கள்.

அந்நிய மதக் குழந்தைகளை பூமிக்கு வரவிடாதபடி பார்த்து கொண்டால் (வயிற்றிலேயே குத்தி விடுபவன் வீரன்)உண்மையை வெகு சீக்கிரம் கண்டறியலாம் என்றொரு திரியை கிள்ளிப்போடுகிறான் போதை மிகுந்த தலைவனொருவன்.சாதாரண போதையிலிருந்தவனும் கிளர்ந்துபோய் போதையற்றவர்களுடன் சேர்ந்து குத்திக் கொல்கிறான் கர்ப்பிணிகளையும் கருக்களையும்..வீதிகளெங்கிலும் வழிந்தோடும் ரத்தத்தில் குளித்து மகிழ்கிறது கடவுளர்களின் சிலைகள்.

நீ பைத்தியமாகவேண்டுமா? அரசியல்வாதியாக வேண்டுமா? சாமியாராக வேண்டுமா? எல்லாவற்றிர்கும் ஆதாரம் இந்த போதை வஸ்துதான்.சிறுமூளையை ஆக்ரமிக்கும் இதன் மிகப்பரந்த நீர் வெளி கடும் இன்பத்தினாலானது.போதையின் அளவுகள்தான் இந்த முப்பரிமாண தோற்றத்தை உனக்கு வழங்குகிறது.அளவுகளை நீயே தேர்ந்தெடுத்துக்கொள் வடிவங்கள் தானாய் வந்துவிடும்

இல்லை எனக்கிந்த உணமையை தெரிந்து கொள்ள வேண்டாம் நான் இப்படியே இருந்து விட்டுப்போகிறேன்.கொல்பவர்களின் கூட்டத்தில்லையெனினும் சிலை சுமப்பவர்களில் ஒருவனாய் இருந்துவிட்டுப்போகிறேன்.

கடவுளும் கடவுள் மனைவியும் விடைபெற்றுப்போன போன ஒரு பின்னிரவில் தூக்கம் வர வேண்டி என் குளியலறையின் கதவை அடைக்கிறேன் இயலாமைகளோடும் ஆற்றாமைகளோடும் கசப்புகளோடும் கழிவிரக்கங்களோடும்....

14 comments:

Baby Pavan said...

அட அட அட, நான் பெசரது (என் மழலை யாருக்கும் புரியாது) மாதிரியெ உங்க பதிவும் இருக்கு அண்ணா....

Baby Pavan said...

சூப்பர் , எப்படி ?

Baby Pavan said...

என்னது எல்லாரும் பயந்து ஓடிட்டாங்களா, அப்ப நானா தான் வந்து மாட்டிகிட்டனா....

நாகை சிவா said...

பாத்துண்ணனே.. மனசு தான் கெட்டு போச்சு.. உடம்பை ஆச்சும் பாத்துக்கோங்க..

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

மிக அருமையான பதிவு, வாழ்த்துக்கள் அய்யனார்.

/கிழிக்கப்படும் யோனிகளின் சப்தம் தூங்கும் கடவுளர்களை எழுப்புவதற்கான இசை என மகிழ்ந்து இன்னும் வேகமாய் சப்தத்தை ஏற்படுத்துகிறார்கள்/

/வீதிகளெங்கிலும் வழிந்தோடும் ரத்தத்தில் குளித்து மகிழ்கிறது கடவுளர்களின் சிலைகள்./

மேலே உள்ள வரிகளைப் படிக்கையில் மனது பதறுகிறது.

/அளவுகளை நீயே தேர்ந்தெடுத்துக்கொள் வடிவங்கள் தானாய் வந்துவிடும்/

என்ன லாவ‌க‌மான‌ வ‌ரி.!!

/கொல்பவர்களின் கூட்டத்தில்லையெனினும் சிலை சுமப்பவர்களில் ஒருவனாய் இருந்துவிட்டுப்போகிறேன். /

ஏன்.??

கிருத்திகா ஸ்ரீதர் said...

hi.. I have been watching your post for quite some time. Good command over language..deep thinking .... i too get a feeling some time that could all this be a transilation from some source.. any how good to read keep going.. but watch your foot the last post give me a feeling like as if you try to transform to someone else rather you.. Wish you all the best will be in touch

Ayyanar Viswanath said...

பவன்
பதிவர்கள் குழந்தைகள் அவதாரம் எடுப்பதுதான் இப்போதைய ட்ரெண்டா :)

புலி மனசு உடம்பு ரெண்டும் வல்லிய சுகம் கேட்டோ :)

Ayyanar Viswanath said...

சுந்தர்
/மேலே உள்ள வரிகளைப் படிக்கையில் மனது பதறுகிறது./
அவை வெறும் வரிகள் மட்டுமில்லை தெகல்கா அறிக்கை.என்னுடைய கோபத்தினை ஆற்றாமையை எனக்குரித்தான மொழியில் சொல்லியிருக்கிறேன் யாரேனும் ஒருவர் தடம்பிடித்தாலும் மகிழ்வே

Ayyanar Viswanath said...

hi krithi

thanks for your comment.i fear to say the transformation is 'with in'if it so why i'm writing here :)

chandru / RVC said...

சமூக அவலங்களுக்கெதிரான தங்களது பின்நவீனத்துவ முரசு ஓங்கி ஒலிக்கட்டும். வாழ்த்துக்கள். :)

ரசிகன் said...

ரொம்பவே பீல் பண்ணிட்டீங்களே.. ஜய்யனாரே..
உங்களுக்கும் ,குடும்பத்தாருக்கும். எனது அன்பு கலந்த தீபாவளி நல்வாழ்த்துக்கள்.
என்றும் அன்புடன் உங்கள் ரசிகன்.

thiru said...

அய்யனார்,

//அந்நிய மதக் குழந்தைகளை பூமிக்கு வரவிடாதபடி பார்த்து கொண்டால் (வயிற்றிலேயே குத்தி விடுபவன் வீரன்)உண்மையை வெகு சீக்கிரம் கண்டறியலாம் என்றொரு திரியை கிள்ளிப்போடுகிறான் போதை மிகுந்த தலைவனொருவன்.சாதாரண போதையிலிருந்தவனும் கிளர்ந்துபோய் போதையற்றவர்களுடன் சேர்ந்து குத்திக் கொல்கிறான் கர்ப்பிணிகளையும் கருக்களையும்..வீதிகளெங்கிலும் வழிந்தோடும் ரத்தத்தில் குளித்து மகிழ்கிறது கடவுளர்களின் சிலைகள்.//

குஜராத் மதவெறி படுகொலை அரசியலை உணர்த்தும் வரிகள். தெகல்கா அறிக்கையை படிக்கும் மனிதாபிமானமுள்ள எவரும் 'மதம்', 'அடிப்படைவாதம்', 'இந்துத்துவம்' பற்றி மீள்பரிசீலனை செய்வர்.

சிந்திக்கவிடாமல் போதையில் வைத்திருப்பது தானே மதசரக்கு வியாபாரிகளின் நோக்கம். 'எனது கடையில் இருப்பது தான் நல்ல சரக்கு! இங்கே வாருங்கள்' 'இல்லையில்லை எனது கடையில் தான்' என அழைப்பது என்னவோ 'சரக்கடிக்க' தானே.

ம்ம்ம்ம் எப்போது தான் போதையிலிருந்தும், தூக்கத்திலிருந்தும் எழுமோ..

ஜமாலன் said...

அருமையான பதிவு.

Ayyanar Viswanath said...

rvc,ரசிகன்
நன்றி

திரு பகிர்வுக்கு நன்றி

நன்றி ஜமாலன்

Featured Post

King Pele : அஞ்சலி

சனிக்கிழமை மாலை பயல்கள் ப்ரஸீலின் கால்பந்தாட்ட வீரரான பெலே வின் இழப்பைக் குறித்துக் கேட்டார்கள். அவர் எனக்கு முந்தைய தலைமுறை என்பதால் அவர் வ...