Monday, October 29, 2007

நேற்று பெய்த மழைநேற்று மழையில் தெப்பலாக நனைந்து வந்ததாய் சொன்னாய்

கடைசியாய் நான் நனைந்த நாளை நினைவுக்குள்
கொண்டு வர முயன்று தோற்றேன்
இந்த ஊரில் போன வருடம் டிசம்பர் மாத இறுதியில்
இரண்டு தினங்கள் வெகு குறைவாய் மழை பெய்தது
இந்த ஊர் மழைக்கு ஏற்றதுமில்லை..

மழையில் நனைந்த என் வீட்டு முற்றத்துப் புங்கைமரம்
கொல்லை முருங்கை, மா, கொய்யா, எலுமிச்சை மரங்களை
நினைத்துக் கொண்டேன்..
மழை ஓய்ந்தபின் மலையில் மேகக்கூட்டங்கள்
சற்று ஓய்வெடுத்து
மெல்ல விலகும் காட்சி அற்புதமானது..
என் அம்மாவின் தேநீரோடு மாடியில் தேங்கியிருக்கும் மழைநீரில்
கால்கள் துழாவியபடி நடந்த காட்சியும் வந்து போனது..
அவள் என்னறைக்கு வரும்போதெல்லாம் பின்னாலேயே மழையை
அழைத்து வந்த தினங்களை நினைத்துக்கொண்டேன்..
ஒரு நள்ளிரவில் பெருத்த சப்தங்களோடு
பூமியை நிறைத்த பெருமழையில்
இருவரும் வெகுநேரம் கட்டிக்கொண்டு அழுததும்
நினைவில் வந்து போனது..

நீ மழைபெய்ததாய் என்னிடம் சொல்லியிருக்க வேண்டாம்

10 comments:

நாகை சிவா said...

//நீ மழைபெய்ததாய் என்னிடம் சொல்லியிருக்க வேண்டாம்//

ஆமாம்.. சொல்லி இருக்க வேணாம் :)

நானும் கடைசியாய் முழுக்க நனைந்ததை நினைத்து பாக்குறேன். :)

Unknown said...

சூப்பர்!!

பின்னூட்டம் யாருக்கும் போடுவதில்லைன்னு இருந்தேன்
ஆனா இதுக்கு முடியல

நல்லா இருக்கு

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

படிக்கும் போது எனக்கும் பல மழைக் கால நினைவுகளைக் கிளறி விட்டது. இது நல்ல கவிதை (என் பார்வையில்) என்று சொல்ல முடியாவிட்டாலும், எழுத்தின் வெற்றி தானே.

தொடர்ந்து உங்களை வாசித்து வருகிறேன். சொக்க வைக்கும் உங்கள் மொழி நடை பிடித்து இருக்கிறது.

கோபிநாத் said...

\\இந்த ஊரில் போன வருடம் டிசம்பர் மாத இறுதியில்
இரண்டு தினங்கள் வெகு குறைவாய் மழை பெய்தது
இந்த ஊர் மழைக்கு ஏற்றதுமில்லை..\\

நீங்களே சொல்லிட்டிங்க...;)

Unknown said...

நல்லாயிருக்குய்யா கவிதை !!

ஜமாலன் said...

குளிர்காலம் இனி கவிஞர்களுக்கு கொண்டாட்டம்தான்...

மழை சொல்லவே வேணாம். அதை அனுபவிக்காதவன்தான உண்டா...

மழைபற்றி பதிவுகளில் கவிதை மழை பொழிய ஆரம்பித்துவிட்டது. துவக்க அட்டக்காரர் தமிழ்நதி. தற்போது அடித்து விளையாடுபவர் அய்யனார்.

அசத்துங்க.. மழைநீர் பற்றி நானும் ஒரு கவிதையை தூசி தட்டி பதிவில் போடுவதுதான் என் முதல் வேளை.

கவிதை மென்மையான உணர்வுகளையும் ஞாபகங்களையும் துழாவிச்செல்கிறது..

Ayyanar Viswanath said...

புலி பாத்ரூம்ல குளிச்சத சொல்லலியே :)

மகி எங்கய்யா இருக்க?

சுந்தர்
தொடர் வாசிப்பிற்கு நன்றி

Ayyanar Viswanath said...

கோபி ஏன் நீ சொல்லமாட்டியா

தேவ் ஆர்குட் இந்த நாட்ல கிடையாதுங்க..அதும் இப்ப பாஸ் வெர்டு பயத்தால நீங்க அனுப்பின ஆர்குட் இன்விடேசனை கிளிக் பண்ணல..:)

ஜமாலன்

குளிர்காலம்/மழைக்காலம் அப்படிங்கிறதுக்கு பதிலா கவிதைக் காலம் னு மாத்திடலாமா :)

Anonymous said...

விகடனில் தங்களுடைய வலைப்பூவைப் பற்றி படித்து விட்டு இங்கு வந்தேன். மனதை கொள்ளை கொண்டது இந்த கவிதை. அருமை நண்பரே.

Aruna said...

சில நனைதல்கள் கொஞ்சம் கஷ்டப் படுத்தும்தான்......அழகிய கவிதை...
அன்புடன் அருணா

Featured Post

King Pele : அஞ்சலி

சனிக்கிழமை மாலை பயல்கள் ப்ரஸீலின் கால்பந்தாட்ட வீரரான பெலே வின் இழப்பைக் குறித்துக் கேட்டார்கள். அவர் எனக்கு முந்தைய தலைமுறை என்பதால் அவர் வ...