Friday, August 3, 2007

அன்புள்ள சுகுணாதிவாகர்அ மார்க்ஸ் உங்க நண்பரா
கட்டுரைகள் தொகுப்பா வந்திருக்கா?
ஆமாம், ஏன்?
யாருடைய கட்டுரைகளைக் கேட்கறீங்க?
தீராநதியில் படிக்கிறதோட சரி
அ மார்க்ஸ்
தனி தொகுப்பு ஏதாவது வந்திருக்கா
சிரிப்புதான் வருது, அந்த கிழட்டுபாடு ஒரு 75 புத்தகம் எழுதியிருப்பாரு.
:)
மன்னிச்சிரு நண்பா
எனக்கந்த ஞானம் கம்மி
தேடி படிக்கனும்
நீதான் காரல்மார்க்ஸையே யாருன்னு கேட்ட ஆளாச்சே((-
-------------- ××----------------
புதன் கிழமை இரவு 1 மணிக்கு வந்திருந்த குறுந்தகவலை வியாழக்கிழமை காலை ஆறு மணிக்குத்தான் பார்த்தேன்அதிர்ந்துபோய் கதிரை எழுப்பியதில் அவனுக்கும் விவரங்கள் தெரியவில்லை.ஜெஸிலாவின் கணவர் ரியாஸ் தொலைபேசி உறுதி செய்தார். நாள்முழுக்க கண் முன் அந்தக் குழந்தைகளின் பிம்பம் வந்து வந்து போய் கொண்டிருந்தது.தான் இருக்கும் இடத்தை எப்போதுமே ககலப்பாக வைத்திருக்கும் தனித்தன்மை கொண்ட ஆசிப் இந்த இழப்பை எப்படித் தாங்கிக்கொள்வார் எனத் தெரியவில்லை.ஆசிப்பின் குரலில் இருந்த உருக்கம் மனசை அசைத்துப்போட்டதென துக்கத்தில் கொஞ்சத்தை மடலில் அனுப்பியிருந்த மதிக்கும் தொலைபேசியில் கதறி அழுத ஜெஸிலாவிற்க்கும் பதில் சொல்ல மறுத்து எப்போதுமே மிதந்தலையும் என் நேசத்திற்க்குரிய சொற்கள் அசிங்கமாய் ஓடி ஒளிந்துகொண்டன.
-------------- ××----------------
பணம் என்கிற மிகச் சக்திவாய்ந்ததாய் சொல்லப்படுகிற வஸ்துவை வெற்றுத்தாள்களாக கருதத் துவங்கினால் துபாய் வாழ்வு கொண்டாட்டம்தான்.புனிதங்களை கட்டுடைத்ததில் பெரும்பங்கு நடனப்பெண்களைத்தான் போய் சேர வேண்டும்.ஒருமுலை விலக்கியோ மேல் துப்பட்டா இல்லாமலோ மதுவை கண்ணாடி குவளைகளில் வார்க்கும் பெண்கள் அனைவரும் உயிருள்ள பின்நவீன பிரதிகள்.தடுக்கி விழுந்தால் தென்னிந்திய மதுவிடுதிகள் நிறைந்த ஊர் இது.பனோரமா பாரில் நடனமாடும் ராதிகா பெரும்பாலும் வெள்ளை நிற உடைகளைத்தான் அணிந்திருப்பாள்.திறந்த முதுகும் பிதுங்கிய மார்புமாய் உயிர் உருகி நடனமாடும் அவள் தேவதை/மோகினி சாயலில் இருப்பாள்.ராசா ராசா உன்ன வச்சிருக்கென் நெஞ்சிலே ரோசா பூவப்போல என அவள் உருகும்போது அரைபோதையில் வாலியையும் வைரமுத்துவையும் கொண்டாடத் தோணுகிறது.
-------------- ××----------------
சுகுணாவின் கடிதங்களைப் போல ஹேமாவின் கடிதங்களும் குழந்தைத்தனமானதுதான்.அவள் எழுதிய 47 கடிதங்களிலும் உடம்பை பார்த்துக்கொள்ளுங்கள் நன்றாக சாப்பிடவும் என்பதைத் தவிர்த்து மேலதிகமாய் ஒன்றுமிருக்காது.எப்போது உங்களுக்கு கடிதமெழுத ஆரம்பித்தாலும் கிண்டலடிப்பீர்களே என பயந்து பயந்துதான் எழுதுகிறேன் ஆனால் இதற்க்கு மேல் எழுதத் தோணவில்லை என்பாள்.ஆனால் அவளின் கடைசிக் கடிதம் மட்டும் 13 பக்கங்களிலிருந்தது.சுகுணா,ஹேமா போல எப்போதும் வாழும் ஒருத்தி / ஒருவன் எல்லோர் மனதிலும் இருக்ககூடும்.
-------------- ××----------------
யார் கடிதமெழுதினாலும் பத்திரமாய் வைத்துக்கொள்வது இது வரை பழக்கமாக இருக்கிறது பத்தாம் வகுப்பு முடித்த கையோடு லீவிற்க்கு ஊருக்கு போன ராஜேஷின் கடிதம் கூட இன்னும் பத்திரமாய் வைத்திருக்கிறேன்.25 பைசா அஞ்சலட்டையில் சாய்வான எழுத்துக்களில என் அப்பா எனக்கெழுதிய ஒரே ஒரு கடிதத்தை அவ்வப்போது புன்னகையோடு பார்த்துக்கொள்வதுண்டு.
-------------- ××----------------
புகழேந்தி வாத்தியார் இங்கிலாந்தில் படித்தவர் என்பது நம்புவதற்க்கு சற்று கடினமான விதயம்.நல்ல கருப்பும் பெரிய தொந்தியுமாய் ஒரு உருவம்.ஆனால் அவரைப்போல் ஆங்கிலம் பேச ஒருவரும் இல்லை.அல்லது நான் பார்த்ததில்லை.மனிதர் ஆங்கிலச் சிறுகதைகள் வரும் இரண்டாம் தாளை எடுக்கும்போது உருகிப்போக வைப்பார்.குறிப்பாய் எ செல்பிஷ் ஜெய்ண்ட் என்றொரு கதை குழந்தைகளை தனது தோட்டத்தில் விளையாட அணுமதிக்காத ஆஜானுபாகான ஒருவனின் கதையை அவர் சொல்லிய விதம் இன்னும் மறக்க முடியாது.தன் உடல் முழுதும் அடுத்தவர்களின் காயங்களை சுமந்திருப்பதாய் ஒரு சிறுமி சொல்லும் கட்டத்தில் அவர் உட்பட அனைவரும் உருகிப்போனோம்.கடுகடுவென முகம் அவருக்கு ஆல் பெலோஸ் கமிங் ஃப்ரம் காடு என எல்லரையும் திட்டுவார்.ஒருமுறை டு யு நோ வாட் ஈஸ் ரேபிட் என என் பக்கத்திலிருந்தவனை கேட்டதற்க்கு அவன் சாதாரணமாய் எழுந்து எலி சார் என்றான்.
-------------- ××----------------
ஓசூரில் வாழ்ந்தவரை ஆதவன் தீட்சண்யா,க.சீ சிவக்குமார்,போப்பு, பா வெங்கடேசன் போன்ற செறிவான ஆட்களை ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் பார்ப்பேன்.குறிஞ்சி திரைப்பட இயக்கத்தின் திரைப்படங்களை ஓரமாய் உட்கார்ந்து பார்த்துக்கொண்டிருந்த நபர்களில் நானும் ஒருவனாய் இருந்திருக்கிறேன்.எப்போதும் வாயைத் திறந்திராமல் வந்து போன சுவட்டை ரெஜிஸ்டர்களில் மட்டும் குறித்துவிட்டு ஓடிப்போய்விடுவேன்.அவர்களின் கலந்துரையாடல்கள் பெரிய உலகத்தின் சன்னல்களாக இருந்தது.ஒருவேளை ரமேஷின் தம்பி என்றால் யாருக்கேனும் அபூர்வமாய் நினைவிற்க்கு வரலாம்.இந்த முறை விடுமுறைக்கு போகும்போது நிறைய கேள்விகளுடன் செல்ல உத்தேசம்.

-------------- ××----------------
கேலி,கிண்டல்,எள்ளல்,கலகம்,திமிர் இவற்றோடு உன் அன்பும் கட்டற்றதாய்த்தான் இருக்குமென நம்புகிறேன்.நான் ஓரினச்சேர்க்கையாளனாய் இல்லாதிருப்பது சற்று வருத்தமாய் இருக்கிறது.அப்படி இருந்திருந்தால் சித்தார்த் மற்றும் இளங்கோவோடு உன்னையும் முத்தமிட்டிருக்கலாம்.
-------------- ××----------------

12 comments:

கோபிநாத் said...

அய்யோ!

அய்யனார்!

தாவு தீருது!

ஒரு இழவும் புரியல!!

கதிரவன் said...

இது என்ன உங்க டைரிக் குறிப்புக்களா ?

TBCD said...

மாப்பு....மாப்பு...நான் ஆவுறேன் எஸ்கேப்பு

Anonymous said...

ஆதவனுக்கு அடுத்த முறை மெயில் அனுப்பும்போது ஹேமா ஓசூரில் இருக்கின்றாவா என்று கேட்டுப்பார்க்கவா, அய்யனார் :-)?

Mookku Sundar said...

இது மாதிரி எழுதலாம் என நான் நினைத்ததுண்டு. டைரி எழுதி, அதை பொதுவில் வைக்கும் 'தில்' இல்லாததால் விட்டு விட்டேன்.

உங்களுக்கு என் வாழ்த்துக்கள்.

காட்டாறு said...

அய்யானாரூ... என்ன சொல்ல வர்றீங்க?

Ayyanar Viswanath said...

கோபி கதிரவன் மற்றும் டிபிசிடி நன்றி :)

டிசே ஐ.ஜி ய எனக்கு தெரியும்..ஆனா :))

Ayyanar Viswanath said...

சுந்தர் மிக்க நன்றி

காட்டாறு சும்மா லுலுலூஉ ஃப்ரியா விடுங்க :)

Unknown said...

//தொலைபேசியில் கதறி அழுத ஜெஸிலாவிற்க்கும்//
இளவயதில் பறிகொடுத்த ஆசிப் அவர்களுக்காக மனது மிகவும் வருத்தப்படுகிறது. ஆனால்
பெண்கள் மிகவும் மனம் இளகியவர்கள். கதறி அழும் அளவுக்கு ஒரு நல்ல தோழியை இழந்த சோகமாயிருக்கும்.

//பணம் என்கிற மிகச் சக்திவாய்ந்ததாய் சொல்லப்படுகிற வஸ்துவை வெற்றுத்தாள்களாக கருதத் துவங்கினால்......//
நாங்கெல்லாம் துபாய் பக்கமே வந்திருக்க மாட்டம்ல

//ஆனால் அவளின் கடைசிக் கடிதம் மட்டும் 13 பக்கங்களிலிருந்தது//
காதல் தோல்வியோ?

//லீவிற்க்கு ஊருக்கு போன ராஜேஷின் கடிதம் கூட இன்னும் பத்திரமாய் வைத்திருக்கிறேன்//
ஒரு அறையையே அதற்காக ஒதுக்கி இருக்கணுமே.
அறை சுத்தம் செய்த அம்மா இதுவரை தூக்கிப்போடவில்லையா?
எழுதாத பக்கங்களை தபால் எழுத பயன்படுத்த, என் அம்மா என்னுடைய ப்ராஜெக்ட் ரிப்போர்டையே கிழித்து போட்டு விட்டு....,

//ஆல் பெலோஸ் கமிங் ஃப்ரம் காடு என எல்லரையும் திட்டுவார்.//
பையன்களுக்கு புரியணும்கிறதுக்காக கடைசியில் காடு சேர்த்திருப்பார்.

//அவர்களின் கலந்துரையாடல்கள் பெரிய உலகத்தின் சன்னல்களாக இருந்தது//
அவங்கதான் இப்படி உங்களை கெடுத்தவங்கன்னு சொல்றீங்க!

//சித்தார்த் மற்றும் இளங்கோவோடு உன்னையும் முத்தமிட்டிருக்கலாம்//
டி.ஆர் சொன்னாராம் எஸ்.பி.பி. மட்டும் பொம்பளயாயிருந்தால் நான்தான் கட்டிக்குவேன்னு.
நல்ல நண்பர்களாய் எப்போதும் திகழ வாழ்த்துக்கள.

Ayyanar Viswanath said...

நன்றி சுல்தான்

குமரன் said...

என்னப்பா? கடிதம் என்ற வடிவத்தை கட்டு உடைக்கிறீர்களோ?

உங்களை சும்மா விடப் போவதில்லை. இன்னும் ஒரு வாரம் டைரி குறிப்புகளை கொலைவெறியோடு எழுதி, நானும் வெளியிடுவேன்.

காத்திரு அய்யனார். லக! லக! லக!

மங்கை said...

//பணம் என்கிற மிகச் சக்திவாய்ந்ததாய் சொல்லப்படுகிற வஸ்துவை வெற்றுத்தாள்களாக கருதத் துவங்கினால் துபாய் வாழ்வு கொண்டாட்டம்தான்//

வெற்றுத்தாள்களாக கருதினால்..நாம நம்ம ஊர்லேயே இருந்திருப்பமே..
எனக்கு இப்படித்தோனுது...

நீங்க அசராதீங்க அய்யனாரே...:-))
எழுதுங்க...

Featured Post

King Pele : அஞ்சலி

சனிக்கிழமை மாலை பயல்கள் ப்ரஸீலின் கால்பந்தாட்ட வீரரான பெலே வின் இழப்பைக் குறித்துக் கேட்டார்கள். அவர் எனக்கு முந்தைய தலைமுறை என்பதால் அவர் வ...