Saturday, July 14, 2007

வலைப்பதிவர் சந்திப்பு - பகிர்ந்துகொள்ளப்பட்ட ரகசியங்கள்

இடம்:அலைன் ஃபன் சிட்டி
மொத்தமாய் ஏமார்ந்தவர்:மின்னுது மின்னல்

சிதறிய முத்துக்கள்

எட்டு பதிவர்கள் மொத்தமாய் ஒரே இடத்தில் சந்தித்ததால் ஏனைய பதிவர்களை பற்றிய கொசிப்புகள் சற்று அதிகமாகவே இருந்தது. சென்ஷியும் அபிஅப்பாவும் பதிவர்கள் பற்றிய ரகசியத் தகவல்களை அள்ளித் தெளித்தனர்.அரிய பல தகவல்களில் சிலவற்றை இங்கே தருகிறேன்

பாலபாரதி ஜெயா டிவி யில் வந்ததை யாரும் நம்பவில்லை.வெகுநேரம் போராடி அந்த உண்மையை நிரூபிக்க வேண்டியிருந்தது.
பாலபாரதி ங்கொய்யால என்ற வார்த்தையை அடிக்கடி பயன்படுத்துவார்
ஓசை செல்லாவின் நச்சென்று ஒரு வலைப்பூவின் உள்ளடக்கமும் அதன் கீழ் கொடுக்கப்பட்டுள்ள பயோனீர் இன் ப்ளாக் என்ற வார்த்தையும் பரவாலாய் எல்லாராலும் நகைக்கப்பட்டது
ராஜா வனஜ் மிகவும் கோபக்கார இளைஞர்
பொன்ஸிற்க்கு இன்னும் திருமணம் ஆகவில்லை
லக்ஷ்மியின் சொந்த ஊர் தஞ்சாவூர் அவர் அப்பா தமிழாசியர்
வெட்டிப்பயல் இந்தியா வந்த தகவலை நெருக்கமான நண்பர்களுக்கு தெரிவிக்கவில்லை.
நாமக்கல் சிபி மிகவும் பெரிய ஆள்
லக்கிலுக்கிற்கு வயது 29 தான்
செந்தழல் ரவி அதிமுக ஆதரவாளர்
வரவணையன் மதிமுக ஆதரவாளர்
குழலி பாமக ஆதரவாளர்
உண்மைத் தமிழன் மிகவும் நல்லவர்.அப்பிராணி அங்கங்கே சென்று எசகுபிசகாய் பின்னூட்டம் போட்டு மாட்டிக்கொளவதை தவிர்த்து பார்த்தால் அவர் ஒரு நடுநிலைவாதி
காயத்ரி நான் வெஜ் நன்றாக சாப்பிடுவார்.
மகேந்திரன் சட்னிவடை இல்லை

மேலும் பாசக்கார குடும்பங்களை பற்றிய ரகசியங்கள் பரவலாய் பேசிக்கொள்ளப்பட்டது குடும்ப உறுப்பினர் என்கிற முறையில் ரகசியங்களை காப்பாற்ற வேண்டிய கட்டாயத்தினால் அவற்றைத் தவிர்க்கிறேன்

நிறைவேற்றப்பட்ட தீர்மாணங்கள்

வலையில் கும்மி கூடாதென்கிற கருத்து வெகு நாட்களாய் சொல்லப்பட்டு வருகிறது.இதையெல்லாம் தீர்மாணிக்க இவர்கள் யார் அவர்கள் எழுதுவது செறிவானது நாங்கள் எழுதுவது செறிவில்லை என்றெல்லாம் எப்படி தீர்மாணிக்க முடியும்?அவரவர்க்கு எது தெரியுமோ அதை எழுதுவோம்

சந்தேகித்தல் அல்லது கேள்வி எழுப்பல்

பின்நவீனவத்துவத்தின் பயன் என்ன?எதற்க்காய் இவ்வளவு அசிங்கமான வார்த்தைகளை பயன்படுத்தவேண்டும்?

திராவிட தமிழர்கள் என்று சொல்லிக்கொள்பவர்கள் தான் சார்ந்த கட்சிகளை புகழ்ந்து கொண்டிருப்பதை தவிர திராவிடம் என்பது குறித்து எதைப்பற்றியும் எழுதுவதில்லை.யாரையேனும் திட்டிக்கொண்டிருப்பது அல்லது சாதி வசை பாடுவதை மட்டும்தான் வெகுகாலமாய் செய்து கொண்டு வருகிறார்கள்

கம்யூனிச வலைப்பதிவுகள் அதன் சித்தாந்தம் குறித்து எவ்வித விளக்கங்களையும் தருவதில்லை ஆபாச வார்த்தைகளால் திட்டிக்கொள்வதை தவிர வேரெதுவும் இல்லை

பாமரன் மாலன் போன்றோர் சாதித்தது என்ன?பாமரன் வெகு காலமாய் தமிழ்சினிமாவை வசைபாடிக்கொண்டிருப்பதை தவிர்த்து வேறென்ன செய்துவிட்டார்?குமுதம் போன்ற மலிவு ஊடகங்கள் பரபரப்பாய் விற்பனையாவதற்க்கு துணை போவதை தவிர்த்து வேறெதுவும் செய்துவிடவில்லை

மக இக ,கம்யூனிசம் போன்றவை பிரம்மாண்டமாய் வளர்ந்து நிற்கும் பெரும்பான்மைகளை எதிர்கொள்வது எப்படி சாத்தியம். மக இக குழுச்சண்டைகள் அதன் வளர்ச்சியை தடுக்குமே தவிர வேறெந்த ஒன்றையும் சாதித்து விட இயலாது.

வளர்த்தெடுத்தல்

புதிய பதிவர்களை ஊக்குவித்து வலைப்பதிவை எல்லாரிடத்தும் கொண்டு சேர்க்க வேண்டும்.

சாதனை

லிவிங்க் ஸ்மைல் வித்யாவின் வலைப்பதிவினூடாய் திருநங்கை என்கிற பிம்பம் குறித்தான தயக்கங்களை குறைந்தபட்சம் வலைப்பதிவர்களிடமிருந்து நீக்கியது.

சந்திப்பு கொண்டாட்டங்களை வெகு விரிவாய் எல்லோரும் எழுதிவிட்டிருந்தாலும் பனிச்சறுக்கு விளையாட்டும் பல்வேறு ராட்டினங்களில் 45 டிகிரி 90 டிகிரி பின் 180 டிகிரியில் அனைவரையும் களேபறப்படுத்திய மின்னுது மின்னல் மறக்க முடியாத அட்டகாசமான அனுபத்தை ஏற்படுத்தி தந்தார்.6 மணி நேரம் தொடர்ச்சியாய் சிரித்து,கத்தி மகிழ்ந்து மூக்கு விடைக்க சாப்பிட்டு பொறிபறக்க பேசி சென்ற வெள்ளி ஒரு மறக்க முடியாத விடுமுறை நாளாக இருந்தது

பி.கு:சந்தேகித்தல் என்ற தலைப்பில் எழுதப்பட்டவை குறித்து யாருக்கேனும் கோபமிருப்பின் அவர்கள் என்னை தொடர்பு கொள்ளலாம்

35 comments:

ALIF AHAMED said...

நீங்க சாப்பிடும் முன்பு பேசியவை ரெக்கார்ட் செய்ய பட்டு உள்ளது என்பதை மறந்துட்டீங்க...!!!!

அபி அப்பா said...

அய்யனார்! நீ தான்யா மனுசன்!

முத்துகுமரன் said...

//திராவிட தமிழர்கள் என்று சொல்லிக்கொள்பவர்கள் தான் சார்ந்த கட்சிகளை புகழ்ந்து கொண்டிருப்பதை தவிர திராவிடம் என்பது குறித்து எதைப்பற்றியும் எழுதுவதில்லை.யாரையேனும் திட்டிக்கொண்டிருப்பது அல்லது சாதி வசை பாடுவதை மட்டும்தான் வெகுகாலமாய் செய்து கொண்டு வருகிறார்கள்//

தவறான குற்றச்சாட்டு அய்யனார். திராவிட தமிழர் குழுமத்தில் இணைந்திருக்கும் அனைவரும் தங்களாலான பங்களிப்பைச் செய்துவருகிறார்கள். சந்தேகமிருப்பின் இதுவரை இடப்பட்டிருக்கும் பதிவுகளை வாசித்துப் பாருங்கள். அவரவருக்கு கிடைக்கும் நேரத்தைப் பொறுத்துதான் இணையத்தில் இயங்க முடியும் என்பதை உணர்ந்திருப்பீர்களென்று நம்புகிறேன். திராவிடர் தமிழர் குழுமம் அது ஏற்படுத்திய நோக்கத்தின் அடிப்படையிலே இயங்கிவருகிறது. இணைந்திருக்கும் நண்பர்களின் தனிப்பட்ட கருத்து சுதந்திரத்தை அது தடை செய்வதில்லை. மேற்கூறிய பதில் திருப்தி தரவில்லை எனில் நீங்கள் உங்கள் கேள்விகளை விரிவாக எழுப்பலாம். அதற்கும் பதில் தர தயாரகவே இருக்கிறோம். ஆக்கப்ப்பூர்வமான விமர்சனங்களை/விவாதங்களை திராவிடர் தமிழர் குழுமம் வரவேற்கிறது.

நன்றி

திராவிட தமிழர் சார்பாக
முத்துகுமரன்

Ayyanar Viswanath said...

முத்துக்குமரன்
முதலில் இந்த கருத்து சந்தேகித்தல் அல்லது கேள்வி எழுப்புதல் என்கிற தலைப்பின்கீழ்தான் எழுந்துள்ளது எனவே இக்கருத்து குற்றச்சாட்டு இல்லை.மேலும் திராவிடத் தமிழர்கள் குழுமம் மட்டுமல்லாது ஆரியத்திற்க்கு எதிராய் குரல்கொடுப்பவர்களை எல்லாரையும் திராவிடத் தமிழர்கள் எனப் பொருள் கொள்ளவும்.ஆரிய எதிர்ப்பு என்பது பரவலாய் சாத்தியமாகி இருக்கிறது அதிகாரங்களுக்கு எதிரான குரல்கள் வலுப்பெற்றிருப்பது உண்மை.அதே சமயம் திராவிடத்தின் மற்ற கூறுகள் சென்று சேர்க்கப்படவில்லை.நேரமில்லை என்ற விளக்கம் சரிதான் என்றாலும் வசைபாடும் பதிவிற்க்கு பதிலாய் தொன்மையை வரலாற்றை இன்னும் செறிவாய் மக்களிடம் கொண்டு சேர்க்கலாமே.

Ayyanar Viswanath said...

மின்னல் ரெக்கார்டிங்க் லாம் எப்பயா பண்ண?அடப்பாவிகளா உங்கள நம்பி ஒரு கருத்து சொல்ல முடியலியே :(

அபிஅப்பா இது வாழ்த்தா வசையா :)

Anonymous said...

என்னாது, உண்மைத்தமிழன் அப்பாவியா?
சொல்லவேயில்லே.

Jazeela said...

இவ்வளவு பெரிய தலைப்புக்கு பதிலா 'கழுவிக் குடிக்க ஒரு சந்திப்பு'ன்னு வச்சிருக்கலாம். இதில் எல்லாமே அடங்கிவிடும் ;-)

முத்துகுமரன் said...

//அதே சமயம் திராவிடத்தின் மற்ற கூறுகள் சென்று சேர்க்கப்படவில்லை.நேரமில்லை என்ற விளக்கம் சரிதான் என்றாலும் வசைபாடும் பதிவிற்க்கு பதிலாய் தொன்மையை வரலாற்றை இன்னும் செறிவாய் மக்களிடம் கொண்டு சேர்க்கலாமே.//

நிச்சியமாக! அதற்கான முயற்சிகள் தொடரும்.

நாமக்கல் சிபி said...

//நாமக்கல் சிபி மிகவும் பெரிய ஆள்//

:))

Oru 250 Cm Uyaram Iruppena?

Ayyanar Viswanath said...

ஜெஸிலா தப்பா புரிஞ்சிக்கிட்டீங்க தெளிவான சந்திப்பாகத்தான் இருந்தது

நன்றி முத்து

Ayyanar Viswanath said...

சிபி
நேரில் பார்த்த சென்ஷி யத்தான் கேக்கனும் :)

நாமக்கல் சிபி said...

//நேரில் பார்த்த சென்ஷி யத்தான் கேக்கனும் :)
//

Enna Senshi ennai neril parthara? Eppo?

(Then Yaro enakku Proxy kuduthu Sendhiya meet pani irukkaangannu Ninaikkuren)

Anonymous said...

மொத்தமாக பல ஆப்புகளை ஒரே பதிவில் வைக்க எப்படி கத்துக்கொண்டீர்களோ ?

உள்ள நுழையும்போதே - கூர்மையா....சர்ர்ர்ர்ர்ர்னு

பொன்ஸ்~~Poorna said...

பின்நவீனவத்துவத்தின் பயன் என்ன?

- உங்களைப் பார்த்து நான் கேட்கணும்னு நெனச்சது...

Anonymous said...

நாமக்கல் சிபி பெரிய ஆள் எப்படி வெயிட்டிலா உயரத்திலா

ILA (a) இளா said...

தமிழ்மணத்துல இப்பவெல்லாம் பிராமணீயம்/பிராமிணர்கள் எதிர்ப்பு வாதம் அதிகமாக இருக்குங்கிறது உண்மைதான். அதைத்தான் செல்வேந்திரனும் சொல்றாரு, நானும் வழிமொழிகிறேன்.

//யாரையேனும் திட்டிக்கொண்டிருப்பது அல்லது சாதி வசை பாடுவதை மட்டும்தான் வெகுகாலமாய் செய்து கொண்டு வருகிறார்கள்//
இந்த கருத்துக்கு நான் உடன்படுகிறேன். அதுவுமில்லாமல் நான் சந்தித்த அனைத்து பதிவர்களின் மனக்கசப்பும் இதுதான்.

Anonymous said...

//பொன்ஸ்~~Poorna said...
பின்நவீனவத்துவத்தின் பயன் என்ன?
//
மன வக்கிரத்தை தீர்த்துக்கொள்வது.

Anonymous said...

எங்க ஆயா சட்டிய கானும்.

Anonymous said...

அய்யனாரே கலக்கல் பதிவு.

தைரியமா பல கேள்விகளை முன் வைத்திருக்கிறீர்கள். மிக நல்ல விவாதத்திற்கு இது இட்டுச்செல்லும் என்று நம்புகிறேன்.

//நாமக்கல் சிபி மிகவும் பெரிய ஆள்//

இதை நான் வழிமிழிகிறேன்.

//பின்நவீனவத்துவத்தின் பயன் என்ன?எதற்க்காய் இவ்வளவு அசிங்கமான வார்த்தைகளை பயன்படுத்தவேண்டும்?//

இதற்கான பதில் இந்த முறையாவது தெரிந்து விடும் என நினைக்கிறேன்.

Ayyanar Viswanath said...

ரவி,நன்றி

பொன்ஸ் நிச்சயம் ஒரு விரிவான இடுகையை எதிர்பார்க்கலாம்..விரைவில் எழுதுகிறேன்

அனானி
நாமக்கல்லாரை நான் நேரில் பார்த்ததில்லையே :(
கேள்விப்பட்டதோடு சரி

Ayyanar Viswanath said...

இளா நன்றி

அதுவும்தான் அனானி

ரவி..கிர்ர்ர்ர்ர்ர்ர்

Ayyanar Viswanath said...

நந்தா நன்றி அதுக்கு பதில் நாந்தான் சொல்லனும்
:)
விரைவில் சொல்றேன்

Santhosh said...

அய்ஸ் பல நல்ல கேள்விகளை கேட்டு இருக்கீங்க. பார்க்கலாம் மக்கள் என்ன சொல்கிறார்கள் என்று.

குசும்பன் said...

ஜெஸிலா said...
இவ்வளவு பெரிய தலைப்புக்கு பதிலா 'கழுவிக் குடிக்க ஒரு சந்திப்பு'ன்னு வச்சிருக்கலாம். இதில் எல்லாமே அடங்கிவிடும் ;-)

தவறு அப்படி ஏதும் நடக்கவில்லை.

லிவிங் ஸ்மைல் said...

// பி.கு:சந்தேகித்தல் என்ற தலைப்பில் எழுதப்பட்டவை குறித்து யாருக்கேனும் கோபமிருப்பின் அவர்கள் என்னை தொடர்பு கொள்ளலாம் //


ஏன்ப்பா நான் ரொம்ப நல்ல பொண்ணுங்கற சந்தேகம் யாருமே வரலையா?

Ayyanar Viswanath said...

நன்றி சந்தோஷ்

உங்க படம் பயமா இருக்கு :)

குசும்பா அதில ஒரு வருத்தம் எனக்கு

Ayyanar Viswanath said...

வித்யா :)
சந்தேகமா அப்படியெதுவும் இல்ல நீங்க ரொம்ப நல்லவங்க

உண்மைத்தமிழன் said...

//உண்மைத் தமிழன் மிகவும் நல்லவர். அப்பிராணி. அங்கங்கே சென்று எசகுபிசகாய் பின்னூட்டம் போட்டு மாட்டிக் கொள்வதை தவிர்த்து பார்த்தால் அவர் ஒரு நடுநிலைவாதி.//

சந்தோஷம்..

அனைவருக்கும் மிக்க நன்றி..

வாழ்க வளமுடன்..!

Ayyanar Viswanath said...

உண்மைத்தமிழன் உடம்பு ஏதாவது சரியில்லையா 1 வாரமா எந்த பதிவையும் காணோமே

thiagu1973 said...

அய்யனார்,

கம்யீனிசம் குறித்து அதன் சித்தாந்தம் குறித்து அடிப்படை தகவல்கள் கொண்ட வலைப்பூ அல்லது இணைய தளம் உருவாக்கும் பணியில் ஈடுபட்டுத்தான் இருக்கிறோம் என்ன பிரச்சனைன்னா நேரம் கிடைப்பதில்லை

இங்கே பார்வை இடுங்கள் :

http://marxistbase.blogspot.com

மேலும் தோழர்களிடம் வசைகளை குறைக்க சொல்லி அவ்வப்போது நானும் சண்டை போட்டுகொண்டுள்ளேன்

தங்களின் கருத்துக்களுக்கு நன்றி

Ayyanar Viswanath said...

சேகுவேரா!!
உங்கள் பெயர் எழுதப் பிடித்திருக்கிறது.மோட்டர்சைக்கிள் டையரீஸ் படம்பார்த்து அதற்க்குப்பின் சேகுவேராவைத் தேடிப்படித்தேன்.நீங்கள் கொடுத்த சுட்டிக்கும் பொறுமையான பதிலுக்கும் நன்றி.

Jazeela said...

நான் //'கழுவிக் குடிக்க ஒரு சந்திப்பு'ன்னு வச்சிருக்கலாம்//ன்னு சொன்னதுக்கு அது அர்த்தமில்லப்பா. எங்க ஊருல கழுவிக் குடிக்கிறதுன்னா 'புறம் பேசுறது' எத்தனை பேரை பற்றி பேசியிருக்கீங்கன்னு பட்டியல் பார்த்ததும் அப்படி சொன்னேன். அய்யனாரும் குசும்பனும் 'அந்த' நெனப்புலையே இருங்க ;-)

Anonymous said...

சிபியா?
பெரிய ஆள் என்றால்????

Ayyanar Viswanath said...

அப்படியா ஜெஸிலா :)நல்ல ஊர்தான் போங்க

தூயா
சிபிய தெரியாதா உங்களுக்கு
நல்லவர் வல்லவர் அன்பானவர் பண்பானவர் படிப்பாளி கவிஜர் இன்னும் சொல்லிட்டே போலாமே அதான் சுருக்கமா பெரிய ஆள்
:)

காயத்ரி சித்தார்த் said...

//காயத்ரி நான் வெஜ் நன்றாக சாப்பிடுவார்.//

அடப்பாவிகளா! இருங்க எங்கம்மாகிட்டயே சொல்றேன்.. :(

Featured Post

King Pele : அஞ்சலி

சனிக்கிழமை மாலை பயல்கள் ப்ரஸீலின் கால்பந்தாட்ட வீரரான பெலே வின் இழப்பைக் குறித்துக் கேட்டார்கள். அவர் எனக்கு முந்தைய தலைமுறை என்பதால் அவர் வ...