Sunday, March 11, 2007

ப்ரவேசம்

பின்னிரவில்
சத்தம் இல்லாது
பெய்துவிட்டுப் போன
மழைக்கு
காலையில்
வெள்ளையாய் மென்மையாய்
பூத்திருக்கிறது
பச்சரிசிக் காளான்கள்..

யாருமற்ற
எனதறைக்குள்
திடுமென நிகழ்ந்த
உன் ப்ரவேசத்தில்
உறைந்து போனது
எனது பகலும் அதன்
தொடர்ச்சியாய் இரவும்..

இன்னுமொரு
சிதைவிற்கான
ஆயத்தங்களெனினும்
பூத்திருப்பதும்
உறைந்து போவதும்
இருத்தலியத்தின்ஆதார விதிகள்.

5 comments:

மஞ்சூர் ராசா said...

பச்சரிசிக் காளான்கள்..


நல்லா இருக்கு.

கதிர் said...

மென்மையா இருக்கு கவிதை.

நிறைய எழுதுங்க!

தமிழ்நதி said...

கவிதையை வாசித்ததும் தெரிந்துவிடுகிறது நல்ல கவிதை என்று. ஆனால், 'நல்ல கவிதை'என்று சொல்லி விட்டுக் கடந்துபோய்விடுவதைத் தவிர கவிதை தரும் அனுபவத்தைப் பற்றி மேலதிகமாகச் சொல்ல ஒன்றுமேயில்லாது போவதேன்? தரமாக இருக்கிறது உங்கள் எழுத்து.

Ayyanar Viswanath said...

நன்றி மஞ்சூர் ராசா மற்றும் தம்பி

'நல்ல கவிதை'என்று சொல்லி விட்டுக் கடந்துபோய்விடுவதைத் தவிர கவிதை தரும் அனுபவத்தைப் பற்றி மேலதிகமாகச் சொல்ல ஒன்றுமேயில்லாது போவதேன்?

காட்சிப் படிமங்களை நான் நம்பாதது கூட ஒரு காரணமாய் இருக்கலாம்

மிகவும் நன்றி உங்கள் கருத்துகளுக்கு

காயத்ரி சித்தார்த் said...

//யாருமற்ற
எனதறைக்குள்
திடுமென நிகழ்ந்த
உன் ப்ரவேசத்தில்
உறைந்து போனது
எனது பகலும் அதன்
தொடர்ச்சியாய் இரவும்..
//

!!!

Featured Post

King Pele : அஞ்சலி

சனிக்கிழமை மாலை பயல்கள் ப்ரஸீலின் கால்பந்தாட்ட வீரரான பெலே வின் இழப்பைக் குறித்துக் கேட்டார்கள். அவர் எனக்கு முந்தைய தலைமுறை என்பதால் அவர் வ...